ஞானசௌந்தரி (1935 திரைப்படம்)

ஏ. நாராயணன் இயக்கத்தில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஞானசௌந்தரி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 17000 அடி நீளம் கொண்ட தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கி,[1] ஸ்ரீநிவாசா சினிடோன் பதாகையின் கீழ் ஏ. நாராயணன் தயாரித்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநிவாச ராவ், சரோஜினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படம் ஞானசௌந்தரி என்ற பெண்ணைச் சுற்றி வரும் கதையாகும். சிற்றன்னை அனுப்பிய கூலிப்படையினர் ஞானசௌந்தரியை காட்டுக்கு கடத்திச் சென்று அவளது இரு கைகளையும் வெட்டி எடுத்துவிடுகின்றனர். உயிருக்கு போராடிவரும் அவளை பக்கத்து நாட்டு இளவரசரான பிலேந்திரன் காட்டிரிலுந்து காப்பாற்றப்படுகிறாள்.

ஞானசௌந்தரி
இயக்கம்ஏ. நாராயணன்
தயாரிப்புஸ்ரீநிவாசா சினிடோன்
நடிப்புஸ்ரீநிவாச ராவ்,
சரோஜினி.
வெளியீடு1935
நீளம்17000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

இந்தப் படம் நவாப் ராஜமாணிக்கம் நடத்திய மேடை நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்த நாடகம் கிறிஸ்தவ நாட்டுப்புறக் கதையைத் தழுவி இயற்றப்பட்டது. இப்படம் வெற்றிபெறவில்லை.[3]

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1935!
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
  3. "மே 21 9148: 'ஞான சௌந்தரி' 75 ஆண்டுகள் - மூன்று படங்கள்... ஒரு வெற்றி!". Hindu Tamil Thisai. 2023-05-12. பார்க்கப்பட்ட நாள் 2023-05-14.