பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், 2017
2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் இதற்கு முந்தைய பஞ்சாப் சட்டப் பேரவை பதவிக்காலம் மார்ச்சு 17, 2017 வரை இருந்தது. [4]. பஞ்சாப்புக்கும் உத்திரப்பிரதேசம், கோவா, குசராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், பஞ்சாப்புக்கும் கோவாவுக்கும் பிப்பரவரி 4 அன்று ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[5] அனைத்து மாநிலங்களின் வாக்கு மார்ச்சு 11 அன்று எண்ணப்படும். தற்போதைய ஆளும் கூட்டணி அகாலி தளம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி[6][7] அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் நடைபெறுகிறது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||
பஞ்சாப் சட்டமன்றத்தில் 117 இடங்கள் அதிகபட்சமாக 59 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 77.20% (▼1.10%) | ||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
பின்னணி
தொகுதேர்தல் செயல்முறை மாற்றங்கள்
தொகுஏப்ரல் 2016 இல், இந்தியத் தேர்தல் ஆணையம் சுமார் 8 லட்சம் போலி வாக்குகள் மாநிலத்தில் இருப்பதாக தெரிவித்தது. அவற்றை கடந்த ஒரு ஆண்டு காலத்தில் நீக்கியதுடன் 18 வயது நிறைவடைந்த 7 லட்சம் இளைஞர்களை வாக்காளர்களாக பதிவு செய்தது. ஒரு மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு சோதனை அடிப்படையில் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.[8] வாக்காளர் எண்ணிக்கை கிராமப்புற பகுதிகளில் 1200-இற்கு அதிகமாகவோ நகர்ப்புறப் பகுதிகளில் 1400-இற்கு அதிகமாகவோ இருந்தால் தேர்தல் ஆணையம் புதிய வாக்குச் சாவடிகள் அமைக்க முடிவு செய்துள்ளது.[9]
வாக்காளர் சரிபார்க்க காகித தணிக்கை சோதனை சட்டமன்ற தொகுதிகள்[10][11] | |||
---|---|---|---|
பதன்கோட் | குவாதியான் | மசிதா | பதேகர் சாகிப் |
மன்சா | பதிண்டா (ஊர்ப்புறம்) | ராச்கோட் | மோகா |
அரசியல் மாற்றங்கள்
தொகு2014 பொது தேர்தலில் 13 நாடாளுமன்ற தொகுதிகளில் அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலா 4 இடங்களில் வெற்றிபெற்றன. காங்கிரசு 3 இடங்களிலும் பாசக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முதல் முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 34 சட்டசபை தொகுதிகளில் முதலாவதாகவும் இரண்டாவதாக 7 தொகுதிகளிலும் மூன்றாவதாக 73 தொகுதிகளிலும் நான்காவதாக மீதமுள்ள 3 தொகுதிகளிலும் வாக்குகளைப் பெற்றது.[12] அது தோற்ற இடங்களில் வெற்றி வேறுபாட்டை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தது. [13]
- அகாலி தளம்-பாசக
நவ்சோத் சிங் சித்து அம்ரிசுதர் (கிழக்கு) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகியதை பாசக இன்னும் ஏற்கவில்லை. தான் போட்டியிடும் 87 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சிரோன்மனி அகாலி தளம் அறிவித்துள்ளது.[14]
- ஆம் ஆத்மி கட்சி
ஆவாச் - இ - பஞ்சாப் கட்சியிலிருந்து இரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (பெயின் சகோதரர்கள்) விலகி புது கட்சி (லோக் இன்சாப் கட்சி) ஆரம்பித்து ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். தங்கள் கட்சி சின்னத்திலேயே அவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார்கள்.[15] இவர்கள் இருவரும் லூதியானா மாவட்டத்திலிருந்து கட்சி சார்பற்ற வேட்பாளர்களாக தேர்வாகி இருந்தனர்.
- இந்திய தேசிய காங்கிரசு
சலந்தர் (கன்டோண்மென்ட்) சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் வளைப்பந்து அணி தலைவர் பர்கத் சிங் செப்டம்பர் 12 அன்று அகாலி தளத்திலிருந்து விலகினார். அவரை அமரிந்தர் சிங் காங்கிரசுக்கு வரவேற்றுள்ளார். நவ்சோத் சிங் சித்துவின் மனைவியும் தந்தையும் காங்கிரசில் உள்ளார்கள். தந்தை பாட்டியாலா மாவட்ட காங்கிரசு பதவியில் உள்ளார்.
சனவரி 9 அன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.[16] ஆவாச்- இ-பஞ்சாப் தலைவர் நவ்சோத் சிங் சித்து சனவரி 15 அன்று காங்கிரசில் இணைந்தார்.[17] அம்ரிசுதர் (கிழக்கு) தொகுதி வேட்பாளராக போட்டியிடுவார் , அம்ரிந்தர் முதல்வர் பாதலை எதிர்த்து லம்பி தொகுதியில் போட்டியிடுவார்.[18]
- பகுசன் சமாச் கட்சி
- ஆவாச்- இ-பஞ்சாப்
நவ்ஜோத் சிங் சித்து இந்தப் புதிய கட்சி ஒன்றினைத் தொடங்கினார். இது மற்ற கட்சிகளுக்கு வலுவான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டவணை
தொகுவாக்குப்பதிவு பிப்பிரவரி 4 அன்று நடைபெறும்.
வாக்குப்பதிவு
தொகுமாலை 5 மணி வரை தோராயமாக 70% வாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை என்று புகார்கள் இருந்தாலும் சிறு சச்சரவும் வாக்குவாதமும் நடந்தாலும் பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாநிலத்தில் சாகுர், பசில்கா மாவட்டங்களில் அதிக அளவு வாக்குப்பதிவு நடந்தது, அதற்கு அடுத்து மான்சா, பாதேகார் சாகிப் மாவட்டங்களில் இருந்தது[19] மற்றொரு செய்தி 78.3% வாக்குப்பதிவு நடந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறுகிறது. மானசா தொகுதியில் (87.34%) அதிக அளவு வாக்குகள் % கணக்குப்படி பதிவானதாகும். சாச்(SAS) நகரில் (71.9%) குறைந்த அளவு வாக்குகள்(% ) கணக்குப்படி பதிவாகிய தொகுதியாகும்.[20]
முடிவுகள்
தொகுகட்சியின் பெயர் | வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை | பெற்ற வாக்கு % |
---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 77 | 38.5 |
ஆம் ஆத்மி கட்சி | 20 | 23.7 |
அகாலி தளம் | 15 | 25.2 |
பாசக | 3 | 5.4 |
லோக் இன்சாப் கட்சி | 2 | 1.2 |
முதல்வராக அமரிந்தர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் [21]லும்பியில் பிரகாசு சிங் பாதலும் சலலாபாத்தில் அவர் மகன் சுக்பிர் சிங் பாதலும் பாட்டியாலாவில் அமரிந்தர் சிங்கும் அம்ரிசுதர் கிழக்கில் நவசோத் சிங் சித்தும் வெற்றி பெற்றனர். லும்பியில் பிரகாசு சிங் பாதலை எதிர்த்து போட்டியிட்ட அமரிந்தர் சிங் தோல்வியுற்றார். அமரிந்தர் சிங் இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.[22]
கருத்துக் கணிப்புக்கள்
தொகுதேர்தல் நிறுவனம்/இணைப்பு | தேதி | அத-பாஜக | காங்கிரசு | ஆம் ஆத்மி |
---|---|---|---|---|
ஏக்சிசு - இந்தியா டுடே [23] | அக்டோபர் 2016 | 17-21 (19) | 49-55 (52) | 42-46 (44) |
டிவி24 இந்தியா [24] | ஆகஸ்ட் 2016 | 20-25 (22) | 27-35 (31) | 70-80 (75) |
அவ்விங்போசுட் - சி வோட்டர் [25] | மார்ச் 2016 | 06-12 (09) | 08-14 (11) | 94-100 (97) |
தேர்தல் சராசரி | 17 | 31 | 72 |
இதையும் பார்க்க
தொகுReferences
தொகு- ↑ "'Amarinder appointed Captain of Punjab Congress'". Daily Post India. 27 November 2015 இம் மூலத்தில் இருந்து 8 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151208222652/http://www.dailypost.in/editor-s-pick/53035-amarinder-appointed-captain-of-punjab-congress.
