ரிசிகேசு

(ரிஷிகேஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரிசிகேசு (Rishikesh, also spelt as Hrishikesh) என்பது இந்தியாவின், உத்தராகண்ட மாநிலத்தின், தேராதூன் மாவட்டத்தில், தேராதூனுக்கு அருகிலுள்ள ஒரு நகரம் ஆகும். இது கங்கை ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. மேலும் இது இந்துக்களின் புனித யாத்திரை நகரமாக உள்ளது. பண்டைய காலத்தில் முனிவர்கள் மற்றும் துறவிகள் ஞானத்தைத் தேடி இங்கு தியானம் செய்தனர்.[1][2] ஆற்றின் கரையில் ஏராளமான கோவில்களும், ஆசிரமங்களும் கட்டப்பட்டுள்ளன.[3]

ரிசிகேசு
Triambakeshwar Temple
Muni Ki Reti
Parmarth Niketan
[[File:|Janki Setu|149px]]
Evening aarti at Triveni Ghat
Shiva Statue on the bank of Ganges
Ram Jhula
இடமிருந்து வலம்; மேலிருந்து கீழாக: திரயம்பகேஷ்வரர் கோயில், முனி கி ரெட்டி, பரமார்த் நிகேதன், ஜான்கி சேது, திரிவேணி படித்துறையில் மாலை ஆரத்தி, கங்கைக் கரையில் உள்ள சிவன் சிலை, ராம் ஜூலா மற்றும் எய்ம்ஸ் ரிஷிகேஷ்
அடைபெயர்(கள்): Yoganagari
ரிசிகேசு is located in உத்தராகண்டம்
ரிசிகேசு
ரிசிகேசு
Location in Uttarakhand
ரிசிகேசு is located in இந்தியா
ரிசிகேசு
ரிசிகேசு
ரிசிகேசு (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°06′30″N 78°17′50″E / 30.10833°N 78.29722°E / 30.10833; 78.29722
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்தேராதூன்
Municipality1952
அரசு
 • நிர்வாகம்ரிசிகேசு மாநகராட்சி
 • மேயர்அணிதா மம்காய்ன் (பாஜக)
 • மாநகராட்சி ஆணையர்சி.சி. குர்வாண்ட்
பரப்பளவு
 • மொத்தம்11.5 km2 (4.4 sq mi)
ஏற்றம்
340 m (1,120 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,02,138 (நகர்ப்புற ஒருங்கிணைப்பு) 70,499 (City as per Census 2,011)
 • தரவரிசை7வது
 • அடர்த்தி8,851/km2 (22,920/sq mi)
 • Male
54,446
 • Female
47,672
மொழிகள்
 • அதாகாரப்பூர்வமாகஇந்தி
 • பிறகர்வாலி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அஞ்சல் குறியீட்டு எண்
249201
தொலைபேசி குறியீடு+91-135
வாகனப் பதிவுUK-14
எழுத்தறிவு (2011)86.86%
• ஆண்92.21%
• பெண்80.78%
• Rank2nd
Sex ratio (2011)875 / 1000

இது கர்வால் இமயமலையின் நுழைவாயில் மற்றும் உலகின் யோகா தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது.[1][4][5][6] இந்த நகரில் 1999 ஆம் ஆண்டு முதல் மார்ச் முதல் வாரத்தில் வருடாந்திர "சர்வதேச யோகா திருவிழா" நடக்கிறது.[7][8] ரிசிகேசு சைவ உணவுகள் மட்டுமே கிடைக்கும் மது இல்லாத நகரமாகும்.[9]

தேரி அணை இங்கிருந்து வெறும் 86 கிமீ (53 மைல்) தொலைவில் உள்ளது. மேலும் பிரபலமான யோகா இடமான உத்தரகாசி, கங்கோத்ரி செல்லும் வழியில் இங்கிருந்து 170 கிமீ (110 மைல்) தொலைவில் மேல்நோக்கி அமைந்துள்ளது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய நான்கு புனித தலங்களுக்குச் செல்வதற்கான தொடக்கப் புள்ளியாக ரிசிகேசு உள்ளது. ஹர்சில், சோப்தா, அவ்லி போன்ற இமயமலைச் சுற்றுலாத் தலங்களுக்கும், புகழ்பெற்ற கோடை மற்றும் குளிர்கால மலையேற்ற இடங்களான டோடிடல், தயாரா புக்யால், கேதர்கந்தா, ஹர் கி டன் போன்ற இடங்களுக்கும் பிரம்மாண்டமான இமயமலைக் காட்சிகளுக்கும் இது ஒரு தொடக்கப் புள்ளியாகும்.

