பாதரச அங்குலம்
பாதரச அங்குலம் (Inches of mercury, inHg) என்பது அழுத்தத்தின் ஓர் அலகாகும். இவ்வலகு ஐக்கிய அமெரிக்காவில் காலநிலை அறிக்கைகள், மற்றும் வானியல் போன்றவற்றில் வளிமண்டல அமுக்கத்தை அளக்க இப்போதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், ஏனைய நாடுகளில் இவ்வலகு இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.
செந்தர புவியீர்ப்பு முடுக்கத்தில் 32 °ப (0 °செ) வெப்பநிலையில் ஓர் அங்குல நீள நிரல் பாதரசம் தரும் அழுத்தம் ஒரு பாதரச அங்குலம் என வரையறுக்கப்படுகிறது.
- 1 inHg = 3,386.389 பாசுக்கல், 0 °செ இல்.
உசாத்துணை
தொகு- Barry N. Taylor, Guide for the Use of the International System of Units (SI), 1995, NIST Special Publication 811, Appendix B
- என். ஐ. எஸ். டி. தளம்