உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல், 2017

2017 உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல்  உத்தராகண்ட சட்டமன்றத்திற்கான 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 15 பிப்ரவரி 2017 அன்று நடந்த தேர்தலைக் குறிக்கும். இதன் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. 2012 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் இந்திய தேசிய காங்கிரசு விசய் பகுகுணா தலைவராவுள்ள முற்போக்கு சனநாயக முன்னணி (உத்தராகண்டம்) உதவியுடன் ஆட்சி அமைத்தது. வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இங்கு தேர்தலின் போது நான்கு தொகுதிகளில் பயன்படுத்தப்படும்.[1][2]

உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல், 2017

← 2012 பிப்பிரவரி 15, 2017 2022 →
 
கட்சி காங்கிரசு பா.ஜ.க

முந்தைய முதலமைச்சர்

ஹரீஷ் ராவத்
காங்கிரசு

முதலமைச்சர் -தெரிவு

திரிவேந்திர சிங் ராவத்
பாரதிய ஜனதா கட்சி

கால அட்டவணை தொகு

இந்தத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம், 4 ஜனவரி 2017 அன்று அறிவித்தது.

  • 15 பிப்ரவரி 2017 - அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
  • 11 மார்ச் 2017 - முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[3]

வாக்குப் பதிவு தொகு

உத்தராகண்டத்தின் 69 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 68% வாக்குப் பதிவு நடந்தது. கர்னபிரயாக் தொகுதி பகுசன் சமாச் வேட்பாளர் குல்தீப் சிங் சாலை விபத்தில் மரணமடைந்ததால் அத்தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.[4]

கருத்துக் கணிப்புக்கள் தொகு

தேர்தல் நிறுவனம்/ இணைப்பு/ வலைவாசல் ஆய்வு தேதிகள் காங்கிரசு பாசக மற்றவர்கள்
யுஎசு\யுகே லைவ் 18 அக்டோபர் 2016 42 19 09
உத்தராகண்டம் ஆன்லைன் 16 அக்டோபர், 2016 39 20 11
அச்சு - இந்தியா டுடே[5] 14 அக்டோபர் 2016 26-31 (28) 38-43 (40) 1-4 (2)
விடிபி கூட்டாளிகள்[6] 16 ஜூலை 2016 24 40 06
வாக்குச் சராசரி 33 30 07
  காங்கிரசு
  பாசக
  மற்றவர்கள்

முடிவுகள் தொகு

கட்சியின் பெயர் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை பெற்ற வாக்கு %
இந்திய தேசிய காங்கிரசு 11 33.5
பாசக 57 46.5
கட்சி சார்பற்றவர்கள் 2 10

டோய்வாலா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரிவேந்திர சிங் ரவாத் முதல்வராக பதவியேற்றார்.[7]

இதையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு