எஸ். எல். சக்தர்

எசு. எல். சக்தர் (S. L. Shakdhar) இந்தியாவின் முதன்மை தேர்தல் ஆணையராகவும், 3, 4,மற்றும் 5 ஆவது மக்களவைகளின் (இந்திய நாடாளுமன்றங்களின் கீழ்நிலை) முன்னாள் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.[1] 1918 ஆம் ஆண்டு சக்தர் பிறந்தார். 1977 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை தலைமை தேர்தல் ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.[2] 2002 ஆம் ஆண்டு எசு. எல். சக்தர் காலமானார்.[1]

எசு. எல். சக்தர்
S. L. Shakdhar
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
1977 - 1982
முன்னையவர்தி. சுவாமிநாதன்
பின்னவர்ஆர். கே. திரிவேதி
நாடாளுமன்ற செயலர்
பதவியில்
3, 4, 5 ஆவது நாடாளுமன்றங்கள்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு2002
தேசியம்இந்தியன்
வேலைகுடிமைப் பணியாளர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சக்தர் சம்மு காசுமீரில் 1918ஆம் ஆண்டு பிறந்தார். அரசியலமைப்பு விவகாரங்கள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் நிபுணராக இருந்தார். மக்களவையின் திறமையான செயல்பாட்டிற்காக பாராளுமன்ற நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மாற்றங்கள் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தார். பாராளுமன்ற விவகாரங்களில் இவருக்கு வளமான அறிவும் பரந்த அனுபவமும் இருந்தது. சுபாசு காசியப்புடன் இணைந்து எழுதிய பாராளுமன்றத்தின் நடைமுறை மற்றும் நடைமுறை பற்றிய இவரது கட்டுரை பரவலாக அடையாளப்படுத்தப்படுகிறது.

வகித்தப் பதவிகள்

தொகு
  • செயலாளர், மக்களவை, 1964-73
  • செயலாளர் - பொது, மக்களவை, 1973-77
  • செயலாளர் - பொது, இந்திய நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் 

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 "Press Release: Prime Minister condoles the death of S L Shakdher". Press Information Bureau, Govt. of India.
  2. "Previous Chief Election Commissioners". Election Commission of India. Archived from the original on 21 November 2008.
  • Kashyap, Subhash C. (1989) The Office of the Secretary-General – Monograph Series (New Delhi: Lok Sabha Sectt., pp. (25–26)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எல்._சக்தர்&oldid=3669909" இலிருந்து மீள்விக்கப்பட்டது