பிரமோத் சாவந்த்

இந்திய அரசியல்வாதி

பிரமோத் சாவந்த் (Pramod Sawant)(பிறப்பு: 24 ஏப்ரல் 1973) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், கோவா மாநிலத்தின் 13ஆவது (தற்போதைய) முதலமைச்சரும் ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.[2]

பிரமோத் சாவந்த்
13ஆவது கோவா முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 மார்ச் 2019
ஆளுநர்மிருதுளா சின்கா
முன்னையவர்மனோகர் பாரிக்கர்
கோவா சட்டப் பேரவைத் தலைவர்
பதவியில்
22 மார்ச் 2017 – 18 மார்ச் 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 ஏப்ரல் 1973 (1973-04-24) (அகவை 51)
கோவா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுலக்சனா சவான்ட்

இளமைக் காலம்

தொகு

இவர் ஏப்ரல் 24, 1973 ஆண்டு பாண்டுரங் - பத்மினி சாவந்த் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[3][4] இவர் கோலாப்பூரில் உள்ள கங்கா ஆயுர்வேதி மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறையில் பட்டம் பெற்றார். பின்னர் புனேவில் உள்ள திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார்.

இவரது மனைவி சுலக்சனா சவான்ட் ஆவார்.[5] இவர் பிக்கோலிம் நகரில் உள்ள ஶ்ரீ சாந்ததுர்கா மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக உள்ளார்.[6]

அரசியல் வாழ்க்கை

தொகு

சாவந்த் கோவா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள சான்கியூலிம் தொகுதியிலிருந்து கோவ சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

கோவா முதலமைச்சராக

தொகு
  • கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகு, கோவா முதல்வர் பதவிக்கு, பிரமோத் சாவந்த் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கோவாவின் 13வது முதலமைச்சராக 19 மார்ச் 2019 அன்று பதவியேற்றார்.[7][8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. Murari Shetye. "Goa speaker Pramod Sawant succeeds Parrikar as CM" The Times of India. 19 March 2019.
  2. "Pramod Pandurang Sawant(Bharatiya Janata Party(BJP)):Constituency- SANQUELIM(NORTH GOA) - Affidavit Information of Candidate:". myneta.info.
  3. Times, Navhind. "CM to lay corner stone for Sankhali bus stand today - The Navhind Times".
  4. http://www.goavidhansabha.gov.in/uploads/members/148_profile_PSawant-12.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  5. http://www.goanews.com/news_disp.php?newsid=6904&catid=197
  6. "Pramod Sawant: 9 Interesting facts about Speaker of Goa Legislative Assembly".
  7. "From Ayurveda practioner [sic] to Goa CM: All you need to know about Pramod Sawant". India Today. March 19, 2019. https://www.indiatoday.in/india/story/all-you-need-to-know-about-goa-cm-pramod-sawant-1481382-2019-03-19. 
  8. "जानिए गोवा के नए CM प्रमोद सावंत के बारे में 5 बड़ी बातें". Economic Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  9. "प्रमोद सावंत बने गोवा के नए CM, दो उप-मुख्यमंत्रियों ने भी ली शपथ". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  10. கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு
  11. BJP goes with tried and tested CMs — Dhami in Uttarakhand, Sawant in Goa
  12. கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு
  13. Pramod Sawant takes oath as Goa CM for second term
  14. Pramod Sawant takes oath as Goa CM
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோத்_சாவந்த்&oldid=3505627" இலிருந்து மீள்விக்கப்பட்டது