கேதார்நாத்

கேதார்நாத் (Kedarnath) இந்தியாவின் உத்தராகண்டம் எனும் மாநிலத்தில் உள்ள ருத்திரபிரயாகை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இங்கே புகழ் பெற்ற சோதிலிங்கம் கோயிலான கேதார்நாத்துக் கோயில் அமைந்துள்ளது. இமயமலைச் சாரலில் இவ்விடம் அமைந்துள்ளது. மந்தாகினி ஆறு இவ்விடத்தில் பாய்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 3,583 மீட்டர் உயரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. இவ்விடம் 2013-ஆம் ஆண்டு வந்த வெள்ளத்தினால் பலத்த சேதமுற்றது.

கேதார்நாத்
நகரம்
கேதார்நாத்
கேதார்நாத்
நாடுஇந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்உத்தராகண்டம்
மாவட்டம் (இந்தியா)ருத்ரபிரயாக் மாவட்டம்
ஏற்றம்
3,553 m (11,657 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்479
மொழி
 • அதிகாரப்பூர்வமானதுஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சொற்பிறப்பியல்

தொகு

சத்ய யுகத்தில் வாழ்ந்த கேதர் என்னும் அரசரின் நினைவாக இவ்வூருக்கு கேதர்நாத் என்று பெயர் வைக்கப்பட்டது. கேதர் என்னும் அரசனின் மகளான விருந்தா, லட்சுமியின் அவதாரம் ஆவார். அவளுக்குப் பின் அந்நகரம் விருந்தாவன் என்று பெயர்பெற்றது. பாண்டவர்கள் காலதிலிருந்து கேதர்நாத் கோவில் அமைந்துள்ளது. இங்கு பாண்டவர் தவங்கள் மேற்கொண்டுள்ளனர். சோட்டா சார்தாம் கோவில்களில் இது முக்கியமான கோவிலாகும்.

கேதர்நாத் பற்றிய சுந்தரர் தேவாரம் : பண்ணின்தமிழ் இசைபாடலின்

   பழவேய்முழ வதிரக்

கண்ணின்னொளி கனகச்சுனை

   வயிரம்மவை சொரிய

மண்ணின்றன மதவேழங்கள்

   மணிவாரிக்கொண் டெறியக்

கிண்ணென்றிசை முரலுந்திருக்

   கேதாரமெ னீரே

.

சீரமைப்பு பணிகள்

தொகு

2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளத்தால் கேதார்நாத் மற்றும் அதன் அடிவாரப் பகுதியான கௌரி குண்டம் பலத்த சேதம் அடைந்தது. இதனால் கேதார்நாத் மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில் ரூபாய் 130 கோடியில் 2021-ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டது. கேதார்நாத்தில் உள்ள ஆதிசங்கரர் சமாதி அருகே ஆதிசங்கரரின் சிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 5 நவம்பர் 2021 அன்று திறந்து வைத்தார்.[1] [2]

இதனையும் காண்க

தொகு


  1. கேததார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை நரேந்திர மோடி திறந்து வைத்தார்
  2. PM Modi inaugurates infra projects worth Rs 130 cr at Kedarnath; says places of faith are now viewed with pride
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதார்நாத்&oldid=3434621" இலிருந்து மீள்விக்கப்பட்டது