பிரேம் குமார் துமால்
இந்திய அரசியல்வாதி
பிரேம் குமார் துமால் (Prem Kumar Dhumal) (பிறப்பு 1944) இந்திய மாநிலம் இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ளார். 30 திசம்பர், 2007 அன்று பதவியேற்றார்.[1] இதற்கு முன்னர் மார்ச்சு 1998 முதல் மார்ச்சு 2003 வரை இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் ஒன்பதாவது மக்களவைக்கும் 1991ஆம் ஆண்டு பத்தாவது மக்களவைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமீர்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி காணும் முன்னர் மாநில சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.[2] அவ்வாண்டு (2007) திசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
பிரேம் குமார் துமால் | |
---|---|
5வது இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் | |
தொகுதி | பாம்சென் |
பதவியில் 30 திசம்பர் 2007 – 25 திசம்பர் 2012 | |
முன்னையவர் | வீரபத்ர சிங் |
பின்னவர் | வீரபத்ர சிங் |
பதவியில் 24 மார்ச்சு 1998 – 6 மார்ச்சு 2003 | |
முன்னையவர் | வீரபத்ர சிங் |
பின்னவர் | வீரபத்ர சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 ஏப்ரல் 1944 சமீர்பூர், ஹமிர்பூர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சீலா துமால் |
பிள்ளைகள் | இரு மகன்கள், அருண் & அனுராக் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | ஆசிரியர் |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Dhumal takes oath as Himachal CM". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2007-12-30. http://timesofindia.indiatimes.com/India/Dhumal_takes_oath_as_Himachal_CM/articleshow/2662060.cms.
- ↑ "HP ex-CM Dhumal wins Hamirpur LS bypoll". ரெடிப்.காம். 2007-06-05. http://www.rediff.com/news/2007/jun/05hp.htm.
- ↑ Uttam, Kumar.Dhumal is BJP's CM candidate for Himachal. Daily Pioneer. November 26, 2007