முதலீட்டு வங்கியியல்

முதலீட்டு வங்கி (Investment bank) என்பது முதலீட்டை உருவாக்கி அதனை பாதுகாப்பீடுகளிலும் கூட்டு நிறுவனங்களின் சேர்க்கையிலும், நிறுவனங்களை கையகப்படுத்துதலிலும் வியாபார முறையில் ஈடுபடுத்தும் நிதி நிறுவனங்களை குறிப்பதாகும். முதலீட்டு வங்கிகள் மூலதன சந்தைகளில் (சமபங்கு, பிணைப்பு இரண்டும்) பாதுகாப்பு பத்திரங்களை விநியோகம் செய்து விற்பதன் மூலமும், பிணைப்புகளை காப்பீடு செய்வதன் மூலமும், (கடன் உள்ளிருப்பு மாற்றங்களை (credit default swaps) விற்பது) மூலமும், நிறுவனங்கள் மற்றும் அரசிடமிருந்து வருவாயை கூட்டுகிறது. மேலும் சேர்க்கை மற்றும் கையகப்படுத்துதல் போன்ற பரிமாற்றங்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலமும் லாபம் ஈட்டுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் இவ்வகை சேவைகளை ஒருவர் வழங்குவதற்கு SEC (FINRA) ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்ட, உரிமம் பெற்ற தரகு-வியாபாரியாக இருக்க வேண்டும் பார்க்க SEC. கடந்த 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி வரை, அமெரிக்காவில் முதலீட்டு வங்கிகளும் வணிக வங்கிகளும் தனித்தனியாக செயல்பட்டன. மற்ற முன்னேறிய நாடுகள் (G7 நாடுகள் உட்பட) இந்த வேறுபாட்டை வழி வழியாக நிலை நிறுத்தவில்லை.

பெரும்பான்மையான முதலீட்டு வங்கிகள், வாடிக்கையாளர்களின் சேர்க்கை, கையகப்படுத்துதல், சொத்து விற்பனை அல்லது இதர நிதிசார் பணிகளுக்கு திறமையாக திட்டமிடும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது, அதாவது அடைந்த சொத்துகளை விற்றல், நிலையான வரவு, வெளிநாட்டு பணப் பரிமாற்றம், வர்த்தகப் பொருள் பாதுகாப்பு, சமபங்கு பாதுகாப்பு போன்ற சேவைகளை திட்டமிட உதவுகிறது.

பாதுகாப்பு பத்திரங்களை பணத்திற்கோ, மற்ற பாதுகாப்புகளுகோ (பரிமாற்றி வழங்கவும், பங்குகளை உருவாக்கவும்) அல்லது பாதுகாப்பு மேம்பாட்டிற்காக (கீழ் எழுதுதல், நிறுவனங்களின் விற்பனையாகா பங்கீடுகளை வாங்க ஒப்புதல், ஆய்வு, போன்றவற்றிற்காக) பயன்படுத்துதல் ஆகியவை "விற்பனைப் பகுதி" யில் அடங்கியதாகும்.

ஓய்வூதிய நிதி, சமபங்கு வைப்பு நிதி, ஹெட்ஜ் நிதி மற்றும் தன் முதலீட்டில் இருந்து அதிக பலனை எதிர்பார்த்து பொதுமக்கள் தங்கள் முதலீட்டை "விற்பனை பகுதியின்" சேவை மற்றும் விற்பனைப்பொருள் மீது ஈட்டுவது ஆகிய அனைத்தையும் நிர்வகிப்பதை "வாங்கும் பகுதி" என குறிப்பிடுகின்றனர். பல நிறுவனங்கள் இந்த இரண்டு பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.

அமெரிக்காவில், வால் தெருவில் (Wall Street) அமைந்துள்ள இருபெரு உலகப் புகழ்பெற்ற (bulge bracket) நிதி நிறுவனங்கள் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும், மார்கன் ஸ்டான்லி அமெரிக்க நிதி நிறுவனமும் நிதி நெருக்கடியை முன்னிட்டு செப்டம்பர் 22, 2008 ஆம் ஆண்டு முதல் மரபு சார் வங்கிகளாக உருமாறின [1]. பார்க்லேஸ், சிட்டி குரூப், கிரெடிட் சூசி, டட்ச் பேங்க், எச்.எஸ்.பி.சி, ஜெ.பி. மார்கன் சேஸ், பேங்கோ சான்டான்டர், பி.பி.வி.ஏ, யூபிஎஸ் ஏஜி இவையாவும் பெரிய புகழ் மிக்க நிதி நிறுவனங்களாக மட்டுமின்றி, சேமிப்பு நிதிகளை ஒப்புக் கொள்வதால் (இங்கு குறிப்பிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அமெரிக்க கிளையில்லை) "அகில வங்கிகளாக" கருதப்படுகின்றன.

