வணிக வங்கி (Commercial bank) என்பது வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புக்களை மீளப் பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம் ஆகும்.இதுவும் ஒருவகை வங்கியியல் முறைமையாகும்.இவற்றின் நடவடிக்கைகள் நாடுகளின் சட்டத்தினாலும் மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படும்.

வணிக வங்கியால் சகலவிதமான வைப்புக்களையும் பேணமுடியும்,இவற்றில் முக்கியமானது நடைமுறை கணக்குகளை பேணல் மற்றும் கடனாக்கம் செய்தல் (accepting deposits and making loans, as well as other fee based services) என்பனவாகும்.

வணிக வங்கிகளின் சேவைகள்

தொகு

இவற்றின் பிரதான தொழிற்பாடு

 • பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைப்(Deposit) பெறல் அவர்கள் கேட்கும் பொழுது அவற்றினைமீளளித்தல்
 • மேலதிக பற்றுகள்(Over Draft),கடன் வழங்கள்.( loans)
 • பிணைகள்,முறிகள் (Bonds) போன்றவற்றில் முதலீடல்.
 • காசோலை(Cheque) வழங்கல்.

ஏனைய தொழிற்பாடுகளாக

 • நிலையான வைப்புகளை பேணல்.
 • வெளிநாட்டு நாணய கணக்குகளைப் பேணல்.
 • வங்கி பாதுகாப்பு பெட்டக வசதிகளை ஏற்படுத்தல்.
 • நகை அடகுபிடித்தல்.
 • நாணயமாற்றம் செய்தல்.
 • சர்வதேச கொடுக்கல் வாங்கல்களப் பேணல்.
 • ATM அட்டை,கடனட்டை(Credit card) வழங்கல்

போன்றனவாகும்.

வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்

தொகு

இலங்கையின் சில வணிக வங்கிகள்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிக_வங்கி&oldid=3084829" இலிருந்து மீள்விக்கப்பட்டது