வீ. சு. சம்பத்

வீரவள்ளி சுந்தரம் சம்பத் (பிறப்பு: 16 ஜனவரி, 1950) ஒரு இந்திய நிருவாகி, சூன் 10, 2012 முதல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். 1973-ம் வருடம் முதல் இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இருக்கும் இவர், தமிழ்நாட்டிலுள்ள வேலூரைச் சேர்ந்தவர். இவர் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 21 ஏப்ரல் 2009 முதல் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு இந்திய அரசின் எரிசக்தி மற்றும் ஆற்றல் துறையில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். சூன் 6, 2012 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதிபா பாட்டில் முன்னிலையில் ச. யா. குரேசிக்குப் பதிலாகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பு அளிக்கப்பட்டது. இவர் ஓய்வு பெறும் வரையில் 16 ஜனவரி 2015 (தன்னுடைய 65-வது அகவை வரையிலும்) இப்பதவியில் இருப்பார்.[1]

வீரவள்ளி சுந்தரம் சம்பத்
18வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
11 ஜூன் 2012 – 15 ஜனவரி 2015
குடியரசுத் தலைவர்பிரதிபா பாட்டீல்
பிரணாப் முகர்ஜி
பிரதமர்மன்மோகன் சிங்
நரேந்திர மோதி
முன்னையவர்ச. யா. குரேசி
பின்னவர்அரிசங்கர் பிரம்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவேலூர், தமிழ்நாடு 16 சனவரி 1950 (1950-01-16) (அகவை 74)
தேசியம்இந்தியன்
தொழில்குடிமைப்பணி அதிகாரி

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._சு._சம்பத்&oldid=3431804" இலிருந்து மீள்விக்கப்பட்டது