2015 செப்டம்பரில், இந்திய ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா ரிசிகேசு மற்றும் அரித்துவார் ஆகியவை முதல் "இரட்டை தேசிய பாரம்பரிய நகரங்கள்" என்று அறிவித்தார்.[10] 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, ரிசிகேசின் மொத்த மக்கள் தொகை 322,825 ஆகும், இதில் நகரமும் அதனைச் சுற்றியுள்ள 93 கிராமங்களும் அடங்கும்.[11]

இந்த நகரம் ரிசிகேசு மாநகராட்சி மன்றம் மற்றும் வட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

சொற்பிறப்பியல்

தொகு

IAST : " Hṛṣīkeśa " ( சமக்கிருதம்: हृषीकेश ) என்ற பெயரானது விஷ்ணுவில் இருந்து பெறப்பட்ட பெயர். இதில் உள்ள ஹிருஷிகா என்பதன் பொருள் 'புலன்கள்' என்பதும், ஈஷா என்பது 'இறைவன்' என்று பொருள்படும் இந்த இரண்டு சொற்களைச் சேர்க்கும்போது 'புலன்களின் இறைவன்' என்ற பொருள் வருகிறது.[12][13] இந்த பெயர் விஷ்ணு ரைப்ய ரிசிக்கு[14] அவரது தவத்தின் விளைவாக, பகவான் ஹ்ரிஷிகேஷாவாக தோன்றியதை நினைவுபடுத்துகிறது.[15] கந்த புராணத்தின்படி, விஷ்ணு மாமரத்தின் கீழ் தோன்றியதால், இந்த பகுதி குப்ஜாம்ரக ( कुब्जाम्रक ) என்று அழைக்கப்படுகிறது.[13]

வரலாறு

தொகு

ரிசிகேசு கந்த புராணத்தில் குறிப்பிடப்படபட்டுள்ள "கேதார்கண்ட்" இன் ஒரு பகுதியாகும்.[16] இலங்கையின் அசுர மன்னனான இராவணனைக் கொன்றதற்காக இராமன் இங்கு தவம் செய்ததாக தொன்மங்கள் கூறுகின்றன. இராமனின் தம்பியான இலட்சுமணன், இரண்டு சணல் கயிறுகளைப் பயன்படுத்தி இங்கு கங்கையைக் கடந்ததாக கூறப்படுகிறது. அதன் நினைவாக தற்போது இந்த இடத்தில் இலட்சுமண ஜூலா (லக்ஷ்மண ஜூலா) என்ற பெயரிலான தொங்கு பாலம் உள்ளது.[17] 1889 இல் கட்டப்பட்ட 248 அடி நீளமுள்ள இரும்புக் கம்பிவட தொங்கு பாலம் 1924 இல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 1927 ஆம் ஆண்டில், தபோவன், தெஹ்ரி மற்றும் ஜோங்க், பவுரி கர்வால் மாவட்டங்களை இணைக்கும் தற்போதைய, வலுவான பாலம் ஐக்கிய மாகாணத்தின் பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டது. 1986 ஆம் ஆண்டு அருகிலுள்ள சிவானந்தா நகரில் ராம் ஜூலா என்ற பெயரிடப்பட்ட தொங்கு பாலம் கட்டப்பட்டது. கந்த புராணம் "இந்திரகுண்ட்" என்று குறிப்பிடும் இடத்தில் இந்திரன் சாபம் நீங்க புனித நீராடினார் என்பது ஐதீகம்.[சான்று தேவை]

இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான எச். ஜி. வால்டனால் எழுதப்பட்ட டெராடூன் விவரக் கையேட்டில், கீழ்வண்டவாறு குறிப்பிட்டுள்ளார்; "கங்கையின் வலது கரையில், ஆற்றை நோக்கிய உயரமான குன்றின் மீது அழகாக அமைந்துள்ளது. குறிப்பாக சாங் ஆற்றின் மீது புதிய பாலம் கட்டப்பட்டதிலிருந்து, ரைவாலாவிலிருந்து ரிசிகேசு வரையிலான யாத்ரீக சாலையின் மறுசீரமைப்பு முதல் இந்த இடம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது."[18]

