திருப்பத்தூர் வட்டம் (சிவகங்கை மாவட்டம்)

திருப்பத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருப்பத்தூர் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் திருப்பத்தூர், இளையாத்தங்குடி, நாச்சியார்புரம், நெற்குப்பை, திருக்கோட்டியூர் என 5 உள்வட்டங்களும் 59 வருவாய் கிராமங்களும் உள்ளன.[1] திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 275,779 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 138,228 ஆண்களும், 137,551 பெண்களும் உள்ளனர். 68,157 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 81.4% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.88% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 995 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 29191 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 952 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 41,647 மற்றும் 25 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.3%, இசுலாமியர்கள் 5.75%, கிறித்தவர்கள் 1.7% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு