அரிசங்கர் பிரம்மா
அரிசங்கர் பிரம்மா அல்லது ஹரிசங்கர் பிரம்மா (Harishankar Brahma) (பிறப்பு:19 ஏப்பிரல் 1950) இந்தியாவின் 19-வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக 16 சனவரி 2015 அன்று பதவியேற்றார். ஜே.எம்.லிங்டோவுக்குப் பிறகு வடகிழக்கு மாநிலத்திலிருந்து இந்தப் பதவிக்கு தேந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராவார்.
ஹரிசங்கர் பிரம்மா | |
---|---|
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 16 சனவரி 2015 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 19 ஏப்ரல் 1950 |
தேசியம் | இந்தியா |
தொழில் | இந்திய ஆட்சிப் பணி |
அரிசங்கர் பிரம்மா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆந்திரப்பிரதேச 1975-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தொகுப்பைச் சேர்ந்தவர். அரிசங்கர் பிரம்மாவுக்கு வரும் ஏப்ரல் 19-ம் தேதி 65 வயது நிரம்புவதால் 19 ஏப்பிரல் 2015இல் ஓய்வு பெற உள்ளார். [1]
முந்தைய பதவிகள்தொகு
- 30 ஏப்பிரல் 2010 (ஓய்வு பெறும் வரை) மத்திய அரசின் எரிசக்தித் துறை செயலாளர்.
- 25 ஆகஸ்ட் 2010 முதல் 15 சனவரி 2015 முடிய இந்தியத் தேர்தல் ஆணையர்.
கல்விதொகு
19 ஏப்பிரல் 1950இல் பிறந்த அரிசங்கர்பிரம்மா, அசாம், கௌகாத்தி பல்கலைகழகத்தில், அரசியல் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்தார்.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/article6796651.ece
- ↑ http://eci.nic.in/eci_main1/ecb.aspx