மாங்குடி, திருநெல்வேலி மாவட்டம்

(மாங்குடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாங்குடி (ஆங்கிலம்: (Mangudi (Tirunelveli District), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1]

மாங்குடி
கிராமம்
மாங்குடி is located in தமிழ் நாடு
மாங்குடி
மாங்குடி
மாங்குடி is located in இந்தியா
மாங்குடி
மாங்குடி
ஆள்கூறுகள்: 9°21′16″N 77°31′23″E / 9.354519°N 77.522922°E / 9.354519; 77.522922
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,957
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
626111

அருகில் அமைந்த நகரங்கள்: சங்கரன்கோவில், திருநெல்வேலி, இராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும்.

வரலாறு

தொகு
சங்ககாலத்தில் இந்த மாங்குடியில் வாழ்ந்த புலவர் மாங்குடி கிழார்.
மதுரைக் காஞ்சி எழுதிய இவர் தன்னை மாங்குடி மருதனார் என்று சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார்.
சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன.

மாங்குடி தொல்லியல் களம்

தொகு

தமிழ்நாடு தொல்லியல் துறையினர், மாங்குடியில் 2001-2002ல் அகழ்வாராய்ச்சி செய்த போது, கிமு இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்களின் துண்டுகள் கண்டுபிடித்தனர்.[2]

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3957 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 1994 ஆண்கள், 1963 பெண்கள் ஆவார்கள். மாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 75.12% ஆகும்.

ஆதாரங்கள்

தொகு
  1. Mangudi
  2. "Department of Archaeology - Excavation- Mangudi". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  3. கிராமம் - திருநெல்வேலி மாவட்டம்; சங்கரன்கோவில் வட்டம்; மாங்குடி கிராமம் 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை

வெளி இணைப்புகள்

தொகு