2022 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல்
2022 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் (2022 Manipur Legislative Assembly elections) இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநில சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டங்களாக 28 பிப்ரவரி 2022 மற்றும் 5 மார்ச் 2022 ஆகிய நாட்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிகை 10 மார்ச் 2022 அன்று நடைபெந்து.[1]மார்ச் 10, 2022 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
| ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
|
தேர்தல் அட்டவணை
தொகுமணிப்பூர் தேர்தலுக்கான அட்டவணையினை இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்கண்டவாறு வடிவமைத்துள்ளது. இந்த தேர்தல் அட்டவணையானது சனவரி 8, 2022 அன்று வெளியிடப்பட்டது.[2]
வரிசை எண் | நிகழ்வுகள் | கட்டம் | |
---|---|---|---|
முதல் | இரண்டு | ||
1. | வேட்பு மனு தாக்கல் துவக்க நாள் | 1 பிப்ரவரி 2022 | 4 பிப்ரவரி 2022 |
2. | வேட்பு மனு தாக்கல் முடிவு நாள் | 8 பிப்ரவரி 2022 | 11 பிப்ரவரி 2022 |
3. | வேட்பு மனுக்கள் பரிசீலனை | 9 பிப்ரவரி 2022 | 14 பிப்ரவரி 2022 |
4. | வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி நாள் | 11 பிப்ரவரி 2022 | 16 பிபரவரி 2022 |
5. | தேர்தல் நாள் | 27 பிப்ரவரி 2022 | 3 மார்ச் 2022 |
6. | வாக்கு எண்ணிக்கை நாள் | 10 மார்ச் 2022 |
தேர்தல் முடிவுகள்
தொகு10 மார்ச் 2022 அன்று மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிககப்பட்டது. அதில் மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி 32 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 7 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய தேசிய காங்கிரசு 5 தொகுதிகளிலும், நாகாலாந்து மக்கள் முன்னணி 5 தொகுதிகளிலும், குக்கி மக்கள் கூட்டணி 2 தொகுதிகளிலும் மற்றும் சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.[3]
இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ந. பீரேன் சிங் இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சராக 21 மார்ச் 2022 அன்று பதவியேற்றார். [4][5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மணிப்பூர் சட்டசபை தேர்தல் தேதிகள் மாற்றம்
- ↑ "Assembly elections 2022: Check complete schedule for Uttar Pradesh, Uttarakhand, Goa, Manipur & Punjab". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
- ↑ Manipur Election Results 2022
- ↑ N Biren Singh to be sworn in as Manipur chief minister for second time
- ↑ இரண்டாவது முறையாக என். பீரேன் சிங் மணிப்பூர் முதலமைச்சராக பதவியேற்பு