வங்கி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வங்கி (ஒலிப்பு (உதவி·தகவல்)) (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.
வங்கியால் வழங்கப்படும் சேவைகள்தொகு
வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன
- வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல்
- இரவல்கள் (loans)
- காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்)
- கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல்.
- பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல்
- நாணய மாற்று செய்து கொடுத்தல்
- சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல்.
வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன
- கருமபீடம் அல்லது அலுவலகம் வழியாக நேரடியாக
- ATM
- மின்னஞ்சல்
- தொலைபேசி
- இணையம்
வங்கி அமைப்புக்கள்தொகு
- வணிக வங்கி (Commercial bank) - காசோலை வரைவதன் மூலம் தனது வாடிக்கையாளருக்கு தனது கணக்கிலிருந்து பணத்தினை மீளப்பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வங்கிகள் வர்த்தகவங்கியாகும்.இத்தகைய நிதிச்சேவையை ஏனைய வங்கி அமைப்புகள் மேற்கொள்ளவதில்லை.
- சேமிப்பு வங்கிகள் (Savings bank)
- வியாபார வங்கி (Merchant banks)
- கூட்டுறவு வங்கி (Cooperative Banks)
- அபிவிருத்தி வங்கி (InterDevelopment Banks)
- முதலீட்டு வங்கி (Investment banks)
- மத்திய வங்கி (Central Bank) - பொருளாதார உறுதி,பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஒரு நாட்டின் பணநிரம்பல்,வங்கி முறைமை போன்றவற்றை நெறிப்படுத்தும் கேந்திர நிலையமாகும்.
- இஸ்லாமிய வங்கி (Islamic banks) - இஸ்லாமிய சட்டப்படி இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் வட்டி (Interest) வழங்கப்படமாட்டாது அத்துடன் எந்தவொரு கடனுக்கும் வட்டி அறவிடப்பட மாட்டாது.