முதலீட்டு வங்கிகளின் நிர்வாக அமைப்பு

தொகு

முதன்மையான செயல்பாடுகளும் பகுதிகளும்

தொகு

இவ்வங்கிகளின் முதன்மையான செயல்பாடு பொருட்களை வாங்குவதும் விற்பதுமேயாகும். வங்கிகள் துணிந்து உடமையாளர் வியாபாரங்களை மேற்கொள்கிறது, இது மிகச்சிறந்த விற்பனையாளர்கள் மூலம் வாடிக்கையாளரின் தொடர்பின்றி இந்த வியாபாரங்களை இயக்குகின்றது. "மூலதனத் துணிவு" என்று வழங்கும் தன் முழு அடையாளத்தை வெளியிடாத வியாபாரியின் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றிற்கும் முதலீடு செய்கிறது. வங்கிகள், வரவு செலவு நிச்சயமற்ற வியாபாரங்களின் அதன் சூழ் இடருக்கு ஏற்ற இணையான லாபத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. முதலீட்டு வங்கிகள் முன் அலுவலகம், மத்திய அலுவலகம் மற்றும் பின் அலுவலகம் என மூன்று பகுதிகளாக பிரிந்து செயல்படுகிறது.

முதலீட்டு வங்கிகள் பங்குகளை வழங்கும் நிறுவனங்களுகுக்கும், பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்களுக்கும் தமது சேவைகளை வழங்குகிறது. நிறுவனங்களுக்கு முதலீட்டு வங்கிகள் சந்தையில் பங்குகளை தகுந்த முறையிலும், விலையிலும் வழங்குவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறது. முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத கடனீட்டு பத்திரங்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. சுமாரான பங்கு பத்திரங்களை வெளியிடுவதால், முதலீட்டு வங்கிகள் தமது நற்பெயரை சந்தையில் கெடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, அதனால் வியாபாரமும் நட்டமடையலாம். அதனால், முதலீட்டு வங்கிகள் புதிய பங்குகளை சந்தைகளில் வழங்கும் பொழுது, மிகவும் கவனமாகவும், பொறுப்புடன் நடந்து கொண்டு, ஒரு பெரும் பங்கை வகிக்கிறார்கள்.

