திரிவேந்திர சிங் ராவத்

இந்திய அரசியல்வாதி

திரிவேந்திர சிங் ராவத் (Trivendra Singh Rawat) (பிறப்பு:டிசம்பர், 1960)[1] பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், உத்தராகண்ட் மாநிலத்தின் எட்டாவது முதலமைச்சரும் ஆவார்.[2]

திரிவேந்திர சிங் ராவத்
त्रिवेन्द्र सिंह रावत
உத்தரகாண்ட் முதலமைச்சர்
பதவியில்
18 மார்ச் 2017 – 10 மார்ச் 2021
ஆளுநர்கிருஷ்ண காந்த் பால்
முன்னையவர்ஹரீஷ் ராவத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 1960 (அகவை 63)
கைராசைன், பௌரி கர்வால் மாவட்டம், உத்தராகண்ட், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

உத்தராகண்ட் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக 1979 முதல் 2002 முடிய பணியாற்றியவர். திரிவேந்திர சிங் ராவத் 2002-இல் உத்தராகண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-இல் பாரதிய ஜனதா கட்சியின் உத்தராகண்ட் மாநில அரசின் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.[3][4] 2017 உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரிவேந்திர சிங் ராவத், உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக 18 மார்ச் 21017 அன்று மாநில ஆளுநர் கிருஷ்ண காந்த் பால் என்பவரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.[5]

இளமையும் அரசியலும்

தொகு

ஹேமாவதி நந்தன் பகுகுனா கார்வால் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு பயின்றவர்.[6]

1979-இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இணைந்த திரிவேந்திர சிங் ராவத், 1985-இல் டேராடூன் பகுதியின் பிரசாரகர் ஆக பொறுப்பு வகித்தார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் உத்தராகண்ட் பகுதியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2000-இல் உத்தராகண்ட் மாநிலம் உதயம் ஆன போது, ரவாத் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.[6]

2017-இல் பாராதிய ஜனதா கட்சியின் சார்பாக தொய்வாலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, உத்தராகண்ட் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 10 மார்ச் 2021 அன்று உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். [7]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Trivendra Singh Rawat, an RSS 'pracharak' who struck it rich in politics". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 17 March 2017.
  2. உத்தராகண்ட் முதல்வராக திரிவேந்திர ராவத் பதவியேற்பு
  3. "Trivendra Singh Rawat, ex-RSS pracharak, to be CM of Uttarakhand". The Indian Express. 17 March 2017. பார்க்கப்பட்ட நாள் 17 March 2017.
  4. "Who is Trivendra Singh Rawat?" (in en-US). The Indian Express. 2017-03-17. http://indianexpress.com/article/india/who-is-trivendra-singh-rawat-uttarakhand-chief-ministerial-contender-rss-bjp-amit-shah-4572863/. 
  5. "Uttarakhand: BJP MLA Trivendra Singh Rawat to take oath as chief minister". The Indian Express. 17 March 2017. பார்க்கப்பட்ட நாள் 17 March 2017.
  6. 6.0 6.1 Upadhyay, Kavita (18 March 2017). "Grassroots worker now set to lead". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 18 March 2017.
  7. உத்தராகண்ட் முதல்வர் திடீர் ராஜிநாமா

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் உத்தரகாண்ட் முதலமைச்சர்
18 மார்ச் 2017 – 10 மார்ச் 2021
பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவேந்திர_சிங்_ராவத்&oldid=4058643" இலிருந்து மீள்விக்கப்பட்டது