அச்சல் குமார் ஜோதி

அச்சல் குமார் ஜோதி (Achal Kumar Jyoti, பிறப்பு: 23 சனவரி 1953) என்பவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 1975-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றத் துவங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். 2015 மே 13 இல் இவர் மூன்று இந்தியத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[1][2]

அச்சல் குமார் சோதி
Achal Kumar Jyoti
21st இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
6 சூலை 2017 – 23 சனவரி 2018
குடியரசுத் தலைவர்பிரணப் முகர்ஜி, ராம் நாத் கோவிந்த்
முன்னையவர்சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி
பின்னவர்ஓம் பிரகாசு ராவத்து
இந்திய தேர்தல் ஆணையாளர்
பதவியில்
13 மே 2015 – 5 சூலை 2017
குடியரசுத் தலைவர்பிரணாப் முகர்ச்சி
தலைமைச் செயலாளர், குசராத்து
பதவியில்
31 திசம்பர் 2009 – 31 சனவரி 2013
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அச்சல் குமார் சோதி

23 சனவரி 1953 (1953-01-23) (அகவை 71)
பஞ்சாப் (இந்தியா)
வாழிடம்புது தில்லி
வேலைஇந்திய ஆட்சிப் பணி

பணி விவரம்

தொகு

அச்சல் குமார் ஜோதி குஜராத் தலைமைச் செயலாளராக 2013-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[1] அவர் 1999 முதல் 2004 வரை, கண்ட்லா துறைமுக அறக்கட்டளை தலைவராகவும், சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பொறுப்பு வகித்தார். 2013-இல் தலைமைச் செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் குஜராத் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராகப் பதவி அமர்த்தப்பட்டார்.[2]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சல்_குமார்_ஜோதி&oldid=3777388" இலிருந்து மீள்விக்கப்பட்டது