ஜே. மை. லிங்டோ

ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ (James Michael Lyngdoh)(பிறப்பு: பிப்ரவரி 8, 1939) ஒரு இந்தியக் குடிமைப் பணி ஊழியர் ஆவார். இவர் ஜூன் 2001 முதல் 2004 பிப்ரவரி 7 வரை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றினார்.[1] இவருக்கு 2003ஆம் ஆண்டில் அரசு ரமோன் மக்சேசே விருது வழங்கியது.[2]

ஜே. மை. லிங்டோ
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
14 ஜூன் 2001 – 7 பிப்ரவரி 2004
முன்னையவர்எம். எஸ். கில்
பின்னவர்த. சு. கிருஷ்ணமூர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 பெப்ரவரி 1939 (1939-02-08) (அகவை 85)
தேசியம்இந்தியன்
வேலைகுடிமைப் பணி
விருதுகள்ரமோன் மக்சேசே விருது 2003 அரசுப் பணி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

காசி வம்சாவளியைச் சேர்ந்தவர், லிங்டோ வடகிழக்கு மாநிலமான மேகாலயாவைச் சேர்ந்தவர். சில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைச் முடித்தார். லிங்டோ மாவட்ட நீதிபதி ஒருவரின் மகனாவார். லிங்டோ தனது உயர் கல்வியைத் தில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் முடித்தார்.

தொழில் தொகு

லிங்டோ இருபத்தி இரண்டு வயதாக இருந்தபோது , இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். இவரின் விரைவான செயல்பாடு, தீர்க்கமான முடிவு, அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் பணக்காரர்களுக்கு எதிரான செயல்பாட்டினால் பின்தங்கியவர்களுக்கு ஏழைகளுக்கு ஆதரவாக அறியப்பட்டார். ஆரம்பத்தில் கட்டாய நில சீர்திருத்தக் கொள்கையினை உறுதியாக நிறைவேற்றியது, பெரும் நில உரிமையாளர்களைக் கோபப்படுத்தியது. எனவே முன்னதாகவே இடமாற்றம் செய்யப்பட்டார்.  அதிகாரங்களுடன் இதேபோன்ற மோதல்கள் இவரது சேவையின் நேர்மையினையும் உயர்வையும் குறிக்கும். இவர் இந்திய அரசாங்கத்தின் அமைச்சரவை செயலகத்தில் செயலாளர், ஒருங்கிணைப்பு மற்றும் பொது குறைகளை கலைதல் பிரிவில் பணியாற்றினார்.

தேர்தல் ஆணையராக தொகு

1997ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவராக லிங்டோ ஒருவர். 2001ல் இவர் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் மிகவும் பதற்றமான இரண்டு மாநிலங்களில் லிங்டோ தேர்தல் நடத்தும் நெருக்கடியை எதிர்கொண்டார்.

குஜராத் தேர்தல்கள், மற்றும் நரேந்திர மோடியுடன் மோதல் தொகு

ஜூலை 2002இல், முதல்வர் நரேந்திர மோதி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் குசராத்து ஆளுநர் எஸ்.எஸ்.பந்தாரி, குசராத்து சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு கலைத்தார். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் இடது கட்சிகளால் ஆட்சேபிக்கப்பட்டது இந்த முடிவு. சபையின் இரண்டு அமர்வுகளுக்கு இடையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக இடைவெளியைத் தடைசெய்யும் அரசியலமைப்பு ஆணையைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தை முன்கூட்டியே தேர்தல்களை நடத்தக் கட்டாயப்படுத்தும் முயற்சியாக இது கருதப்பட்டது.[3] சட்டசபை கலைக்கப்படுவது அண்மையில் மாநிலத்தில் நடந்த இனவாத வன்முறையின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படு தேர்தல் ஆணையம் இதனைப் பகிரங்கமாக எதிர்த்தது.[4]

லிங்டோ தலைமையிலான தேர்தல் ஆணையம் குசராத்தில் முன்கூட்டியே தேர்தல் நடுத்துவதைநிராகரித்தது.[5] ஆகஸ்ட் 20, 2002 அன்று, வதோதராவுக்கு அருகிலுள்ள போடெலியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், நரேந்திர மோடி லிங்டோவை குற்றம்சாட்டிப் பேசினார். குசராத்து சட்டமன்றத் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தியதற்குக் காரணம் லிங்டோ ஒரு கிறிஸ்தவர் என்பதே என்று மோடி குற்றச்சாட்டினார்.

நாத்திகம் பற்றிக் கேள்விப்படாதவர்களால் நரேந்திர மோடியை மத அடிப்படையில் தாக்கியதற்காக லிங்க்டோ அவரைத் தாக்கினார், இது "மிகவும் இழிவானது" மற்றும் "மெனியல் வதந்திகள்" என்று கூறினார்.[6][7][8]

பிரதமர் வாஜபாயின் கண்டிப்புக்கு ஒரு நாள் கழித்து, வாஜ்பாயின் "வழிகாட்டுதல்களை" பின்பற்றி லிங்டோவுடனான சர்ச்சை முடிந்துவிட்டதாக மோடி கூறினார். ஆனால் குசராத்து சட்டமன்றத் தேர்தலை முன்னதாக நடத்துவதற்கான தனது கோரிக்கையை மீண்டும் மோதி வலியுறுத்தினார்.[9] அக்டோபர் 2002இல், குசராத்தின் சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைத்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.[10] [11]

வெளியீடுகள் தொகு

2004ஆம் ஆண்டில், லிங்டோ "குரோனிகல்ஸ் ஆஃப் இம்பாசிபில் எலெக்சன்”[12] என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில் இவர் இந்தியாவில் தேர்தல் செயல்முறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்தும் கையாண்டுள்ளார். இது சம்மு-காசுமீரில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் ஒரு கதை. இது 2002 குஜராத் தேர்தல்களையும் விவாதிக்கிறது. இந்த புத்தகம் பரவலான பாராட்டையும் பெற்றது.[13][14][15][16]

இந்திய அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய பார்வை தொகு

லிங்டோ அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது தனது வெறுப்பை அடிக்கடி வெளிப்படுத்தியுள்ளார். பிப்ரவரி 2004இல், ஒரு நேர்காணலில், "அரசியல்வாதிகள் அனுமதி மூலம் மட்டுமே, மற்றவர்கள் அனைவரும் எப்போதும் எனது வீட்டிற்கு வரவேற்கப்படுகிறார்கள்" எனக் கூறினார்.[17] ஆகஸ்ட் 2002இல், லிங்டோ "இன்றைய அரசியல் அழுக்கு படிந்த, களங்கமான, ஒருதலை பட்ச போக்குடையது” என்றார்."[18] லிங்டோ அரசியல்வாதிகளை ஒரு "புற்றுநோய்" என்றும் எவ்விதச் சிகிச்சையும் இல்லை என்றார்.[19]

2013 ஆம் ஆண்டில், செளத் இந்தியன் வங்கியின் ஆதரவுடன் பொது கொள்கை ஆராய்ச்சி மையம் (சிபிபிஆர்) ஏற்பாடு செய்த காலாண்டு விரிவுரைத் தொடரில் "இந்தியத் தேர்தலில் குற்றவாளிகளை ஒழித்தல்" குறித்த கருத்துக்களை ஜே.எம். லிங்டோ வெளிப்படுத்தியுள்ளார்.[20]

ஓய்வு பெற்ற பின் தொகு

  • இவர் ஓய்வுக்குப் பிறகு பொது வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்கிறார். ஓய்வுபெற்ற மற்றும் சேவை செய்யும் அதிகாரத்துவ குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்திய ஊழல் தடுப்பு அமைப்பின் இந்தியப் புத்துணர்ச்சி முயற்சியின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[21]
  • பிப்ரவரி 2011இல், லிங்டோ, சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்கள் - ஜனநாயகத்தின் ஆத்மா என்ற தலைப்பில் ஒரு பத்திரிகையாளரிடம் பேசியபோது, தேர்தல்களுக்கு மாநில நிதி வழங்குவது 'பயனற்றது' என்றும், கட்சிகளுக்கு இடையே தேர்தல் சண்டை நடைபெறும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்றும் கூறினார், ஏனெனில் இது கணிசமாகக் குறைந்த செலவினங்களைக் கொண்டிருக்கும்.[22]

ஜூன் 201 இல், லிங்டோ, "இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல்கள் - என்ன செய்ய வேண்டும்?" என்ற தலைப்பில் ஒரு வட்ட மேசையில் உரையாற்றினார். அப்போது, சட்டமன்றங்களின் குறைந்தபட்சம் 50 சதவீத இடங்களுக்கான விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தேர்தல் முறைகேடுகளைக் குறைக்கும் என்று கூறினார். விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்கு மாறினால், அரசியல் கட்சிகள் தனிநபர்களின் தேர்தல்களுக்கு பெரும் தொகையை செலவிட வேண்டிய அவசியத்தைக் குறைக்கும் என்று விளக்கினார். அரசியல் கட்சிகளின் உள் தேர்தல்களுக்குக் கூட தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து, ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான் என்றார்.[23]

