தேசிய நெடுஞ்சாலை 58 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 58 (National Highway 58) (NH 58) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரத்தையும், (புதுதில்லி அருகே), உத்தராகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் மற்றும் உத்தராகண்ட்-திபெத் எல்லைக் கிராமமான மணா கிராமத்தை, இணைக்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 538 km (334 mi) ஆகும்.
தேசிய நெடுஞ்சாலை 58 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை எண் 58-இன் வரைபடம் (அடர் நீல நிறம்) | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 538 km (334 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | காசியாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா | |||
வடக்கு முடிவு: | பத்ரிநாத், உத்தராகண்ட் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம்: 165 km (103 mi) உத்தராகண்ட்: 373 km (232 mi) | |||
முதன்மை இலக்குகள்: | புதுதில்லி-காசியாபாத்-மீரட்-முசாபர்நகர்-அரித்துவார்-ரிஷிகேஷ்-முசாபர்நகர்-ஜோஷி மடம்பத்ரிநாத்-மணா கணவாய் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்நெடுஞ்சாலை புதுதில்லி அருகே உள்ள காசியாபாத்தில் துவங்கி, மோதிநகர், மீரட், முசாபர்நகர், ரூர்க்கி, அரித்துவார், ரிஷிகேஷ், தேவபிரயாகை, சிறிநகர், ருத்திரப்பிரயாகை, கர்ணபிரயாகை, நந்தபிரயாகை, விஷ்ணுபிரயாகை, சமோலி, ஜோஷி மடம், பத்ரிநாத் வழியாக மணா கிராமத்தில் முடிகிறது.
இந்நெடுஞ்சாலை உத்தரப்பிரதேச மாநிலத்தில் 165 கிலோ மீட்டர் நீளத்திலும், உத்தராகண்ட் மாநிலத்தில் 373 கிலோ மீட்டர் நீளத்திலும் செல்கிறது. [1]
தில்லி முதல் ரிஷிகேஷ் வரையிலான இந்நெடுஞ்சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தாலும், இமயமலையில் ரிஷிகேஷ் முதல் மணா கணவாய் வரையிலான இந்நெடுஞ்சாலையை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பாலும் பராமரிககப்படுகிறது.
தற்போது இந்நெடுஞ்சாலை மீரட், முசாபர்நகர் மற்றும் ரூர்க்கி நகரங்களைத் தொடாது, சுற்றுச்சாலை வழியாகச் செல்கிறது.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "National Highways and their lengths". National Highways Authority of India. Archived from the original on 10 February 2010. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
- ↑ https://timesofindia.indiatimes.com/india/nhai-cancels-contract-for-dehradun-highway-serves-notice-for-haridwar-stretch/articleshow/65464585.cms