அனுமான் சட்டி
அனுமான் சட்டி (Hanuman Chatti) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்த யமுனோத்திரியிலிருந்து 13 கிமீ தொலைவில், இமயமலையில் 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இவ்விடத்தில் அனுமாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறு கோயில் உள்ளது. மேலும் இவ்விடத்தில் யமுனோத்திரி ஆறும், கங்கை ஆறும் சங்கமகம் ஆகிறது. இதனருகே அழகிய் தோதிலால் ஏரியும், 4,450 மீட்டர் உயரம் கொண்ட தர்வா கொடுமுடியும் உள்ளது.[1]
இதே பெயர் கொண்ட ஒரு அனுமார் கோயில், சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷி மடத்திலிருந்து 34 கிலோ மீட்டர் தொலைவிலும், பத்ரிநாத் கோயிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள்து.