பூவணம்
பூவணம்
பூவணம் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | பட்டுக்கோட்டை |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,623 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பின்கோடு | 614803 |
இடக் குறியீடு | 91 4373 |
வாகனப் பதிவு | TN 49 |
மனித பாலின விகிதம் | 1070 ♂/♀ |
பூவணம் இந்தியாவில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஓர் ஊராகும். இக் கிராமம் பட்டுக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்டது. இது காவேரிச் சமவெளியில் உள்ள அக்கினியாறு படுகையில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமத்தின் கிழக்குப்பகுதி கீழ்பூவணம் என்றும் மேற்கு பகுதி மேல்பூவணம் என்றும் அழைக்கப்படுகிறது.
சொற்பிறப்பு
தொகுபூவணம் என்ற ஊரின் பொருளாக "பூ ஏவுகணை" (வானவேடிக்கை) என வட்டார மொழியில் வழங்கப்படுகிறது.
புவியியல்
தொகுஇந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள காவிரி சமவெளியில் பூவணம் என்ற இக்கிராமம் 10.21 ° N 79.16 ° E ("விக்கிமபியா") இல் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலும், பட்டுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ.,தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது. பூவனத்தின் வடக்குப் பகுதியை அக்கினியாறு சூழ்ந்துள்ளது.
மக்கள் தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பூவணம் கிராமத்தின் மக்கள் தொகை 1,623 ஆகும். அதில் 784 பேர் ஆண்களும், 839 பேர் பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் 1070. கல்வியறிவு விகிதம் 67.60 ஆகும்.[1]
பொருளாதாரம்
தொகுபூவணத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக உழவு வேளாண் சார்ந்ததாகும். விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களும் இங்குள்ள மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. காவேரி நதிச் சமவெளியில் பூவணம் அமைந்துள்ளதால் தென்னை, பனை மற்றும் நெல் சாகுபடி போன்ற விவசாயப் பயிர்களை வளர்ப்பதற்கு ஏற்ற நிலம் அமைந்துள்ளது. எனவே பூவணம் கிராமத்தில் பயிரிடுதல் மற்றும் இதர விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தின் அருகே நான்கு குளங்கள் அமைந்துள்ளது.
எல்லைகள்
தொகுகட்டையங்காடு, சோகனபுரம், செண்டாக்கோட்டை,எடுதணிவயல் மற்றும் பள்ளத்தூர் போன்ற கிராமங்கள் இந்த கிராமத்தின் எல்லைகளாக உள்ளது.
கோவில்கள்
தொகு- ஆகசா மாரியம்மன் கோவில்( யாதவா தெரு)
- ஸ்ரீ விஜய விநாயகர் கோவில் (யாதவா தெரு)
- ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில்
- அய்யனார் கோயில்
- புஷ்ப புவனேஷ்வரர் கோயில், அக்கினியாறுக்கு அருகாமையில் அமைந்துள்ளது..
தேவாலயங்கள்
தொகு- .செயின்ட் சேவியர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை
பள்ளிகள்
தொகு- பஞ்சாயத் யூனியன் தொடக்கப் பள்ளி, கீழ்பூவணம்.
- பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி, மேல்பூவணம்.
மேற்கோள்கள்
தொகு- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-13.
- "Wikimapia".