இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2022

2022 ஆம் ஆண்டிற்கான இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல்


இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2022 (2022 Himachal Pradesh Legislative Assembly election), இமாச்சல சட்டமன்றத்தின் 68 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 8 திசம்பர் 2022 அன்று தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் 8 சனவரி 2023 அன்றுடன் முடிவடைகிறது.[1]இத்தேர்தலுக்கு அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் 14 அக்டோபர் 2022 அன்று வெளியிட்டது.[2][3]68 தொகுதிகள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு 40 தொகுதிகளை வென்றது.[4]10 டிசம்பர் 2022 அன்று முதலமைச்சராக சட்டமன்ற உறுப்பினர் சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டார்.

2022 இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்

← 2017 12 நவம்பர் 2022
 
கட்சி இந்திய தேசியக் காங்கிரசு பாரதிய ஜனதா கட்சி
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி


நடப்பு முதலமைச்சர்

ஜெய்ராம் தாகூர்
பாரதிய ஜனதா கட்சி



தேர்தல் அட்டவணை

தொகு
வ எண் நிகழ்வு நாள் கிழமை
1. வேட்பு மனு தாக்கல் துவக்கம் 17 அக்டோபர் 2022 திங்கள் கிழமை
2. வேட்பு மனு தாக்கல் முடிவு 25 அக்டோபர் 2022 செவ்வாய்க் கிழமை
3. வேட்பு மனு பரிசீலனை 27 அக்டோபர் 2022 வியாழன்
4. வேட்பு மனு திரும்பப் பெற இறுதி நாள் 29 அக்டோபர் 2022 சனிக் கிழமை
5. தேர்தல் நாள் 12 நவம்பர் 2022 சனிக் கிழமை
6. வாக்கு எண்ணிக்கை 8 டிசம்பர் 2022 வியாழன்

கட்சிகளும், கூட்டணிகளும்

தொகு
வ எண் கட்சியின் பெயர் கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி     ஜெய்ராம் தாகூர்   TBD
வ எண் அரசியல் கட்சி கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் தொகுதிகள்
1. இந்திய தேசிய காங்கிரசு     பிரதிபா சிங் TBD

      இடது முன்னணி

தொகு
வ எண் கட்சி[5] கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் தொகுதிகள்
1. மார்க்சிஸ்ட்     ராகேஷ் சிங்கா 11[6]
2. இந்தியப் பொதுவுடமைக் கட்சி     சியாம் சிங் சௌகான்   TBD
வ எண் கட்சி கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் தொகுதிகள்
1. ஆம் ஆத்மி கட்சி     சுர்ஜித் சிங் தாக்கூர்[7]   68[8]

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு

தொகு

ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் நிறுவனம் (ABP News-CVoter’s) 1 அக்டோபர் முதல் 14 அக்டோபர் 2022 வரை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகள் 15 அக்டோபர் 2022 அன்று வெளியிட்டது.[9][10]

  • கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 38 முதல் 46 தொகுதிகளின் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. இருப்பினும் சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவாக 48.8% முதல் 46% வரையான வாக்குகளே பெறும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
  • இந்திய தேசிய காங்கிரசு சென்ற தேர்தலை விட 41.7% முதல் 35.2% வரையான வாக்குகள் பெற்று 20 முதல் 28 தொகுதிகளைக் கைப்பற்றும்.
  • ஆம் ஆத்மி கட்சி 6.3% வாக்குகள் பெற்று 0 முதல் 1 இடம் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.

பதிவான வாக்குகள்

தொகு

55 இலட்சம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள இம்மாநிலத்தில் 74.05% பதிவானதாக தரவுகள் தெரிவிக்கிறது.[11][12]

தேர்தல் முடிவுகள்

தொகு

வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்திய தேசிய காங்கிரசு 40 தொகுதிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. சுயேச்சைகள் 3 தொகுதிகளை வென்றுள்ளனர்.[13]

கூட்டணி அரசியல் கட்சி வாக்குகள் வென்ற தொகுதிகள்
வாக்குகள் % ±pp போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் 2017 தேர்தலை விட கூடுதல்/குறைவு +/−
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரசு 18,52,504 43.90% கூடுதல் 2.22% 68 40 கூடுதல் 19
தேசிய முற்போக்கு கூட்டணி பாரதிய ஜனதா கட்சி 18,14,530 43.00% குறைவு 5.79% 68 25 குறைவு 19
LF மார்க்சிஸ்ட் 27,817 0.66% குறைவு 0.81% 11 0 குறைவு 1
சிபிஐ 622 0.01% குறைவு 0.03% 1 0 மாற்றமில்லை
மொத்தம் 28,439 0.67% குறைவு 0.84% 12 0 குறைவு 1
யாருமில்லை ஆம் ஆத்மி கட்சி 46,270 1.10% கூடுதல் 1.10% 67 0 மாற்றமில்லை
பகுஜன் சமாஜ் கட்சி 14,613 0.35% குறைவு 0.2% 53 0 மாற்றமில்லை
ராஷ்டிரிய தேவபூமி கட்சி கூடுதல் 29 0 மாற்றமில்லை
சுயேச்சைகள் கூடுதல் 3 கூடுதல் 1
பிறர்
நோட்டோ 24,862 0.59%
மொத்தம் 100%
Valid votes
Invalid votes
Votes cast/ turnout
Abstentions
Registered voters

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
  2. "Election Commission On Why It Didn't Announce Gujarat Poll Dates Now". NDTV.com. 14 October 2022. https://www.ndtv.com/india-news/election-commission-on-why-it-didnt-announce-gujarat-poll-dates-now-3431339. 
  3. "Himachal Pradesh Assembly Election 2022: Full schedule". mint (in ஆங்கிலம்). 2022-10-14. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
  4. Himachal Pradesh Result Status
  5. "Himachal Pradesh Election: AAP के बाद CPIM ने हिमाचल चुनाव के लिए 11 प्रत्याशियों के नाम किए घोषित". Zee News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
  6. "CPM to support AAP on Himachal seats where it is not contesting" (in en). Tribuneindia News Service. 10 October 2022. https://www.tribuneindia.com/news/himachal/cpm-to-support-aap-on-seats-where-it-is-not-contesting-440082. 
  7. "AAP appoints Surjeet Singh Thakur, a farmer, as Himachal unit chief". The Indian Express (in ஆங்கிலம்). 7 June 2022. பார்க்கப்பட்ட நாள் 9 June 2022.
  8. "AAP to contest polls on all 68 seats in Himachal Pradesh". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-03-12. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  9. ABP News-CVoter’s Second Opinion Poll Predicts BJP’s Victory In Himachal Pradesh
  10. ABP News-cvoter’s Second Opinion Poll Predicts Bjp’s Victory in Himachal Pradesh
  11. "Himachal Pradesh saw 74.05% polling: provisional data" (in en-IN). The Hindu. 2022-11-13. https://www.thehindu.com/news/national/other-states/himachal-pradesh-saw-7405-polling-provisional-data/article66131348.ece. 
  12. Himachal saw 74.05% polling
  13. 2022 இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்