சோதிர்லிங்க தலங்கள்

(சோதிலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சோதிலிங்கம் (Jyotirlinga) என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

சோதிர்லிங்க தலங்கள் is located in இந்தியா
சோம்நாத்
சோம்நாத்
மல்லிகார்ச்சுனசுவாமி
மல்லிகார்ச்சுனசுவாமி
மகாகாலேசுவரர்
மகாகாலேசுவரர்
ஓம்காரேசுவரர்
ஓம்காரேசுவரர்
வைத்தியநாதர்
வைத்தியநாதர்
பீமாசங்கர்
பீமாசங்கர்
இராமேசுவரம்
இராமேசுவரம்
நாகேசுவரம்
நாகேசுவரம்
விசுவநாதர்
விசுவநாதர்
திரியமகேசுவரர்
திரியமகேசுவரர்
கேதாரநாதர்
கேதாரநாதர்
கிரினேசுவரர்
கிரினேசுவரர்
சோதிலிங்கத் திருத்தலங்களின் அமைவிடங்கள்.

இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கத் தலங்கள்

தொகு
  1. சோம்நாத், பிரபாச பட்டணம், கிர் சோம்நாத் மாவட்டம், குஜராத்.
  2. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில், ஸ்ரீசைலம், ஆந்திரப் பிரதேசம்.
  3. மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
  4. ஓங்காரேஸ்வரர் கோயில், மத்தியப் பிரதேசம்.
  5. கேதார்நாத் கோயில், உத்தராகண்டம்
  6. பீமாசங்கர் கோயில், சகாயத்திரி, மகாராஷ்டிரா.
  7. காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி, உத்தரப் பிரதேசம்.
  8. திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், மகாராஷ்டிரா.
  9. வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்க்கண்ட்.
  10. நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குஜராத்.
  11. இராமேஸ்வரம், தமிழ்நாடு
  12. கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத், மகாராஷ்டிரா.[1]
சிவபெருமானின் பெயர் திருத்தல வகை நகரம் மாநிலம்
கேதாரீஸ்வரர் மலைக்கோவில் கேதர்நாத் உத்ராஞ்சல்
விஸ்வேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (கங்கை நதிக்கரை) வாரணாசி உத்ரபிரதேசம்
சோமநாதேஸ்வரர் கடற்கரைத்தலம் (அரபிக் கடற்கரை) சோமநாதம் குஜராத்
மகா காளேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (சிப்ரா நதிக்கரை) உஜ்ஜயினி மத்திய பிரதேசம்
ஓங்காரேஸ்வரர் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மலைக்கோவில் இந்தூர் மத்திய பிரதேசம்
திரியம்பகேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (கோதாவரி நதிக்கரை) நாசிக் மகாராஷ்டிரம்
குஸ்ருணேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் ஓளரங்கபாத் மகாராஷ்டிரம்
நாகநாதேஸ்வரர் தாருகாவனம் காட்டுத்தலம் ஓளண்டா மகாராஷ்டிரம்
வைத்தியநாதேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் பரளி மகாராஷ்டிரம்
பீமசங்கரர் மலைக்கோவில் பூனா மகாராஷ்டிரம்
மல்லிகார்ஜுனர் மலைக்கோவில் ஸ்ரீ சைலம் ஆந்திர பிரதேசம்
இராமேஸ்வரர் கடற்கரைத்தலம் (வங்காள விரிகுடா) இராமேஸ்வரம் தமிழ்நாடு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதிர்லிங்க_தலங்கள்&oldid=3845618" இலிருந்து மீள்விக்கப்பட்டது