முன் அலுவலகம்

தொகு
  • முதலீட்டு வங்கியியல் என்பது முதலீட்டு வங்கிகளின் மரபு சார்ந்த ஒரு நிலை, இது வாடிக்கையாளர்களுக்கு மூலதன சந்தைகளில், நிதியை பெருக்குவதுடன் நிறுவனங்களின் சேர்க்கையிலும், கையகப்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளது. முதலீட்டு வங்கிகள் என்பது மரபு சார்ந்த முதலீட்டு வங்கிகளை குறிப்பதாகும், அவை வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பொதுவான முதலீட்டுச் சந்தையில் இருந்து ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கான மூலதன நிதியை திரட்ட உதவிகள் புரிகின்றன, அது கூடாமல் இதர நிறுவனங்களை இணைக்கவும் கையகப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்குகின்றன. முதலீட்டு வங்கி சேவைகளில் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, ஏலத்தில் பங்கேற்பவர்களுடன் இணைந்து செயல் படுவது, அல்லது கையகப்படுத்தும் நிறுவனத்தின் உறுப்பினர்களுடன் பேரத்திலீடுபடுவது போன்ற சேவைகள் அடங்கும். முதலீட்டு வங்கிகள் கூட்டாண்மை நிதி நிறுவனமாகவும் செயல்படுகிறது, மேலும் இந்தப் பிரிவு சேர்க்கையுடன் கையகப்படுத்தல் ஆகியவற்றையும் செயல்படுத்த ஆலோசனைகள் வழங்குகிறது. கையகப்படுத்த தகுதியுடைய நிறுவனங்களின் நிதி சார்ந்த தகவல்களுடன் கூடிய ஒரு புரிஇடை புத்தகத்தை தயாரித்து, அதன் அடிப்படையில் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிந்தால், வங்கி அதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வரும். இதற்காகவே முதலீட்டு வங்கியில் இரு பிரிவுகள் உள்ளன, ஒன்று தொழில் முறையிலும், இன்னொன்று உற்பத்திப் பொருளின் அடிப்படையிலும் செயல் படுகிறது. தொழில் முறை நிறுவனங்கள், நல வாழ்வு, தொழில் நுட்பம் ஆகிய குறிப்பிட்ட துறைகளை குவிமையமாக வைத்து செயல் படும். உற்பத்திப் பொருட்களுக்கான சேவைகளில் திட்ட நிதி, சேர்க்கை, கையகப்படுத்தல், சொத்து நிதி, குத்தகை நிதி, வடிவமைத்த நிதி, மாற்றியமைத்த நிதி ஆகிய வாடிக்கையாளர்களின் தனிவகை சேவைகளை நல்க முன்வருகிறது. இந்தப்பணிகள் பணம் ஈட்டுபவையாக இருந்தாலும், அதே அளவிற்கு இதில் போட்டியும் நிலையில்லாத் தன்மையும் நிலவுகிறது. இதைப்போன்றே இவ்வேலைகள் மிகவும் மன இறுக்கத்தை அளிக்கின்றன. முதலீட்டு வங்கியாளர்கள் பொதுவாக ஒருவாரத்தில் 80 முதல் 100 மணி நேரமும், வார விடுமுறை நாட்களிலும் மற்றும் இரவு நேரங்களிலும் வேலை செய்ய வேண்டியுள்ளது. முதலீட்டு வங்கிகள் முதலீட்டாளர்களை பாதுகாப்பு விநியோக முறையில் சந்தாதாரர்களாக்க முனைகிறது, அதன் மூலம் ஏலத்தில் எடுப்பவர்களையும் அல்லது இணைக்கும் இலக்குகளை தரகு செய்வதிலும் ஈடுபடுகிறது. முதலீட்டு வங்கிகளின் மற்ற விளக்கங்களில், சேர்க்கை மற்றும் கையகப்படுத்துதல் (M&A) மற்றும் நிறுவன நிதி ஆகியவையும் அடங்கும். முதலீட்டு வங்கியியல் பகுதி (IBD) பொதுவாக தொழில் வகை ஈட்டுத்தொகை மற்றும் உற்பத்திப் பொருள் ஈட்டுத்தொகை குழுக்கள் என இருவகையாக பிரிந்து செயல்படுகிறது. தொழில்வகை ஈட்டுத்தொகை குழு குறிப்பிட்ட தொழில்களில் கவனம் செலுத்துகிறது. அவை மருத்துவப் பிரிவு, தொழில் நிறுவனங்கள் அல்லது தொழில் நுட்பம், தொழில் நிறுவனங்களின் கீழே அமைந்துள்ள வெவ்வேறு பகுதி நிறுவனங்களுக்கு இடையே நல் உறவுகளை தக்க வைத்து வங்கிகளுக்கு வங்கிகளின் தொழில் வளர வழி செய்கிறது.. உற்பத்திப் பொருள் ஈட்டுத்தொகை குழு நிதி உற்பத்திப் பொருட்களில் கவனம் செலுத்துகிறது. அவை, நிறுவனங்களின் சேர்க்கையிலும், கையகப்படுத்துதலிலும், எளிதில் கிடைக்கும் நிதிகள், சமபங்குகள், மிகுந்த கடன் ஆகும், மேலும் பொதுவாக நிறுவனக் குழுக்களோடு இணைந்து வாடிக்கையாளர் தேவைகளை நிறைவு செய்வதிலும் கவனம் செலுத்துகிறது.
