2022 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல்


2022 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல், இந்தியாவின் வடக்கில் உள்ள உத்தராகண்டம் மாநிலத்தின் சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தல் 14 பிப்ரவரி 2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் 8 சனவரி 2022 அன்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 10 மார்ச் 2022 அன்று நடைபெற்றது.

2022 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல்

← 2017 14 பிப்ரவரி 2022
 
கட்சி பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரசு
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

 
கட்சி பகுஜன் சமாஜ் கட்சி ஆம் ஆத்மி கட்சி
கூட்டணி - -


முந்தைய முதலமைச்சர்

புஷ்கர் சிங் தாமி
பாரதிய ஜனதா கட்சி

முதலமைச்சர் -தெரிவு

புஷ்கர் சிங் தாமி
பாரதிய ஜனதா கட்சி

பின்னணி

தொகு

உத்தராகண்டச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 23 மார்ச் 2022 அன்று நிறைவடைகிறது.[1] 2017 உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி, 2017-ஆம் ஆண்டில் நடைபெற்றாது. தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் ஆட்சி அமைத்தது.[2]

தேரதல் அட்டவணை

தொகு

இந்தியத் தேர்தல் ஆணையம் 8 சனவரி 2022 அன்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.[3]

S.No. நிகழ்வுகள் நாள் கிழமை
1. வேட்பு மனு தாக்கல் துவக்க நாள் 21 சனவரி 2022 வெள்ளி
2. வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் 28 சனவரி 2022 வெள்ளி
3. வேட்பு மனு பரிசீலனை 29 சனவரி 2022 சனி
4. வேட்பு மனு திரும்பப் பெறுதல் 31 சனவரி 2022 திங்கள்
5. வாக்குப் பதிவு நாள் 14 பிப்ரவரி 2022 திங்கள்
6. வாக்கு எண்ணிக்கை நாள் 10 மார்ச் 2022 வியாழன்

தேர்தல் முடிவுகள்

தொகு

10 மார்ச் 2022 அன்று மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாரதிய ஜனதா கட்சி 47 தொகுதிகளையும், இந்திய தேசிய காங்கிரசு 19 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளையும், சுயேட்சைகள் 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். [4] இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வி கண்டனர்.

இருப்பினும் புஷ்கர் சிங் தாமி, உத்தரகண்ட் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[5]23 மார்ச் 2022 அன்று புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக உத்தரகாண்ட் முதலமைச்சராக பதவியேற்றார். [6][7]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Terms of the Houses". Election Commission of India.
  2. "Trivendra Singh Rawat takes oath as Uttarakhand Chief Minister" (in en-IN). The Hindu. 2017-03-18. https://www.thehindu.com/elections/uttarakhand-2017/trivendra-rawat-takes-oath-as-uttarakhand-chief-minister/article17526906.ece. 
  3. "Assembly elections 2022: Check complete schedule for Uttar Pradesh, Uttarakhand, Goa, Manipur & Punjab". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
  4. Uttarakhand ResultS 2022
  5. BJP goes with tried and tested CMs — Dhami in Uttarakhand, Sawant in Goa
  6. "உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றார் புஷ்கர் சிங் தாமி". Archived from the original on 2022-03-23. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  7. Pushkar Singh Dhami sworn in as new Uttarakhand CM