இந்துக்களுக்கு மிகவும் புனிதமான ஆறுகளில் ஒன்றான கங்கை, ரிசிகேசு வழியாக இமயமலையின் சிவாலிக் மலைகளிலிருந்து வட இந்தியாவின் சமவெளி வரை பாய்கிறது.[3] சத்துருக்கனன் மந்திர், பரதன் மந்திர், இலட்சுமணன் மந்திர் ஆகியவை இதன் கரையோரங்களில் கட்டப்பட்டுள்ள கோயில்களாகும். இவை ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட பழமையான கோவில்கள் எனப்படுகின்றன. சத்ருக்னன் கோயில் ராம் ஜூலா தொங்கு பாலத்திற்கு அருகில் உள்ளது. அதே சமயம் இலட்சுமணன் கோயில் இலட்சுமணன் ஜூலா தொங்கு பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

சில யாத்ரீகர்கள் இமயமலைக்குச் செல்வதற்கு முன், ரிசிகேசில் இடத்தைத் தேடி ஓய்வெடுக்கும் இடமாகப் பயன்படுத்தினர் என்று வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.[18] நவீன சுற்றுலா நகரமாக மாறியதில் இருந்து, உள்ளூர் சந்தைகள் உள்ளூர் மற்றும் சமய கைவினைப்பொருட்கள் போன்ற பொருட்களை வணிகமயமாக்குவதில் இருந்து சேவை சார்ந்த சுற்றுலாத் துறையாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.[19]

நிலவியல்

தொகு
 
இலட்சுமன் ஜூலாவிற்கு அருகில் கங்கை ஆற்றங்கரையில் உள்ள கோவில்களின் காட்சி

ரிசிகேசின் அமைவிடம் 30°06′12″N 78°17′41″E / 30.103368°N 78.294754°E / 30.103368; 78.294754 ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 340 மீட்டர்கள் (1,120 அடி) ) உயரத்தில் உள்ளது.[20] இந்த நகரம் வட இந்திய மாநிலமான உத்தரகாண்டின் தெக்ரி கர்வால் பிராந்தியத்தில் அமைந்துள்ளது.

குறுகிய இமயமலைப் பள்ளத்தாக்குகள் வழியாக 249 கிமீ (155.343 மைல்)[21] பாய்ந்த பிறகு, கங்கை ரிசிகேசில் வெளிப்பட்டு, புனித யாத்திரை நகரமான அரித்வாரில் இருந்து கங்கை சமவெளியில் இறங்குகிறது.[22] கங்கை மாசுபட்டிருந்தாலும், ரிசிகேசில் உள்ள நீர் ஒப்பீட்டளவில் பாதிக்கப்படவில்லை, ஏனெனில் ஆற்றை முதன்மையாக மாசுபடுத்தும் இடங்கள் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ளன.[23]

கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் படி, இதன் காலநிலை ஈரப்பதமான துணை வெப்பமண்டலமாகும் (Cwa). இதன் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40°C (104°F) ஆகும்.[24] சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் ஆகும். மிகுந்த மழை பெய்யும் மாதமாக சூலை மாதம் 444 மிமீ. மழைபெய்யும். வறண்ட மாதமான நவம்பர் மாதத்தில் 10 மிமீ மழை பெய்யும். மே, சூன், சூலை, ஆகத்து மாதங்களில் அதிகபட்ச புற ஊதாச் சுட்டி 12 ஆகவும், சனவரி மற்றும் திசம்பர் மாதங்களில் குறைந்த புற ஊதாச் சுட்டி 4 ஆகவும் உள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ரிசிகேசு
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 17
(63)
22
(72)
29
(84)
35
(95)
39
(102)
38
(100)
33
(91)
32
(90)
32
(90)
30
(86)
25
(77)
20
(68)
29.3
(84.8)
தாழ் சராசரி °C (°F) 5
(41)
8
(46)
14
(57)
18
(64)
23
(73)
25
(77)
25
(77)
24
(75)
23
(73)
15
(59)
9
(48)
6
(43)
16.3
(61.3)
பொழிவு mm (inches) 51
(2.01)
33
(1.3)
34
(1.34)
9
(0.35)
20
(0.79)
94
(3.7)
482
(18.98)
495
(19.49)
219
(8.62)
76
(2.99)
9
(0.35)
17
(0.67)
1,539
(60.59)
சராசரி மழை நாட்கள் 3 2 3 1 2 7 15 16 8 2 0 1 60
ஆதாரம்: Weather2Travel[25]

