சௌத் இந்தியன் வங்கி
இந்தியத் தனியார் துறை வங்கி
சௌத் இந்தியன் வங்கி (South Indian Bank, BSE: 532218, NSE: SOUTHBANK) இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வைப்பகம் ஆகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திரிச்சூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. சௌத் இந்தியன் வங்கி தனது 828 கிளைகள், 4 சேவை மையங்கள், 27 விரிவாக்க மையங்கள், 20 மண்டல அலுவலகங்களுடன் இந்தியாவின் 26 மாநிலங்களிலும், 3 ஒன்றியப் பகுதிகளிலும் செயற்பட்டு வருகிறது. இவ்வைப்பகத்திற்கு இந்தியா முழுவதும் 1244 தானியங்கிப் பணவழங்கிகளும், 3 தானியங்கிப் பணம் செலுத்தும் பொறிகளும் செயற்படுகின்றன.[1][2]
வகை | தனியார் நிறுவனம் BSE & NSE |
---|---|
நிறுவுகை | 1929 |
தலைமையகம் | திரிச்சூர், கேரளா, இந்தியா |
முதன்மை நபர்கள் | வி.ஜி. மாதவ், (மேலாண்மை இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | வங்கித்தொழில் நிதிச் சேவைகள் காப்பீடு மூலதனச் சந்தைகள் |
உற்பத்திகள் | கடன்கள், சேமிப்புகள், investment vehicles, insurance etc. |
வருமானம் | ₹ 26.4270 பில்லியன் |
இணையத்தளம் | www.southindianbank.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ southindianbank.com
- ↑ "About us". South Indian Bank Ltd. பார்க்கப்பட்ட நாள் 2010-02-23.