- ↑ "AAP appoints Gurpreet Ghuggi as Punjab convener". The Tribune. 4 September 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2022.
- ↑ "AAP"s Ghuggi loses from Batala". Press Trust of India. 11 March 2017. பார்க்கப்பட்ட நாள் 19 March 2022 – via India Today.
- ↑ http://indiaongo.in/election/punjab/
- ↑ "Elections Begin On Feb 4, Counting On March 11: Your Quick Guide". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் சனவரி 4, 2017.
- ↑ Khanna, Rajeev (13 February 2016). "Why is BJP keen on retaining Akali alliance in Punjab?".
- ↑ Vasudeva, Vikas (2015-12-29). "BJP gets ready to bargain for more seats in Punjab" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/bjp-gets-ready-to-bargain-for-more-seats-in-punjab/article8037689.ece.
- ↑ "7 lakh youngsters yet to register with Election Commission". பார்க்கப்பட்ட நாள் July 6, 2016.
- ↑ "2017 Assembly Polls: Voters Won't Have To Travel More Than 2 km To Cast Vote In Punjab". பார்க்கப்பட்ட நாள் July 6, 2016.
- ↑ "Punjab polls: In high-profile seats, EC leaves no scope for rivals to complain".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-02-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-15.
- ↑ "Details of Assembly Segments of Parliamentary Constituencies - General Elections, 2014 - 16th Lok Sabha (page 946 of 1698)" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2016-12-13. பார்க்கப்பட்ட நாள் 2017-01-01.
- ↑ Kumar, Ashutosh (Panjab University) (2016). "2014 Parliamentary Elections in Punjab - Explaining the Electoral Success of Aam Aadmi Party" (PDF).
- ↑ "Shiromani Akali Dal candidate list 2017 Punjab Assembly elections: View full list of SAD candidates announced so far". இந்தியா . காம். பார்க்கப்பட்ட நாள் சனவரி 25, 2017.
- ↑ "Sidhu's Awaaz-e-Punjab forum splits, Bains brothers forge alliance with AAP". நியு இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2017.
- ↑ "Former Prime Minister Manmohan Singh to release Punjab Congress manifesto on January 9". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் சனவரி 7, 2017.
- ↑ "Ahead Of Punjab Elections, Navjot Singh Sidhu Joins Congress, Meets Rahul Gandhi". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் சனவரி 15, 2017.
- ↑ "Congress announces candidature of Navjot Singh Sidhu, Captain Amarinder Singh for Punjab polls". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2017.
- ↑ "Punjab Records 70% Turnout, Voting Largely eacefulPunjab Records 70% Turnout, Voting Largely Peaceful". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 4, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Goa sees highest voter turnout at 83%; Punjab sees 78.6% polling, clashes reported". /indianexpress. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 4, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Key decisions taken at Punjab CM Amarinder's first cabinet meet". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 18, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "'You told Captain Amarinder Singh to contest from Lambi,' Arvind Kejriwal says to Sukhbir Singh badal". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "IndiaToday-Axis Opinion Poll of Punjab,October 2016".
- ↑ https://twitter.com/TV24India
- ↑ "Exclusive HuffPost-CVoter Poll: Aam Aadmi Party Wave Is Sweeping Punjab".