மேற்கோள்கள் தொகு

  1. "Previous Chief Election Commissioners". Election Commission of India. Archived from the original on 21 November 2008.
  2. "The Ramon Magsaysay Awardees by Name (Alphabetical)". Ramon Magsaysay Award Foundation (RMAF). Archived from the original on 2012-02-07. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  3. "Gujarat Assembly dissolved, early poll sought". Economic Times. 19 July 2002. http://articles.economictimes.indiatimes.com/2002-07-19/news/27337221_1_gujarat-cabinet-polls-gujarat-assembly. 
  4. "Modi's poll vault: EC only hurdle". Indian Express. 19 July 2002. http://expressindia.indianexpress.com/news/fullstory.php?newsid=12875. 
  5. "EC rules out early polls in Gujarat" இம் மூலத்தில் இருந்து 2013-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629104735/http://hindu.com/2002/08/17/stories/2002081704870100.htm. 
  6. "'Some journalists asked me recently, Has James Michael Lyngdoh come from Italy?". Outlook. 30 September 2002. http://www.outlookindia.com/article.aspx?217399. 
  7. "PM raps Modi for remarks on Lyngdoh". Times of India. 24 August 2002 இம் மூலத்தில் இருந்து 2013-07-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130719060635/http://articles.timesofindia.indiatimes.com/2002-08-24/india/27319645_1_gujarat-chief-minister-james-michael-lyngdoh-improper-language. 
  8. "Gujarat polls: Lyngdoh hits back at Modi". Indian Express. 24 August 2002. http://expressindia.indianexpress.com/news/fullstory.php?newsid=14086. 
  9. "Controversy over: Modi". The Hindu. 26 August 2002 இம் மூலத்தில் இருந்து 20 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131220073732/http://hindu.com/2002/08/26/stories/2002082604310100.htm. 
  10. "SC upholds EC order on Gujarat". Times of India. 28 October 2002 இம் மூலத்தில் இருந்து 2013-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131220005643/http://articles.timesofindia.indiatimes.com/2002-10-28/india/27317593_1_constitution-bench-gujarat-polls-assembly. 
  11. "Supreme Court upholds EC decision on Gujarat polls". The Hindu. 3 September 2002 இம் மூலத்தில் இருந்து 20 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131220074818/http://hindu.com/2002/09/03/stories/2002090305670100.htm. 
  12. Lingdoh, James Michael (2004). Chronicle of an impossible election: the Election Commission and the 2002 Jammu and Kashmir assembly elections. India: Penguin Books India. பக். 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780670057665. 
  13. "Lyngdoh's truth". 
  14. "Limner Lyngdoh". 
  15. "The power of democracy". 
  16. "Modi kept calling him James Michael, RSS sent Lyngdoh a letter: you have made us proud". 
  17. "At home in wilderness". The Hindu. 23 February 2004 இம் மூலத்தில் இருந்து 30 ஏப்ரல் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040430205841/http://www.hindu.com/mp/2004/02/23/stories/2004022302430100.htm. 
  18. "Lyngdoh lashes out at 'gossip menials'". The Telegraph. 24 August 2002 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304125540/http://www.telegraphindia.com/1020824/asp/nation/story_1132647.asp. 
  19. "Lyngdoh to vote himself out on Saturday". The Economic Times. 7 February 2004. http://articles.economictimes.indiatimes.com/2004-02-07/news/27372669_1_james-michael-lyngdoh-chief-election-commissioner-jm-lyngdoh. 
  20. "Lyngdoh backs proportional representation, Deccan Chronicle". http://www.cppr.in/innews/lyngdoh-backs-proportional-representation-deccan-chronicle/. 
  21. "EXECUTIVE COMMITTEE MEMBERS". IRI. Archived from the original on 24 March 2012. பார்க்கப்பட்ட நாள் 9 April 2012.
  22. "State Funding for Elections is a Useless thing". http://www.thehindu.com/news/cities/Hyderabad/state-funding-for-elections-is-a-useless-thing-lyngdoh/article1200113.ece. 
  23. "Competition leading to poll malpractices: Lyngdoh". The Hindu. 10 June 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/competition-leading-to-poll-malpractices-lyngdoh/article3510886.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._மை._லிங்டோ&oldid=3573361" இலிருந்து மீள்விக்கப்பட்டது