2022 இந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள்
2022-ஆம் ஆண்டில் 7 இந்திய மாநிலங்களுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளது[1]. அவைகள்:
பிப்ரவரி & மார்ச் 2022 சட்டமன்றத் தேர்தல்கள்
தொகுகீழ்கண்ட சட்டமன்றத் தேர்தல்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று, முடிவுகள் 10 மார்ச் 2022 அன்று வெளியிடப்பட உள்ளது.
நவம்பர் & டிசம்பர் 2022 சட்டமன்றத் தேர்தல்கள்
தொகுதேர்தல் அட்டவனை
தொகுஐந்து மாநிலத் தேர்தல்கள்
தொகுஉத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 7 கட்டமாக தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெறும். பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 10-ஆம் தேதி நடைபெறும்.[3] [4]
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் 2022
தொகு10 மார்ச் 2022 அன்று வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கட்சி உத்தரப் பிரதேசம், உத்தராகண்டம், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது.[5] மேலும் பஞ்சாபில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி ஆட்சியை இழந்தது.