தேவ்கர்
தேவ்கர் (Deoghar) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தேவ்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரமும், மாநகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான பைத்தியநாத் கோவில் உள்ளது.
தேவ்கர் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பாபா நகர் | |
ஆள்கூறுகள்: 24°29′N 86°42′E / 24.48°N 86.7°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்கண்ட் |
மாவட்டம் | தேவ்கர் |
அரசு | |
• நிர்வாகம் | தேவ்கர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 337 km2 (130 sq mi) |
ஏற்றம் | 254 m (833 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,03,116 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 814112 |
தொலைபேசி குறியீடு | 06432 |
வாகனப் பதிவு | JH-15 |
பாலின விகிதம் | 921 ♂/♀ |
மக்களவைத் தொகுதி | கோடா |
சட்டமன்றத் தொகுதி | தேவ்கர் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | https://deoghar.nic.in/ |
புவியியல்
தொகுஇந்தியாவின் கோண்டுவானா பிரதேசத்தில் அமைந்த இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 255 மீட்டர் (833 அடி) உயரத்தில் உள்ள்து.[1] அஜய் ஆற்றின் கரையில் தேவ்கர் நகரம் உள்ளது. இந்நகரத்தைச் சுற்றி சிறு குன்றுகள் சூழ்ந்துள்ளது. [2][3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 35 வார்டுகளும், 36,768 வீடுகளும் கொண்ட தேவ்கர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 203,123 ஆகும். அதில் 107,997 ஆண்கள் மற்றும் பெண்கள் 95,126 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 26893 (13.24%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 881 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.68% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.30%, முஸ்லீம்கள் 4.96%, மற்றும் பிற சமயத்தவர்கள் 0.74% ஆகவுள்ளனர்.[4]
பண்பாடு
தொகுஜார்கண்ட் மாநிலத்தின் பண்பாட்டு தலைநகரான தேவ்கர் நகரம் உள்ளது.[5]இந்நகரத்தில் இந்தி மொழி மற்றும் சந்தாளி மொழிகள் பேசப்படுகிறது.
கல்வி
தொகு- அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், தேவ்கர்
- தேவ்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், தேவ்கர்
- வைத்தியநாத் கமல் குமாரி சமசுகிருத கல்லூரி
- தேவ் சங்கா தொழில் படிப்புகள் மற்றும் கல்வியியல் ஆய்வு நிறுவனம் (DIPSER)[6]
போக்குவரத்து
தொகுதொடருந்து நிலையம்
தொகுதேவ்கர் தொடருந்து சந்திப்பு நிலையம் மூன்று நடைமேடைகள் கொண்டது. தேவ்கரிலிருந்து ராஞ்சி, அகர்தலா நகரங்களுக்குச் செல்ல விரைவு வண்டிகள் உள்ளது.[7]
வானூர்தி நிலயம்
தொகுதேவ்கர் நகரத்தின் அடல் பிகார் வாஜ்பாயி பன்னாட்டு வானூர்தி நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது.[8]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ [2]
- ↑ வார்ப்புரு:Url=https://www.explorebihar.in/tapovan-deoghar.html
- ↑ Deoghar Population Census 2011
- ↑ {Url=http://www.uniindia.com/news/others/deoghar-to-get-status-of-cultural-capital-of-jharkhand/11368.html}
- ↑ "Dipser College". www.dipsercollege.info. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
- ↑ Deoghar Junction
- ↑ "Jharkhand Renames Several Institutes After Atal Bihari Vajpayee". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Deoghar