குடிமை நிர்வாகம்

தொகு

ரிசிகேசு மாநகராட்சியாக தரம் உயர்த்தபட்ட 2018 ஆம் ஆண்டின்படி நகரானது 40 வார்டுகளாக பிரிக்கபட்டுள்ளது.[26] 2018 ஆண்டைய கணக்கின் போது ஒவ்வொரு வார்டிலும் 2,300-3,000 பேர் வசித்தனர். ரிசிகேசு அரித்வார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. மாநகராட்சியின் முதல் மற்றும் தற்போதைய மேயராக அனிதா மம்கெய்ன் உள்ளார்.[27] உள்ளூரில் நகர் ஆயுக்த் என்று பொதுவாக அழைக்கப்படும் தற்போதைய மாநகர ஆணையர் நரேந்திர சிங் ஆவார்.[28]

மக்கள்தொகையியல்

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ரிசிகேசின் மக்கள் தொகை 102,138 ஆகும். இதில் ஆண்கள் 54,466 (53%) பேரும், பெண்கள் 47,672 (47%) பேரும் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 86.86% ஆகும். இது தேசிய சராசரியான 74.04% ஐ விட கூடுதல் ஆகும்.[29]

சுற்றுலா

தொகு

2021-2022 நிதியாண்டில், இந்திய சுற்றுலா தலங்களில் ஒரு விடுதி அறைக்கு சராசரியாக ஒரு இரவுக்கு ₹10,042 என ரிசிகேசு அதிக வருவாயைப் பெற்றுள்ளது.[30]

உலகின் யோகா தலைநகரம்

தொகு
 
உலகெங்கிலும் இருந்து வந்துள்ள மாணவர்கள் ரிசிகேசில், 2015 இல் கங்கை ஆற்றங்கரையில் யோகா ஆசிரியர் பயிற்சி[31] பெறுகின்றனர்

1968 பிப்ரவரியில், ரிசிகேசில் உள்ள மகரிஷி மகேஷ் யோகியின் ஆசிரமத்திற்கு பீட்டில்ஸ் சென்றார். அவரது ஆழ்நிலை தியானத்தால் ஈர்க்கப்பட்டார்.[32] பீட்டில்ஸ் ஆசிரமத்தில் இருந்த காலத்தில் ஏராளமான பாடல்களை இயற்றினர், அவற்றில் பல இசைக்குழுக்களின் சுய-தலைப்பு இரட்டை ஆல்பத்தில் தோன்றியது. இது "ஒயிட் ஆல்பம்" என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கத்திய ரசிகர்கள் இதேபோன்ற அனுபவங்களைத் தேடி வந்தனர், இதன் விளைவாக புதிய யோகா மற்றும் தியான மையங்கள் உருவாகி, ரிசிகேசுக்கு "உலகின் யோகா தலைநகர்" என்ற பெயர் உருவாக காரணமாயிற்று. இங்கு பயிற்சிக்கு வரும் மேற்கத்தியர்கள் பலர் யோகா குருவாக ஆவதற்கு சான்றிதழுடன் கூடிய பயிற்சி பெறுகின்றனர்.[33]

ரிசிகேசில் உள்ள சிவானந்தா நகரில் சுவாமி சிவானந்தரால் நிறுவப்பட்ட சிவானந்த ஆசிரமம் மற்றும் தெய்வ நெறிக் கழகம் உள்ளது. ராம் ஜூலா மற்றும் லக்ஷ்மண் ஜூலா தொங்கு பாலங்களுக்கு அருகில், கிழக்கு ஆற்றங்கரையில் ஸ்வர்காஷ்ரம் அருகே கூடுதல் ஆசிரமங்களுடன் கூடிய கோயில்களுடன் உள்ளன. நீலகண்ட மகாதேவர் கோயில் ரிசிகேசில் இருந்து 28 கிமீ (17 மைல்) தொலைவில் காட்டில் அமைந்துள்ளது. அதே சமயம் வசிஷ்ட முனிவர் பயன்படுத்திய வசிஷ்ட குகை, இப்பகுதிக்கு வடக்கே 21 கிமீ (13 மைல்) தொலைவில் உள்ளது.[34][35]

திரிவேணி படித்துறையில் கங்கா ஆரத்தி

தொகு
 
திரிவேணி படித்துறையில் கங்கா ஆரத்தி

கங்கா ஆரத்தி (மகா ஆரத்தி என்றும் அழைக்கப்படுகிறது) திரிவேணி படித்துறை என்ற இடத்தில் அந்தி சாயும் நேரத்தில் செய்யப்படுகிறது.[36] இந்த பிரபலமான இந்து சமய சடங்குகளில் இசையை இசைப்பது மற்றும் ஆரத்தி காட்டுவது ஆகியவை அடங்கும்.