  • முதலீட்டு மேலாண்மை என்பது பல பாதுகாப்புப் பத்திரங்களையும் (பங்குகள், பிணைப்புகள் போன்றவை) மற்றும் சொத்துக்களையும் (எ.கா. நில விற்பனை) குறிப்பாக முதலீட்டாளர்களின் லாபத்திற்காக முதலீடு செய்து நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது. முதலீட்டாளர்கள் நிறுவனங்களாகவோ (காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிகள், நிறுவனங்கள் ஆகியன) அல்லது தனியார் முதலீடுகளாகவோ (முதலீட்டு ஒப்பந்தங்கள் மற்றும் இணைந்த முதலீட்டு திட்டங்கள், எ.கா. சமபங்கு வைப்பு நிதி) இருக்கலாம். முதலீட்டு வங்கியின் நிர்வாக அமைப்பு பொதுவாக இரு குழுக்களாக பிரிந்து செயல்படுகிறது, அவை தனியார் சொத்து நிர்வாகம் மற்றும் தனியார் வாடிக்கையாளர் சேவை என்பன ஆகும். சொத்து நிர்வாக சந்தை உருவாக்கலில், வியாபாரிகள் வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், சிறிது சிறிதாக லாபம் ஈட்ட முனைவர். முதலீட்டு வங்கியின் விற்பன்னர்களை விற்பனையாளர்களாக"கருதுகின்றனர், இவர்களின் முதன்மையான வேலை நிறுவனங்கள் மற்றும் அதிக அளவில் முதலீடு செய்பவர்களுக்கு தொழில்முறை அறிவுரை அளித்து (விற்பனை பொருளின் தரம் நுகர்வோர் பொறுப்பு எனும் வகையில்) அவர்களின் வியாபாரத்தை பெறுதலேயாகும். விற்பனைக்குழு பின் வாடிக்கையாளரின் தேவைகளை சரியான வியாபாரக் குழுக்களுக்கு தெரியப்படுத்தும், அவை இதற்கான விலை நிர்ணயித்து வியாபாரம் செய்வதிலும் அல்லது வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி வடிவமைத்து விற்பதிலும் முற்படும்.
  • வடிவமைப்புக்குழு (Structuring) மிக சமீப காலங்களில் சொத்துகள் நிர்வாகம் தொடங்கியதுடன் வந்த பிரிவு, இதில் அதி நுணுக்கமான மற்றும் கணக்கில் சிறந்த மேலாளர்கள் அதிக லாபம் ஈட்டக்கூடிய, அதே சமயத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ற விற்பனைப் பொருட்களை உருவாக்க முற்படுகின்றனர். கணிதமுறை தேவைகளால் கணிதம் மற்றும் இயற்பியல் முனைவர்களுக்கு (Ph.D.) நிறை ஆய்வாளர்களாக பணியாற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
  • வியாபார வங்கியியல் முதலீட்டு வங்கியின் தனியார் சமபங்குகளைப் பற்றியதாகும்.[2] கோல்ட்மேன் சாக்ஸ் மூலதன பங்குதாரர் (Capital Partners) மற்றும் ஜெபி மார்கன்ஸ் ஒரு சமபங்குதாரர் (One Equity Partners). (பிரித்தானிய ஆங்கிலத்தில் முதலில் முதலீட்டு வங்கியியலை "வியாபார வங்கியியல்" என்றே குறிப்பிட்டனர்.)
  • ஆராய்ச்சிப் பிரிவு நிறுவனங்களை மதிப்பீடு செய்து அவற்றின் எதிர்கால வளர்ச்சி, "வாங்கும்" அல்லது "விற்கும்" விகித நிர்ணயம் ஆகியவற்றின் ஆய்வறிக்கைகளை வெளியிடுகிறது. ஆராய்ச்சிப் பிரிவினால் நேரடியான வருமானம் ஏற்படாவிடினும் அதன் மதிப்பீடு, வியாபாரங்களுக்கும் விற்பனைப்பிரிவின், வாடிக்கையாளர்களுக்கான அறிவுரைக்கும் மற்றும் முதலீட்டு வங்கி அதன் வாடிக்கையாளர்களின் தேவை நிவர்த்தி செய்வதற்கும் உதவுகிறது. முதலீட்டு வங்கிக்கும் அதன் ஆய்வறிக்கைக்கும் முரண்பாடுகள் உள்ளதால் வங்கியின் லாபம் பாதிக்கப்படுகிறது. சமீப காலங்களில் முதலீட்டு வங்கி மற்றும் ஆராய்ச்சி இவற்றிடையேயான உறவு மேம்பட்டுள்ளது, இருந்தாலும் பொது மற்றும் தனியார் இயக்கங்களுக்கிடையே சைனீஸ் சுவர் எழுந்துள்ளது.
  • செயல்திட்டப் பிரிவு வெவ்வேறு சந்தைகளில் மேற்கொள்ள வேண்டிய உத்திகளை உள் மற்றும் வெளி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது. சிறு தொழில் முதல் குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் வரை செயல்திட்டப் பிரிவாளர்கள் நிறுவனங்களையும், தொழிற்கூடங்களையும் பெரு பொருளாதார கண்ணோட்டத்தில் அளவீடு செய்து பட்டியலிடுகின்றனர். இச்செயல் திட்டம் பல நேரங்களில் சந்தையில் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்கிறது, அதாவது எத்திசையில் நிறுவனத்தின் சொத்து மற்றும் வளர்திறன் செல்கிறது, விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தரும் அறிவுரை மற்றும் கட்டமைப்பினால் ஏற்படும் புதிய விற்பனைப் பொருட்கள் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.

