சுக்விந்தர் சிங் சுகு
சுக்விந்தர் சிங் சுகு (Sukhvinder Singh Sukhu) (பிறப்பு: 27 மார்ச் 1964), இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதி ஆவார். 2022 இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இவர் நாதவுன் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றி பெற்றதை அடுத்து, சுக்விந்தர் சிங் சுகு 10 டிசம்பர் 2022 அன்று 7வது இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக இந்திய தேசிய காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.[1][2]இவர் 11 டிசம்பர் 2022 அன்று முதலமைச்சராக பதவியேற்றார்.[3]
சுக்விந்தர் சிங் சுகு | |
---|---|
7வது இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 டிசம்பர் 2022 | |
ஆளுநர் | இராஜேந்திர அர்லேகர் |
Deputy | முகேஷ் அக்னிஹோத்திரி |
முன்னையவர் | ஜெய்ராம் தாகூர் |
இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 டிசம்பர் 2017 | |
முன்னையவர் | விஜய் அக்னிஹோத்திரி |
பதவியில் 2003–2012 | |
முன்னையவர் | பாபுராம் மாண்டியால் |
பின்னவர் | விஜய் அக்னிஹோத்திரி |
தொகுதி | நாதௌன் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 மார்ச்சு 1964 நதாவுன், ஹமிர்பூர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |