இஸ்லாமிய வங்கி

இஸ்லாமிய வங்கி (Islamic banks) என்பது இசுலாமியச் சட்ட முறைமை அல்லது சரியா சட்டப்படி இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் வட்டி (Interest) வழங்கப்படமாட்டாது அத்துடன் எந்தவொரு கடனுக்கும் வட்டி அறவிடப்பட மாட்டாது.[1]

அம்மானில் உள்ள ஜோர்தான் நாட்டு இஸ்லாமிய வங்கி

Toll free number 08709210995 - 08709210995

கொள்கைதொகு

இஸ்லாமிய நிதி மற்றும் வங்கி ( Islamic finance and banking) வட்டி முறையின் முதலீடு கிடையாது. இஸ்லாமிய வங்கிகளின் அடிப்படை கொள்கை ஓர் சராசரி வர்த்தக முறையையே சார்ந்ததாக இருக்கிறது. வர்த்தகங்களிலும், வியாபாரங்களிலும் பிரச்சனைகளை அதன் பங்குதாரர்கள் எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதைப் போலவே இஸ்லாமிய வங்கிகள் இயங்குகிறது.இஸ்லாமிய வங்கி ஆபத்து பகிர்வு (Risk-Sharing)வை அடிப்படையாகவும், மற்ற வங்கிகள் ஆபத்து பரிமாற்றம் (Risk-Transfer)வை அடிப்படையாகவும் கொண்டு இயங்குகிறது. [2].[3]

செயல்பாடுதொகு

மற்ற நிதி நிறுவனங்களை போன்று இஸ்லாமிய நிதி மற்றும் வங்கி நிறுவனங்களிடம் மூலதன சந்தைகள் (capital markets), நிதி மேலாண்மை (fund managers), முதலீட்டு நிறுவனங்கள் (investment firms), மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்(insurance companies) அதே போல் தனிநபர் நிதி சேவைகளான கடன் அட்டைகள் (credit cards), கார் நிதி( car finance), தனிப்பட்ட நிதி ( personal finance), மற்றும் வீட்டு நிதி (home finance) போன்ற தனிப்பட்ட நிதி தயாரிப்புகளை இஸ்லாமிய வங்கி நிறுவனங்கள் வழங்குகிறது. வட்டி முறை முற்றிலும் கிடையாது. மாறாக வாடிக்கையாளர் மற்றும் வங்கிகள் அந்த முதலீட்டால் ஏற்படும் அபாயங்களை (Risk) பகிர்கிறார்கள். மேலும் அவற்றால் வரும் இலாபத்தை அவர்களுக்கு இடையே பிரிக்கப்படுகிறது.. [4]

முக்கிய கூறுகள்தொகு

இஸ்லாமிய வங்கி தயாரிப்புகள் (Islamic Banking Product) அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வகையான ஒப்பந்த அடிப்படையை சார்ந்தவையாக உள்ளன. அந்த ஒப்பந்தமுறைகள் கீழே உள்ள செயல்களை அடிப்படையாக கொண்டது.[5] அவைவருமாறு:

ஒப்பந்த வணிகம்தொகு

ஒப்பந்த வணிகம் அல்லது முறாபகா(Murabaha) என்பது வங்கி ஒரு பொருளை வாங்கி, பின்னர் ஒரு ஒத்திவைக்கப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு அதை விற்கிறது. இது தனிப்பட்ட கடன்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வங்கிகள் பொருட்கள் அல்லது பங்குகள் வாங்கி, பின்னர் இலபம் அமைத்து வாடிக்கையாளர்களுக்கு அவற்றை மீண்டும் விற்பனை செய்கிறது.ஆனால் விற்பனை தொகையை திரும்பிக்கிடைக்க சில காலவரைமுறைகளை வங்கி வகுக்கிறது.

தொழில் கடன்தொகு

தொழில் கடன் அல்லது முளாரபா(Mudaraba) என்பது வங்கி முதலீடு செய்கிறது. முதலீடு பெறப்பட்டு தொழில் செய்ய முனைவோர் தன் உழைப்பே மூலதரமாக வைத்து வங்கியிடன் ஒப்பந்தம் வைத்து தன் தொழிலுக்கு பணம் வாங்குகிறார்.அத்தொழிலில் வரக்கூடிய இலாபங்களை இருசாரரும் பரஸ்பர ஒப்பந்த விகிதத்தில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அத்தொழிலில் ஏற்பட்ட இழப்பு அல்லது நஷ்டம் வங்கியை சார்ந்தது, தொழில்முனைவோர் அவரது உழைப்பு மூலதனமாக இருப்பதால் அவர் உழைப்பையை அவர் இழக்கிறார்.

கூட்டு முயற்சிதொகு

கூட்டு முயற்சி( joint venture) அல்லது முசாரகா(Musharaka) என்பது ஒரு கூட்டு வணிகம் இதில் இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டோரோ, முதலீடு செய்து, அதனால் வரக்கூடிய இலாப, நட்ட சார்பு விகிதத்தை முன்னே முடிவு செய்வது. இதில் வங்கியும் ஒரு பங்குதாரராக இருப்பது. இவைகள் நிலம் வாங்கும் விற்கும் வர்த்தகத்திலும், கட்டுமானத்தொழிலும் பயன்படுத்தப்படுகிறது.

குத்தகைக்கு விடுதல்தொகு

குத்தகைக்கு விடுதல்(Lease) அல்லது லிஜாரா(Ijara) என்பது வங்கி ஒரு பொருளை வாங்கி, பின்னர் ஒரு குறிப்பிட்ட நேர காலத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு குத்தகையாக விடுவது ஆகும். இதன் அடிப்படையில் தான் வாகன கடன், அடமான அல்லது தனிப்பட்ட கடன் இவைகள் இயங்குகிறது.

உற்பத்தி நிதிதொகு

உற்பத்தி நிதி(Financial products) அல்லது இசுதிசுனா(Istisna) என்பது உற்பத்தி / செயலாக்க / கட்டுமான பணிகளுக்கு பல கட்டங்கள் வாரியாக பணங்களை முதலீடு செய்வதால் தொழிலில் அல்லது கட்டுமானப்பணிகளில் முன்னேற்றத்தை எளிதாக்குகிறது. இங்கு வங்கி ஒரு வியபார பங்குதாரர்களாக இயங்குகிறது. பல தவனைகளாக தன் முதலீட்டில் தருகிறது. இலாப விகிதங்களை ஒப்பந்த அடிப்படையில் நினையிக்கப்படுகிறது.

நிரந்தர வைப்புதொகு

நிரந்தர வைப்பு(safekeeping) அல்லது வதீக்(Wadih) என்பது வங்கியில் வைப்பாளர் ஒருவர் வட்டியில்லாமல் தன்னுடைய கணக்கில் நிரந்தர வைப்பாக வைத்து இருக்கிறார். சில காலங்களில் அவர் அதை திருப்பிப்பெற்றுக்கொள்கிறார். அவருடைய பணத்தை வங்கி பயன்படுத்துவதால், அவருக்கு வங்கி நன்கொடைகள் தரும் .

காப்பீடுதொகு

காப்பீடு(Insurance) அல்லது தகபுல்(Takaful) என்பது தன் உடமையோ, வாகனமோ, நிறுவனமோ போன்ற மற்றவர்களின் பொருட்களுக்கு எதாவது ஆபத்தோ, தீங்கோ வந்தால் பயன்பெறவேண்டி ஒரு சிறிய அல்லது குறைந்தப்பட்ச அளவு வழக்கமான பங்களிப்புகளாக தானம் செய்ய ஒப்பு கொண்ட நிதிஉதவி தான் காப்பீட்டு பணம். அந்த பணத்தை அதனால் பாதித்தவர்களுக்கு பயன்பட செய்வது தான் காப்பீடு. இது ஓர் சமுக கூட்டுறவு திட்டம்.

மேற்கோள்கள்தொகு

  1. Brian Kettell, 2010, 'Islamic Finance in a Nutshell: A Guide for Non-Specialists, Wiley Press ISBN 978-0-470-74861-9
  2. "Islamic banking! Now, what is that?". The Economic Times. 11 சூலை 2005 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Kerala HC paves way for India's first Islamic bank". The Times of India. 04 பிப்ரவரி 2011 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  4. "What is Islamic banking?". The Economic Times. 10 அக்டோபர் 2005 அன்று பார்க்கப்பட்டது.
  5. Brian Kettell, 2011, Introduction to Islamic Banking and Finance, Wiley Press ISBN 9780-47097-804-7

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாமிய_வங்கி&oldid=3641564" இருந்து மீள்விக்கப்பட்டது