மத்திய அலுவலகம்

தொகு
  • இடர்கணிப்பீட்டு நிர்வாகம் என்பது சந்தையை அனுமானிப்பதிலும் மற்றும் வியாபாரிகள் கடனளிப்பதால் ஏற்படும் கடன் இடர்வாய்ப்புகளை குறிப்பிடுவதிலும் அவர்கள் செய்யும் மூலதனத்தை 'தவறான' வியாபாரங்களால் ஏற்படும் நஷ்டம் பாதித்து விடாமல் பாதுகாப்பதுவுமாகும். மத்திய அலுவலகத்தின் மற்றொரு முக்கியமான பங்கு மேலே குறிப்பிட்ட பொருளாதார இடர் வாய்ப்புகளை துல்லியமாக கணிக்கவும் (வாடிக்கையாளருடன் பொருளாதார அடிப்படையில் கொண்ட ஒப்பந்தத்திற்கேற்ப), சரியான முறையில் விளக்கவும் (பல்வேறு பொருத்தமான அமைப்புகளில் உள்ள நியம ஒப்பந்த மாதிரிகள்) மற்றும் குறித்த நேரத்தில் (வியாபாரத்தின் 30 நிமிடங்களுக்குள்) செயல்படுத்துவதுமாகும். சமீப வருடங்களில் தவறுகளால் ஏற்படும் இடர்வாய்ப்புகளை "செயல் இடர்வாய்ப்பு" என கூறுகின்றனர் மற்றும் மத்திய அலுவலகங்கள் நம்பிக்கை வழங்கும் பொது இந்த இடர்வாய்ப்புகளையும் எதிர்கொள்ளும் வழிகளை சேர்த்தே அறிவுறுத்துகின்றது. இந்த நம்பிக்கை வழங்காவிடில் சந்தை மற்றும் கடன் இடர்வாய்ப்பு அனுமானங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருப்பதில்லை மேலும் தவறான அனுமானங்களுக்கும் வழிவகுக்கின்றது.
  • நிதி ப்பகுதி வங்கியின் முதலீட்டு நிர்வாகம் மற்றும் இடர்வாய்ப்பு கண்காணிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பேற்கிறது. நிறுவனங்களின் நிதி செயல்பாடுகளை கண்காணிப்பது மற்றும் அனுமானித்து நிதிப்பகுதி உயர் நிர்வாகத்திற்கு, நிர்வாகத்தின் பாதுகாப்பின்மையால் அமையும் முழு இடர்வாய்ப்புகளை கட்டுப்படுத்தவும் லாபம் ஈட்டவும் மற்றும் நிர்வாகத்தின் பல வியாபாரங்களின் அமைப்புகள் பற்றியும் அறிவுறுத்தும் பிரதான ஆலோசக அமைப்பாக செயல்படுகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய இடங்களில் நிதி தணிக்கை அலுவலர் என்பவர் நிர்வாகத்தின் உயர்ந்த பதவி உடையவராவார் மற்றும் இவர் உயர் நிதி அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் வேலை செய்பவராவார்.
  • விதிமுறைப்பகுதி முதலீட்டு வங்கியின் தினசரி செயல்பாடுகள் அரசாங்க விதிமுறைப்படியும் அகில உலக விதிமுறைகள் கடைபிடித்தும் நடக்க பொறுப்பேற்கிறது. பெரும்பாலான நேரங்களில் இப்பகுதி பின் அலுவலகமாக கருதப்படுகிறது.

பின் அலுவலகம்

தொகு
  • செயல்பாடுகள் முடிந்த வியாபாரங்களை சரிபார்த்தலும், தவறுகளை சரிசெய்வதும் மற்றும் விற்பது வாங்குவதை ஆகிய பரிமாற்றங்களை முறைப்படுத்துவதாகும். சிலர்[யார்?] பின் அலுவலக செயல்பாடுகள் அதிக வேலை பாதுகாப்பை வழங்குவதுடன் முதலீட்டு வங்கியின் எல்லா பகுதிகளையும் ஒப்பிடுகையில் மிக குறைந்த அளவிலேயே வேலை சார் முன்னேற்றத்திற்கான வாய்ப்பை அளிப்பதாக எண்ணினாலும் பல நிறுவனங்கள் இந்த செயல்பாடுகளை வெளி ஆட்களைக் கொண்டு நிறைவேற்றுகிறது. ஆனாலும் இந்த பகுதி ஒரு வங்கியின் நூதன பகுதியாகும். நிதி சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் மிகுந்த போட்டியிருப்பதால் முதல் கட்ட வேலைகளுக்கு கல்லூரி பட்டங்கள் தேவைப்படுகின்றன. வங்கிகளின் பல பகுதிகளில் நடக்கும் செயல்பாடுகளை ஆழமான முறையில் அறிந்து கொள்ள நிதியியல் பட்டம் அத்தியாவசியமாக உள்ளது.
  • வங்கியின் தொழில்நுட்பப் பகுதி என்பது அதன் தகவல் தொழில் நுட்பப் பகுதியை குறிக்கும். அனைத்து பெரிய முதலீட்டு வங்கிகளும் கணிசமான அளவு தன் நிறுவன மென் பொருட்களை கொண்டிருக்கின்றன, இவற்றை அதன் தொழில்நுட்ப ஆதரவு குழுவினர் வடிவமைத்து பேணிக் காக்கின்றனர். கடந்த சில வருடங்களில் விற்பனை மற்றும் வியாபார இடங்களில் மின்னணு இயந்திரமாக்கலால் தொழில் நுட்பம் பெரிதளவில் மாறியுள்ளது. சில நிறுவனங்கள் பாதுகாப்பின் பொருட்டு கடினமான மென்பொருள் வழிமுறைகளை பயன்படுத்தி வியாபாரம் செய்துவருகிறது.

சைனீஸ் வால்

தொகு

முதலீட்டு வங்கியை தனியார் பணி, பொதுப் பணி என இரண்டாக பிரித்து அவற்றிற்கிடையே ஒரு சைனீஸ் வால் அதாவது தகவல் தடுப்பை ஏற்படுத்துவதன் மூலம் அவை இரண்டின் தகவல்களும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். வங்கியின் தனியார் பகுதி, பொதுப்படையாக வெளிப்படுத்தக் கூடாத தனியார் உள்நிர்வாக தகவல்களை நிர்வகிக்கும், பொதுப்பகுதி பங்கு ஆய்வு போன்ற பொதுத் தகவல்களை நிர்வகிக்கும்.

