ஆண்ட்ரூ கார்னேகி

ஆண்ட்ரூ கார்னேகி அல்லது ஆண்ட்ரூ கார்னெகீ, Andrew Carnegie, நவம்பர் 25, 1835 - ஆகத்து 11, 1919) ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற கைத்தொழில் அதிபரும் கொடைவள்ளலுமாவார். அவரது நன்கொடையினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் கலை நிறுவனங்கள் இன்றும் மகத்தான சேவையைப் புரிந்து வருகின்றன.

ஆண்ட்ரூ கார்னேகி
Andrew Carnegie
ஆண்ட்ரூ கார்னேகி 1913.
பிறப்பு(1835-11-25)25 நவம்பர் 1835
ஐக்கிய இராச்சியம்
இறப்பு11 ஆகத்து 1919(1919-08-11) (அகவை 83)
பணிவணிகர், இரும்பு மற்றும் உருக்கு உற்பத்தி
சொத்து மதிப்பு$310 பில்லியன் டாலர்கள் 2021இல்
கையொப்பம்

இளமைக்காலம்

தொகு

கார்கேகி 1835ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் பிறந்தார். தனது 13வது வயதில் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு பருத்தி ஆலை ஒன்றில் நூல்சுற்றும் பையனாக சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்ய ஆரம்பித்தார்.

ஸ்காட்லாந்தில் பிறந்தவர். அப்பா நெசவாளர். 13 வயதில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். பிறகு, தந்தி கொண்டு செல்லும் பணியாளரானார். சிறிது காலத்தில் தந்தி ஆபரேட்டராக உயர்ந்தார்.

 பென்சில்வேனியாவில் ரயில் நிலையப் பணியில் சேர்ந்தார். தொழில் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டார். 3 ஆண்டுகளில் ரயில் நிலையக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

 ரயில்வேயில் வேலை பார்க்கும்போதே முதலீடுகள் செய்தார். எண்ணெய் தொழிலில் நிறைய வருமானம் கிடைப்பதை அறிந்தார். 30-வது வயதில் ரயில்வே வேலையை விட்டுவிட்டு தொழிலில் இறங்கினார்.

 அடுத்த 10 ஆண்டுகள் முழு மூச்சாக எஃகுத் தொழிலில் ஈடுபட்டார். கார்னகி ஸ்டீல் கம்பெனி அமெரிக்காவின் எஃகு உற்பத்தியில் புரட்சியை உண்டாக்கியது. நாடு முழுவதும் தொழிற்சாலைகளை நிறுவினார். எஃகு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், வழிமுறைகளைப் பயன்படுத்தினார்.

 கச்சாப் பொருட்கள், கப்பல்கள், பொருட்களைக் கொண்டுசெல்வதற்கான ரயில் பாதை, எரிபொருளுக்கான நிலக்கரி சுரங்கங்கள் என தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டார்.

 எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார். இதனால் தொழில் துறையில் ஆதிக்க சக்தியாகவும் அபரிமிதமாக சொத்துகளுக்கு அதிபதியாகவும் திகழ்ந்தார். இவரது நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் அமெரிக்காவின் பொருளாதாரமும் உயர்ந்தது. அமெரிக்காவை வடிவமைத் தவர்களில் ஒருவர் என்ற புகழ் மகுடத்தையும் சூடினார்.

 தன் வாழ்வின் திருப்புமுனையாகத் திகழ்ந்த ஒரு அதிரடி முடிவை 65 வயதில் எடுத்தார். நிதித் துறை ஜாம்பவானும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்டீல் கார்ப்பரேஷனின் அதிபருமான ஜே.பி.மார்கனிடம் தனது அனைத்து தொழில் நிறுவனங்களையும் விற்றார். அதில் 480 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.

 நியூயார்க் பொது நூலகத்துக்கு 5 மில்லியன் டாலர் வழங்கினார். இவரது ஆதரவில் 2,800 நூலகங்கள் தொடங்கப்பட்டன. ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கினார்.

 மாத்யூ அர்னால்ட், மார்க் ட்வைன், வில்லியம் கிளாட்ஸ்டோன், தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். நிறைய புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

 பணக்காரர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு, தங்கள் செல்வத்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்1900-ல் இவர் எழுதிய புத்தகம் ‘தி காஸ்பல் ஆஃப் வெல்த்’ என்ற பெயரில் வெளிவந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி உலகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த இவர் 83 வயதில் காலமானார்.

வெளி இணைப்புகள்

தொகு

கார்னேகியின் வேலைப்பாடுகள்

தொகு
  • குட்டன்பேர்க் திட்டத்தில் Andrew Carnegie இன் படைப்புகள்
  • Carnegie, Andrew (1920). John Charles Van Dyke (ed.). Autobiography of Andrew Carnegie. Houghton Mifflin company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55553-000-1. பார்க்கப்பட்ட நாள் December 24, 2010.

கார்னேகியின் பெயரில் உள்ள நிறுவனங்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரூ_கார்னேகி&oldid=3656023" இலிருந்து மீள்விக்கப்பட்டது