ருத்திரநாத் கோயில்

ருத்திரநாத் கோயில் (Rudranath) (சமக்கிருதம்: रुद्रनाथ) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சிவாலிக் மலையில், கார்வால் கோட்டத்தில், சமோலி மற்றும் ருத்திரபிரயாக் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில், கல்பேஷ்வரர் கோயில் மற்றும் மத்தியமகேஷ்வர் கோயில் அருகே அமைந்த பஞ்ச கேதார தலங்களில் மூன்றாவதாகும். இக்கோயில் மூலவரை நீலகண்ட மகாதேவர் என்பர். ருத்திரநாத் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. [1]

ருத்ரநாத் கோயில்
ருத்ரநாத் கோயில் is located in உத்தராகண்டம்
ருத்ரநாத் கோயில்
ருத்ரநாத் கோயில்
உத்தரகண்ட் மாநிலத்தில் அமைவைடம்
ஆள்கூறுகள்:30°32′0″N 79°20′0″E / 30.53333°N 79.33333°E / 30.53333; 79.33333
பெயர்
பெயர்:ருத்திரநாத்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரகாண்ட்
மாவட்டம்:ருத்ரபிரயாக்
அமைவு:ருத்திரநாத் கிராமம், கார்வால் கோட்டம்
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:அறியப்படவில்லை
அமைத்தவர்:புராணக்கதையின் படி பாண்டவர்கள்
பஞ்ச கேதார்
Kedarnath Temple.jpg
கேதார்நாத்
Tungnath temple.jpgRudranath temple.jpg
துங்கநாத்ருத்ரநாத்
Madhyamaheswar.jpgKalpehswar.jpg
மகேஷ்வர்கல்பேஷ்வரர்

அமைவிடம்தொகு

பஞ்ச கேதார தலங்களில் மூன்றாவதான ருத்திரநாத் கோயிலை அடைவது மிகவும் கடினமானதாகும்.[2]

ரிஷிகேஷ் நகரத்திலிருந்து 241 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோபேஷ்வர் எனுமிடம் வரை பேரூந்தில் செல்ல வேண்டும். பின்னர் கோபேஷ்வரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாகர் எனும் கிராமத்திற்கு சிற்றுந்தில் சென்று, பின் கால்நடையாக 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ருத்திரநாத் கோயிலை அடையலாம்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்திரநாத்_கோயில்&oldid=3226996" இருந்து மீள்விக்கப்பட்டது