நிறுவன அளவு

தொகு

2007ஆம் ஆண்டில் அகில உலக முதலீட்டு வங்கியியலின் வரவு, தொடர்ந்து ஐந்தாவது வருடமாக $84.3 பில்லியனுக்கு உயர்ந்துள்ளது.[3] கடந்த வருடத்தை விட இது 21% அதிகம் மற்றும் 2003 ஆம் ஆண்டைப் போல இரண்டு மடங்கு ஆகும். கட்டண வருவாயைப் பொறுத்த வரை சாதனை வருடமாக இருந்த போதிலும், பல முதலீட்டு வங்கிகள் யூ.எஸ்ஸின் உப முதன்மை (sub-prime) பாதுகாப்பு முதலீடுகளால் பெருத்த நஷ்டத்தை அனுபவித்துள்ளது.

2007 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா, முதலீட்டு வங்கியியலில் முதன்மையான பங்கு வகித்தது, மொத்தத்தில் 53%, கடந்த பத்து வருடங்களில் இந்த விகிதம் சிறிது சரிந்துள்ளது. ஐரோப்பா (மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா) பத்து வருட முன்பிருந்த தனது 30% பங்கிலிருந்து சிறிது உயர்ந்து, மொத்தத்தில் 32% பங்கை உருவாக்கியுள்ளது. [மேற்கோள் தேவை]ஆசிய நாடுகள் மீதமுள்ள 15% உருவாக்கியுள்ளது. கடந்த பத்து வருடங்களில், யூ.எஸ்ஸின் கட்டண வருவாய் 80% உயர்ந்துள்ளது.[மேற்கோள் தேவை] இதை ஒப்பிடுகையில், இதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் கட்டண வருவாய் 217% மற்றும் ஆசியாவில் 250% உயர்ந்துள்ளது.[மேற்கோள் தேவை] இந்த தொழில் நியூயார்க் நகரம், லண்டன் மற்றும் டோக்கியோ உட்பட, முக்கிய நிதி நிறுவன மையங்கள், குறைந்த எண்ணிக்கையில் அதிகம் செயல்படுகின்றன.

முதலீட்டு வங்கியியல் பல்வேறு அகில உலக தொழில்களில் ஒன்று அதனால் அது தொடர்ச்சியாக அகில உலக நிதி சந்தையின் பல்வேறு சவால்களான புதிய முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. முதலீட்டு வங்கியியலின் வரலாற்றில், அனைத்து முதலீட்டு வங்கியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வர்த்தகப்பொருளாக்கம் (commoditize) செய்ய வேண்டும் என்பதே அனைவரும் விரும்பும் விதியாகும். வாடிக்கையாளர்களை வெற்றி கொள்ளும் பொருட்டும் புதிய சந்தைகளின் வியாபார நெளிவு சுளிவுகளை அறியும் பொருட்டும் வங்கியாளர்கள் அதிக லாபம் தரும் புதிய தயாரிப்புகளை தொடர்ந்து கண்டுபிடித்து தயாரித்து வருகின்றனர். எனினும் இவை, காப்புரிமம் அல்லது பதிப்புரிமை செய்யாமல் இருப்பதால் போட்டி வங்கிகள் இவற்றைப் போலவே போலிகளை விரைவாக உருவாக்கி வியாபார லாபத்தை குறைத்து விடுகின்றன.

உதாரணத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு பிணைப்புகள் விற்றல் மற்றும் சமபங்குகள் அளித்தல் இப்போது வர்த்தக தொழிலாகி விட்டது,[மேற்கோள் தேவை] வர்த்தகம் நன்கு நடக்கும் போது வழிமுறைப்படுத்துதல் மற்றும் சொத்துக்கள் வணிகம் அதிக லாபத்தை கொடுக்கும் - கடினமான நேரங்களில் அதிக நஷ்டத்தையும், அதாவது 2007 ஆம் ஆண்டில் துவங்கிய பொருளாதார நெருக்கடியை தோற்றுவிக்கும். ஒவ்வொரு தன்னிச்சை ஒப்பந்தத்தையும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்க வேண்டும் மற்றும் இவற்றில் சிக்கலான கொடுக்கல் வாங்கல் மற்றும் அபாயங்கள் இருக்க வாய்ப்புள்ளது. பட்டியலிட்டுள்ள தேர்வு ஒப்பந்தங்கள் பெரிய பரிமாற்றங்கள் மூலம் அதாவது சிபிஒஇ போன்றவை மூலமாக வியாபாரம் செய்யப்படும், மேலும் அவை பொது சமபங்கு பாதுகாப்பு பத்திரங்கள் போல வர்த்தகமாகும்..

