திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் உள்ள ஒரு ஊர்

திருப்புவனம் (ஆங்கிலம்:Thirupuvanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

திருப்புவனம்
திருப்புவனம்
அமைவிடம்: திருப்புவனம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°49′32″N 78°15′16″E / 9.825448°N 78.254328°E / 9.825448; 78.254328
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் திருப்புவனம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

24,554 (2011)

1,228/km2 (3,181/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 20 சதுர கிலோமீட்டர்கள் (7.7 sq mi)

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6,240 வீடுகளும், 24,554 மக்கள்தொகையும் கொண்டது.[4] இது 20 சகிமீ 18 பரப்பும், வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

பெயர்க்காரணம் மற்றும் வரலாறு

தொகு

திருப்புவனம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உச்சரிப்பில் திரிபு ஏற்பட்ட பெயராகும். "திருப்பூவணம்" என்பது திரிந்து திருப்புவனம் ஆகியது. இங்கு பாரிசாதப் பூவின் படிமம் சிவலிங்கமாக உள்ளது. எனவே சிவலிங்கத்தின் பெயர் "பூவணன்" என்பதாகும். இதன் காரணமாக இந்த ஊருக்குத் திருப்பூவணம் என்ற பெயர் உண்டானது. பாண்டிய நாட்டுத் தலங்களில் நால்வர் பாடலும் பெற்ற தலம் இது ஒன்றே. இவ்வூரானது பாண்டிய நாட்டின் ஆளுமையின் கீீழ் வந்தது, பின்னர் சிறிது காலம் கழித்து சிவகங்கைச்சீமையின் தோற்றத்திற்கு பின்பு இவ்வூரானது சிவகங்கை சீீமையின் எல்லையாகவும் திகழ்ந்தது. 36ஆவது "திருவிளையாடல்" நடைபெற்ற தலம் "எலும்பு பூவாக மாறிய தலம்", காசிக்கு வீசம் கூட எனப் புகழ் பெற்ற தலம்[6]. திருப்புவனம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

ஊரின் சிறப்பு

தொகு

மதுரை- இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் 20-வது கிலோ மீட்டரில், வைகை ஆற்றங்கரையில் தெற்கு பகுதியில் உள்ளது. காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள வைகை ஆற்றில் அஸ்தியை கரைத்து செல்கின்றனர்.

இதனையும் காண்க

தொகு

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. Thirupuvanam Population Census 2011
  5. பேரூராட்சியின் இணையதளம்
  6. திருப்பூவணம் புராணம், திருப்பூவணக் காசி, புவனம் போற்றும் பூவணம், நூல்கள். ஆசிரியர்: முனைவர். கி.காளைராசன்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புவனம்&oldid=4170565" இலிருந்து மீள்விக்கப்பட்டது