இலட்சுமன் ஜூலா

தொகு

இலட்சுமணன் (இராமனின் தம்பி) சணல் கயிற்றைக் கொண்டு கங்கையைக் கடந்த இடத்தில், 1939 ஆம் ஆண்டில், 137 மீ (450 அடி) நீளமுள்ள இரும்பு தொங்கு பாலத்தின் கட்டுமானத்தை ஆங்கிலேயர்கள் முடித்தனர்.[37]

சருக்குப் படகு பயணம்

தொகு
 
ரிசிகேசில் சருக்குப் படகு பயணம்

ரிசிகேசில் கிரேடு I-IV முதல் கங்கையில் பல சருக்குப் படகு பயண வசதிகளைக் கொண்டுள்ளது.[38]

பங்கீ ஜம்பிங்

தொகு

ரிசிகேசில் இந்தியாவின் மிக உயரமான பங்கீ ஜம்பிங் பகுதியானது 83 மீட்டர் உயர பாறை குன்றின் மீது உள்ளது. இதில் 100,000 இம் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குதித்து உள்ளனர்.[39]

பறக்கும் நரி

தொகு

ஆசியாவிலேயே மிக நீளமான பறக்கும் நரி (ஜிப்லைன் என்றும் அழைக்கப்படுகிறது) ரிசிகேசில் ஒரு கிமீ நீளத்திற்கு மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்வதாக உள்ளது.[39]

ஆற்றங்கரை முகாம்கள்

தொகு

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, "இந்த முகாம்கள் வன (பாதுகாப்பு) சட்டம் 1980 ஐ மீறுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986, நீர் (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகியவற்றையும் மீறுவதாகும். கழிவுநீரை வெளியேற்றி அதன் வழியாக கங்கையை மாசுபடுத்துதல், திடக்கழிவுகளை நேரடியாக வீசுதல் போன்றவை ஆற்று அமைப்பின் சுற்றுச்சூழல் அமைப்பை மோசமாக பாதிக்கிறது."

தற்காலிக இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்களில் போதிய கழிவுநீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல், வன விலங்குகளின் வாழ்விடத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், "வனப் பகுதியின் அமைதித் தன்மை போன்றவை பாதிக்கப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். [. . . ] முகாம்களில், முகாம் உரிமையாளர்கள் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் உணவு மற்றும் மது அருந்த அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் காலி போத்தல்கள், புட்டிகள், எஞ்சிய உணவு, எலும்புகள், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகளை முகாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விட்டுச் செல்கிறார்கள்."

 
ரிசிகேசில் உள்ள முகாம்

கௌடியாலா மற்றும் ரிஷிகேஷ் இடையே ஆற்றங்கரை முகாம்கள் பற்றிய 2008 ஆம் ஆண்டு ஆய்வில், கோவிந்த் பல்லப் பந்த் இமாலயன் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் - ஆர். கே. மைகுரி, நிஹால் ஃபாருகி, தருண் புதால் ஆகியோரின் ஆய்வில் வனவிலங்கு பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் விதிமுறைகள், குறிப்பாக கழிவு மேலாண்மைக்கான விதிமுறைகள் வழமையாக புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிட்டனர்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, வனம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சமூக நடவடிக்கை (SAFE) என்ற அரசு சாரா அமைப்பு தாக்கல் செய்த மனுவை 1, ஏப்ரல், 2015 அன்று விசாரித்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிவ்புரி மற்றும் ரிசிகேசு இடையே கங்கைக் கரையில் சறுக்குப்படகு பயண முகாம்கள் "ஒழுங்கற்ற முறையில்" நடத்தப்படுவது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்திய அரசு மற்றும் உத்தரகாண்ட் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மே மாதம் நடைபெறும் அடுத்த விசாரணை வரை எந்த புதிய முகாமுக்கும் அனுமதி வழங்க மாட்டோம் என்று தீர்ப்பாயத்தில் மாநில அரசு உறுதி அளித்துள்ளது.[40][41][42][43][44][45]

"தேசிய பசுமைத் தீர்ப்பாயம்" பிரச்சினையின் தீவிரத்தன்மையாக, நீதிபதி யுடி சால்வே தலைமையிலான அமர்வு ரிசிகேசில் இயங்கி வரும் சறுக்குப்படகு பயண முகாம்களுக்கு அனுமதி மறுத்துள்ளதுடன் , சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் (MoEF) மற்றும் உத்தரகாண்ட் அரசாங்கத்தை அவர்கள் பதில்களை தாக்கல் செய்யவில்லை என்று கடுமையாக சாடியது. வழக்கை விசாரித்து, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.[46]

மார்ச் மாதம் பன்னாட்டு யோகா திருவிழா (IYF).