மேலும், பல தயாரிப்புகளை வர்த்தகம் செய்யும் பொழுது, முதலீட்டு வங்கியியலில் அதிக அளவு இலாபம் சொத்து வர்த்தகத்தின் போது கிடைக்கும், மேலும் அதில் அளவு நல்ல நெட்வொர்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் (முதலீடு வங்கி அதிக அளவு வர்த்தகம் செய்யச் செய்ய, சந்தை எவ்வாறு உள்ளது என்பது பற்றி அறிய முடிவதால், வாடிக்கையாளர்களுக்கு நன்கு வழிகாட்ட முடியும்.)

முதலீட்டு வங்கியியலில் மிக துரிதமாக வளர்ந்து வரும் பிரிவு போது நிறுவனங்களில் ஈடுபடும் தனியார் மூலதனம் ஆகும் (PIPE, அதாவது D விதிமுறை அல்லது S விதிமுறை). இத்தகைய பரிவர்த்தனைகள், நிறுவனங்கள் மற்றும் பதிவு செய்த முதலீட்டாளர்களுக்கும் இடையே தனியே உடன்படிக்கை செய்து நடத்தப்படும். இந்த PIPE பரிவர்த்தனைகள் விதியற்ற 144A பரிவர்த்தனைகள். பெரிய உலகப்புகழ் பெற்ற தரகு நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்களும் இவ்வகை வியாபாரத்திற்கு போட்டியிடுகின்றன. இவ்வகை நிறுவனங்களிலிருந்து சிறப்பு வகை கையகப்படுத்தும் நிறுவனங்கள் (SPACs) அல்லது வெற்றுக் காசோலை நிறுவனங்கள் உருவாகி உள்ளன.

மேலான இணைப்பு

தொகு

அமெரிக்காவில் 1929 ஆம் ஆண்டில் பங்குச்சந்தை வீழ்ச்சியினால் ஏற்பட்ட கிளாஸ் ஸ்டீகல் விதிமுறை வங்கிகளை வைப்புத் தொகை ஏற்றுக் கொள்வதிலிருந்தும் பாதுகாப்புத் தொகை இடர்வாய்ப்பை அறிவதிலிருந்தும் தடை செய்ததால் மூதலீட்டு வங்கிகள் வணிக வங்கிகளிலிருந்து பிரிந்து செயல்பட ஆரம்பித்தன. அதன்பின் 1999 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கிராம்-லீச்-ப்லைலி விதிமுறையை பெரிய நிறுவனங்கள் கடைபிடிக்க ஆரம்பித்தன.

சமீப கால வளர்ச்சியில் குறிப்பிடும் வகையிலுள்ளது மேலான இணைப்பில் உருவான கடன் பாதுகாப்பு ஆகும். [மேற்கோள் தேவை]முன்பு முதலீடு வங்கிகள் நிதியாளர்களை அதிக பணம் வட்டிக்குகொடுக்க உதவி புரிந்ததோடு நிதியாளரின் தீர்க்காத கடன்களை பிணைப்புகளாக மாற்றுவதன் மூலம் அதிக கால மாறா வட்டி விகிதத்தை அளித்து வந்தது. உதாரணமாக அடகு நிதியாளர் வீட்டு கடன் பெற இயலும், பின்னர் அந்த கடனுக்கு முதலீட்டு வங்கியை பிணைப்புகளை விற்கச் செய்து, பிணைப்புகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை புதிய கடன் வாங்க உபயோகப்படுத்த இயலும், நிதியாளர் வங்கியில் கடனாக வாங்கிய பணத்தை, பிணைப்பு வைத்துள்ளவருக்கு அளிப்பர். இந்த செயலுக்கு பாதுகாப்பாக்கம் என்று பெயர். எனினும் நிதியாளர்கள் கடனையே குறிப்பாக அடகு கடனை பாதுகாப்பாக்க முனைந்தனர். இதனால், மேலும் இது தொடரும் என்ற பயத்தினால் பல முதலீட்டு வங்கிகள் தாமே நிதியாளாராகி [4] கடன்களை உருவாக்கி அதனை பாதுகாப்பாக்க முனைந்தனர். வணிக அடகுகளில் பல முதலீட்டு வங்கிகள் லாபமற்ற வட்டி விகிதங்களில் [மேற்கோள் தேவை](loss leader interest rate) கடன் அளித்து கடன்களை பாதுகாப்பகப்படுத்தி பணம் ஈட்ட நினைத்தது. இந்த முறை முதலீட்டாளர் மற்றும் உருவாக்குனர்களுக்கு பிரபலமான நிதி கொடுக்கும் வாய்ப்பாக அமைந்தது.[மேற்கோள் தேவை] பாதுகாப்பக வீட்டு கடன்கள், 2007 ஆம் ஆண்டில் உருவான உபமுதன்மை அடகு நெருக்கடியை, முதலீட்டாளர்களுக்கு மிகவும் அபாயமான கடனை அவ்வாறு இல்லாதது போல காண்பித்ததால் மோசமாக்கியது.

