நிசாப் புயல் (2008)
நிசாப் புயல் (Cyclone Nisha) என்பது 2008 வட இந்தியப் பெருங்கடற்புயற்காலத்தின்போது ஏற்பட்ட ஒன்பதாவது புயல் ஆகும். அத்துடன் 2008ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஏழாவது புயலாகும். இப்புயல் நவம்பர் 25, 2008இல் தோன்றி, நவம்பர் 29, 2008 வரை நீடித்தது. நிசாப் புயல் இலங்கையிலும் இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
வெப்ப வலயப் புயல் | |
---|---|
நிசாப் புயல் | |
தொடக்கம் | நவம்பர் 25, 2008 |
மறைவு | நவம்பர் 29, 2008 |
உயர் காற்று | 3-நிமிட நீடிப்பு: 85 கிமீ/ம (50 mph) 1-நிமிட நீடிப்பு: 100 கிமீ/ம (65 mph) |
தாழ் அமுக்கம் | 996 hPa (பார்); 29.41 inHg |
இறப்புகள் | 204 |
சேதம் | $800 மில்லியன் (2008 US$) |
பாதிப்புப் பகுதிகள் | இலங்கை, இந்தியா |
2008 வட இந்தியப் பெருங்கடல் புயற்காலம்-இன் ஒரு பகுதி |
பெயரிடல்
தொகுஇப்புயலுக்கு நிசா என்ற பெயரை வங்காளதேசம் சூட்டியது.[1]
சேதங்கள்
தொகுஇலங்கை
தொகுநவம்பர் 25, 2008இல் வட இலங்கையைத் தாக்கிய நிசாப் புயல் காரணமாக 15 பேர் இறந்தனர். கடும்மழை, வெள்ளப்பெருக்கு என்பவற்றினால் வன்னியில் 60000இற்கும் 70000இற்கும் இடைப்பட்டோரும் யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ 20000 பேரும் இடம்பெயர்ந்தனர்.
இந்தியா
தொகுதமிழ்நாட்டில் வீசிய நிசாப் புயல் காரணமாக 189 பேர் இறந்தனர்.[2] சில இடங்களில் கடும் மழை பொழிந்தது. ஒரத்தநாட்டில் இரண்டு நாட்களில் 990 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவானது. இந்தியாவில் 3789 கோடி பெறுமதியான சொத்துகள் சேதமடைந்தன.
மேற்கோள்கள்
தொகு- ↑ லைலா புயலுக்குப் பெயர் வைத்த பாகிஸ்தான்-அடுத்த புயல் 'பாண்டு'
- ↑ ["வங்காள விரிகுடாவுக்கு மேலிருந்து தாழமுக்கம் வலுக்குறைகிறது: வளிமண்டலவியற்றிணைக்களம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-04. வங்காள விரிகுடாவுக்கு மேலிருந்து தாழமுக்கம் வலுக்குறைகிறது: வளிமண்டலவியற்றிணைக்களம் (ஆங்கில மொழியில்)]