தொகு
 
ரிசிகேசில் உள்ள பர்மார்த் நிகேதனில் பன்னாட்டு யோகா விழா

பன்னாட்டு யோகா திருவிழா ரிசிகேசில் உள்ள பர்மார்த் நிகேதன் ஆசிரமத்தில் 1999 ஆம் ஆண்டு துவக்கபட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சுற்றுலா பயணிகளை அழைத்து வரப்படுகின்றனர். ஒரு வார திருவிழாவில் 70 மணி நேரத்திற்கும் அதிகமான யோகா பயிற்சிகள் அளிக்கபடுகின்றன.[47]

நலவாழ்வு

தொகு

ரிசிகேசில் உள்ள எயிம்ஸ் மருத்துவமனையானது இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பிரதான் மந்திரி சுவஸ்த்ய சுரக்சா யோஜனா (PMSSY) திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆறு மருத்துவ நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் நோக்ககமானது நாட்டில் நலவாழ்வில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வது மற்றும் பட்டதாரி மருத்துவக் கல்வி மற்றும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியில் தன்னிறைவு அடைவது ஆகும்.[48][49]

இந்தியாவின் முதல் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி) மையம் ரிசிகேசில் 4 சூன் 2015 அன்று யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவ அமைச்சர் ஸ்ரீபாத் யாசோ நாயக் அவர்களால் இந்த மாற்று மருத்துவ முறைகளில் புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க திறக்கப்பட்டது.[50]

போக்குவரத்து

தொகு

தொடருந்து

தொகு

ரிசிகேசு மற்றும் யோக் நகரி ரிசிகேசு தொடருந்து நிலையங்கள் இந்த நகரத்திற்கான தொடருந்து சேவையானது ஓரளவு இந்திய இரயில்வே மூலம் வழங்குகப்படுகிறது. ரிசிகேசு மற்றும் கர்ணபிரயாகை இணைக்கும் புதிய தொடருந்து பாதை அமைக்கபட்டு வருகிறது.[51]

சாலை

தொகு

ரிசிகேசு மாநில தலைநகரான தேடூனுடன் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இது தேராடூன் நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது. ரிசிகேசு மற்றும் தில்லி, சண்டிகர் மற்றும் சிம்லா போன்ற முக்கிய வட இந்திய நகரங்களுக்கு இடையே தனியார் வாடகை தானுந்து சேவைகள் உள்ளன.

வானூர்தி

தொகு

ரிசிகேசின் அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் தேராடூன் வானூர்தி நிலையம் (15 கிமீ) மற்றும் புது தில்லி பன்னாட்டு வானூர்தி நிலையம் (240 கிமீ).

ஆன்மீக சூழலில் தாக்கம்

தொகு
 
ரிசிகேசில் கங்கை ஆற்றங்கரையில் சிறு உரையாடல்
 
2013 ஆம் ஆண்டு கங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பரமார்த் நிகேதன் அருகே உள்ள சிவன் சிலை

கஞ்சா மற்றும் மதுபானங்களை சட்டவிரோதமாக கொண்டுவரும் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாத் துறையினர் அழைத்து வருகின்றனர். அரை நிர்வாணமாக இருப்பது மற்றும் ஆற்றங்கரையோரங்களில் சிதறிக்கிடக்கும் போதைப் பொருட்கள் போன்ற நிகழ்வுகள் ரிசிகேசு தன் ஆன்மீக அடையாளத்தை இழந்து வருகிறது என்ற விமர்சனத்தை உருவாக்குகிறது.[52][53][54][55]

கர்வால் இமயமலையில் உள்ள தேவப்பிரயாகை, பாகீரதி, அலக்நந்தா ஆறுகள் கலந்த பிறகு கங்கை வரும் இடம் இது என்பதால் இங்கு கங்கை ஆற்றங்கரைக்கு ஆன்மீக மற்றும் சமய முக்கியத்துவம் உண்டு. துறவிகளும் யோகிகளும் பழங்காலத்திலிருந்தே கங்கைக் கரையில் தியானம் செய்து வருகின்றனர்.[56][57][58]

காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 DK Eyewitness Travel Guide: India.
  2. Singh, Ranjeni A (3 April 2014). "Rishikesh: Haven for yoga and wellness enthusiasts". தி எகனாமிக் டைம்ஸ். https://economictimes.indiatimes.com/magazines/travel/rishikesh-haven-for-yoga-and-wellness-enthusiasts/articleshow/33129900.cms. 
  3. 3.0 3.1 Alter, Stephen (2001). Sacred Waters: A Pilgrimage Up the Ganges River to the Source of Hindu Culture.
  4. Bijalwan, Himanshu (7 December 2022). "Yoga School - Yoga Capital". www.blisstripdestination.com/. Bliss Trip destination.
  5. Jha, Meenketan (27 August 2018). "5 Adventure Sports You Must Try in India". Outlook Traveller. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  6. "Rishikesh's identity as yoga capital to be maintained". 1 March 2015. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  7. Gusain, Raju (8 March 2018). "Rishikesh: Controversy-hit Parmarth Yoga fest ends". பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  8. "Yoga enthusiasts from across the globe flock to Rishikesh to be a part of this festival". 16 March 2019. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  9. Ramadurai, Charukesi (4 January 2018). "My Kind of Place: Rishikesh, India". பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  10. Sharma, Seema (19 August 2015). "Centre to declare Haridwar, Rishikesh national heritage cities". பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  11. "Rishikesh Population (2021/2022), Tehsil Village List in Dehradun, Uttarakhand".
  12. "हृषीकेश / hṛṣīkeśa". மானியர் வில்லியம்ஸ் Sanskrit-English Dictionary. 19 May 2014. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  13. 13.0 13.1 "Hrishikesh: Its Historical Significance". Rishikesh City. 2007. Archived from the original on 13 May 2008. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  14. Glossary of terms in Hinduism#R
  15. "Places of Tourist Interest in Rishikesh". டேராடூன் மாவட்டம். Archived from the original on 11 July 2006. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  16. "District Dehradun - A General Introduction". Dehradun District Institute of Education and Training. Archived from the original on 19 May 2007. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  17. "Lakshman Jhula Suspension Bridge Rishikesh - Visit Laxman Jhula Pul Rishikesh". www.euttaranchal.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  18. 18.0 18.1 Walton, H.G. (2016). The Gazetteer of Dehra Dun. (Reprint). Natraj Publishers. p. 261. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185019505.
  19. Norwegian University of Science and Technology (NTNU) (2015). "Investigating risk and resilience in Rishikesh". NTNU. பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.
  20. "Uttarakhand topographic map, elevation, relief". topographic-map.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  21. Ganga, a scientific study.
  22. "Ganges River | History, Location, Map, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  23. "Invigorating Rishikesh". http://www.newindianexpress.com/cities/bengaluru/Invigorating-Rishikesh/2014/12/11/article2565005.ece. 
  24. "Climate and average monthly weather in Rishīkesh (Uttarakhand), India". World Weather & Climate Information. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  25. "Rishikesh Climate and Weather Averages, India". Weather2Travel. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
  26. "Nagar Nigam of Kotdwar and Rishikesh" (PDF). Urban Development Directorate, Government of Uttarakhand. 6 April 2017. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
  27. 20 Nov, TNN |; 2018; Ist, 23:50. "BJP wins Rishikesh, Rudrapur mayor seats, likely to clinch Doon | Dehradun News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-16. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  28. "नाले के ऊपर अतिक्रमण, नौ दुकानदारों का काटा चालान". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
  29. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Census of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  30. Saurabh Sinha (Aug 18, 2022). "Rishikesh pips Udaipur in priciest hotel rooms: Data | Dehradun News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
  31. Bijalwan, Himanshu (3 January 2023). "Yoga Teacher Training in Rishikesh". www.mimamsayogshala.com/. Mimamsa Yogshala.
  32. Johanson, Mark (16 January 2019). "A river ride to Rishikesh: India's new adventure capital". பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  33. Maddox, Callie Batts (2014). "Studying at the source: Ashtanga yoga tourism and the search for authenticity in Mysore, India". Journal of Tourism and Cultural Change 13 (4): 330–343. doi:10.1080/14766825.2014.972410. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-6825. 
  34. Duttagupta, Samonway (4 March 2019). "Maha Shivratri special: visit these temples to get acquainted with the lesser-known legends of Lord Shiva". பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  35. Pillai, Sudha (17 June 2018). "Finding bliss at Vashishta Guha". பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  36. "Rishikesh: The Full Experience Beyond Yoga" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  37. Watts, Meera (2018-04-07). "Rishikesh: The Full Experience Beyond Yoga". Siddhi Yoga (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
  38. Bhandari, Manoj (2017-07-01). "Rafting in Rishikesh 2022 - Rishikesh Rafting Guide, Rapids, Rafting Faqs Travel Tips". www.euttaranchal.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
  39. 39.0 39.1 "Bungee Jumping in Rishikesh, India: Prices, Places, Cord, Locations – Jumpin Heights". jumpinheights.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
  40. "Rafting in Rishikesh: Green Tribunal asks Centre to respond". 1 April 2015. http://www.business-standard.com/article/pti-stories/rafting-in-rishikesh-green-tribunal-asks-centre-to-respond-115040101299_1.html. 
  41. "Rafting in Rishikesh: Explanation of the center". 2 April 2015. http://navbharattimes.indiatimes.com/state/uttarakhand/dehradun/rafting-in-rishikesh-explanation-of-the-center/articleshow/46774706.cms. 
  42. "ऋषिकेश में राफ्टिंग : राष्ट्रीय हरित प्राधिकरण ने केंद्र से माँगा जवाब मांगा" [Rafting in Rishikesh: Green Tribunal seeks answers from Center]. Samaylive.com (in இந்தி). 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
  43. Goswami, Urmi (3 April 2015). "NGT pulls up Centre, Uttarakhand over unregulated rafting camps on Ganga banks". http://articles.economictimes.indiatimes.com/2015-04-03/news/60787393_1_camps-waste-management-environment-ministry. 
  44. "Green tribunal notice over rafting camps in Uttarakhand". 6 April 2015. http://www.business-standard.com/article/news-ians/green-tribunal-notice-over-rafting-camps-in-uttarakhand-115040600378_1.html. 
  45. Sharma, Seema (3 April 2015). "Despite U'khand assurance to NGT, licences being issued for camping, rafting". http://timesofindia.indiatimes.com/city/dehradun/Despite-Ukhand-assurance-to-NGT-licences-being-issued-for-camping-rafting/articleshow/46789434.cms. 
  46. "Is This The End of River Rafting in Rishikesh? NGT's Latest Verdict Surely Makes It Seem So". India Times. 2 August 2015. Archived from the original on 5 August 2015. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  47. "International Yoga Festival – International Yoga Festival" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
  48. "Welcome to AIIMS Rishikesh". All India Institute of Medical Sciences, Rishikesh. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
  49. "AIIMS Rishikesh to get 100-bed hospital within three months". News18. Archived from the original on 13 July 2014. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
  50. "एम्स ऋषिकेश में देश का पहला आयुष सेंटर खुला" [India First Ayush Center Open in Rishikesh]. Jagran.com (in இந்தி). 4 June 2015. பார்க்கப்பட்ட நாள் 7 June 2015.
  51. "Work on Rishikesh-Karnaprayag railway line to begin in December". 18 October 2016. http://timesofindia.indiatimes.com/city/dehradun/Work-on-Rishikesh-Karnaprayag-railway-line-to-begin-in-December/articleshow/54918138.cms. 
  52. "PICS: ये है ऋषिकेश के गोवा बीच का नज़ारा, विदेशियों की बेशर्मी से आहत हो रही आस्था" [PICS: This is the view of Rishikesh's Goa beach, the belief that the foreigners are shocked by the shamelessness of the foreigners]. Samaylive. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
  53. "Where Rishikesh Meets Goa". The New Indian Express. 22 March 2015. http://www.newindianexpress.com/lifestyle/travel/Where-Rishikesh-Meets-Goa/2015/03/22/article2721758.ece. 
  54. "Rafting in Ganga promotes obscene activities, VHP says, wants it banned". The Times of India. 27 May 2015. http://timesofindia.indiatimes.com/india/Rafting-in-Ganga-promotes-obscene-activities-VHP-says-wants-it-banned/articleshow/47437432.cms. 
  55. "Adventure tours @ Rishikesh end up in rave parties". Andhra Headlines.com. Archived from the original on 1 July 2015. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
  56. Dutta, Nirmalya (27 May 2015). "WTF – now the VHP wants to ban river rafting in Rishikesh!". India.com. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
  57. "VHP demands ban on Rishikesh rafting". News18. 26 May 2015. Archived from the original on 30 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  58. "River Rafting Promotes Obscenity: VHP Seeks ban in Rishikesh". The Quint. 27 May 2015. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசிகேசு&oldid=3956304" இலிருந்து மீள்விக்கப்பட்டது