ஜெய்ராம் தாகூர்

இந்திய அரசியல்வாதி

ஜெய்ராம் தாகூர் (Jai Ram Thakur) (பிறப்பு 6 சனவரி 1965)[2] ஒரு இந்திய அரசியல்வாதியும், இமாச்சலப்பிரதேசத்தின் 14 ஆவது மற்றும் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இவர் முதலமைச்சர் வேட்பாளரான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரேம் குமார் துமால் நவம்பர் 2017 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சுஜான்பூர் தொகுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இமாச்சலப்பிரதேசத்தின் சட்டமன்றத் தலைவராக 24 டிசம்பர் 2017 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] ஜெய்ராம் தாகூர் 1998 ஆம் ஆண்டிலிருந்து இமாச்சலப்பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னதாக இமாச்சலப்பிரதேச அரசில் அமைச்சராகவும் இருந்தார். 2009-2012 வரையிலான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருந்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தின் சட்டசபைக்கு மண்டியில் சிராஜ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாண்புமிகு
ஜெய்ராம் தாகூர்
6வது இமாச்சலப்பிரதேச முதலமைச்சர்
பதவியில்
27 டிசம்பர் 2017 – 8 டிசம்பர் 2022
ஆளுநர்கல்ராஜ் மிஸ்ரா பி. தத்தாத்திரேயா
முன்னையவர்வீரபத்ர சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சனவரி 1965 (1965-01-06) (அகவை 59)[1]
மண்டி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதீய ஜனதா கட்சி
துணைவர்மருத்துவர் சாதனா தாக்கூர்
பிள்ளைகள்2
வாழிடம்(s)டண்டி கிராமம், அஞ்சலகம் & துனாக் தாலுகா மண்டி மாவட்டம், இமாச்சலப்பிரதேசம்
முன்னாள் கல்லூரிவல்லபா அரசு கல்லுாரி, மாண்டி
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் 1986 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தின் (எபிவிபி) இணைச்செயலாளரானார். 1989 முதல் 1993 வரை உள்ள காலகட்டத்தில், ஜம்மு காஷ்மீரில் அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தின் அமைப்புச் செயலாளராகப் பணியாற்றினார். 1993 முதல் 1995 வரை உள்ள காலகட்டத்தில், இமாச்சலப் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராகப் பதவி வகித்தார். 1998 ஆம் ஆண்டில் முதன்முறையாக இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் இமாச்சலப் பிரதேச பாரதிய ஜனதாக கட்சியின் மாநில துணைத் தலைவரானார். 2003 ஆம் ஆண்டில் மீண்டும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில், இமாச்சலப் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சாவின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்தார். 2007 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jai Ram Thakur, Age, Caste, Wife, Children, Family, Biography & more". starsunfolded.com. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2018.
  2. "Personal Information-Himachal Pradesh Vidhan Sabha". Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 December 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "ஜெய்ராம் தாகூர் இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராகிறார்: டிச.27-ல் பதவியேற்பு". தி இந்து. 24 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2018.
  4. "Himachal Pradesh 13th Legislative Assembly ( Vidhan Sabha )". eVidhan, Himachal Pradesh. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ராம்_தாகூர்&oldid=3930464" இலிருந்து மீள்விக்கப்பட்டது