ஆர்வ முரண்பாடுகள்

தொகு

சாத்தியமுள்ள ஆர்வ முரண்பாடுகள், வங்கியின் பல்வேறு பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது, சந்தையை சாதுர்யமாக கையாண்டு தமக்கு சாதகமான நிதி நிலை ஏற்பட வழி செய்யலாம். முதலீட்டு வங்கியியலை நெறிப்படுத்தும் அதிகாரிகள் (யுனைடெட் கிங்டெமின் FSA மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸின் SEC) வங்கிகள் முதலீட்டு வங்கியியல் ஒருபக்கமும் சமபங்கு ஆய்வு மற்றும் வணிகம் மறுபக்கம் இருக்குமாறு இவற்றின் தகவல் தொடர்புக்கிடையே ஒரு சீனப் பெருஞ்சுவரை அதாவது தகவல் தடுப்பை ஏற்படுத்துமாறு கூற வேண்டும்.

முதலீட்டு வங்கியிடலில் காணப்படும் சில முரண்பாடுகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன:

  • சமபங்கு ஆராய்ச்சி நிறுவனங்களை முதலீட்டு வங்கிகள் நிர்வகித்து வந்தது. சமபங்கு ஆய்வாளர்கள் பொதுவாக ஒரு நிறுவனத்திற்கான ஈடு செய்தலை துவக்கி வைப்பதன் மூலம் இணைப்பை மேம்படுத்தி அதன் மூலம் அதிக லாபமுள்ள முதலீட்டு வங்கியியல் தொழிலுக்கு கொண்டு செல்வர். 1990 ஆம் ஆண்டுகளில் பல சமபங்கு ஆய்வாளர்கள் தவறான முறையில், நேரடியாக முதலீட்டு வங்கியியல் தொழிலுக்கு கொண்டு செல்வர். நாணயத்தின் மறுபக்கமாக: நிறுவனங்கள் தமது பங்கு சாதகமாக நிர்ணயிக்கப்படாவிடில் முதலீட்டு வங்கியிடலை தமது போட்டியாளர்களுக்கு திருப்பும் நிலைக்கு தள்ளியது. அரசியல்வாதிகள் இத்தகைய செயலை சமூக விரோதமானது என சட்டம் இயற்றினர். 2001 ஆம் ஆண்டில் பங்குச் சந்தை சரிவினைத் தொடர்ந்து ஒழுங்குமுறையாளர்களிடமிருந்து வந்த கட்டுப்பாடு, தொடர்ச்சியான வழக்குகள், கணக்கு தீர்த்தல் மற்றும் குற்றச்சாட்டுகள் இந்த தொழிலுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது.[மேற்கோள் தேவை]
  • பல முதலீட்டு வங்கிகள் சில்லறை வியாபார தரகுகளையும் நிர்வகித்து வந்தது. 1990 ஆம் ஆண்டுகளில் சில சில்லறை வியாபாரத் தரகுகள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு பத்திரங்களை விற்றது அவை குறிப்பிட்ட நிபந்தனைகளை எதிர்கொள்ளவில்லை. இது முதலீட்டு வங்கியியல் தொழிலை மாற்றியது, அல்லது பொது மக்களின் பங்கு நிர்ணயம் பற்றிய கருத்தை தமக்கு சாதகமான நிலையாக்க பொதுமக்களுக்கு அதிகமான பங்குகளை விற்கும் நிலைக்கு கொண்டு வந்தது.
  • முதலீட்டு வங்கிகள், தம்முடைய சொந்த கணக்குக்காக அதிக வியாபாரங்களை செய்வதால், சிலவிதமான முன்னோட்டத்தில் ஈடுபடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. முன்னோட்டம் என்பது பங்குத் தரகர் சட்டவிரோதமாக, வாடிக்கையாளர்கள் முன்பே வழங்கிய பாதுகாப்பு பத்திரங்களின் ஆணைகளை பூர்த்தி செய்வதற்கு முன், தன்னுடைய கணக்குக்கு அப்பத்திர ஆணைகளை செயல்படுத்தி அதனால் ஏற்படும் விலை மாற்றங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகும்.

குறிப்புகள்

தொகு
  1. http://www.guardian.co.uk/business/2008/sep/22/wallstreet.morganstanley
  2. "வியாபார வங்கியியல்: கடந்த மற்றும் நிகழ்காலம்". Archived from the original on 2017-12-07. பார்க்கப்பட்ட நாள் 2009-09-18.
  3. "வங்கியியல் தொழில் தொடர்" (PDF). Archived from the original (PDF) on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-09-18.
  4. "மார்கன் ஸ்டான்லி நில விற்பன்னர் கடன்". Archived from the original on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-09-18.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலீட்டு_வங்கியியல்&oldid=3925574" இலிருந்து மீள்விக்கப்பட்டது