கவிதா (திரைப்படம்)

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கவிதா ( Kavitha) தமிழ் மொழியில் வெளிவந்தத் திரைப்படமாகும். இதை டி. ஆர். ரகுநாத் என்பார் இயக்கியுள்ளார்.[2] எம். ஆர். ராதா,எம். என். நம்பியார், ராஜசுலோச்சனா முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர்.[3]

கவிதா
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
திரைக்கதைமுரசொலி மாறன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஆர். ராதா
எம். என். நம்பியார்
ராஜசுலோச்சனா
ஒளிப்பதிவுஆர். சம்பத்
படத்தொகுப்புஎல். பாலு
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ்
வெளியீடு2 செப்டம்பர் 1962 (1962-09-02)(இந்தியா)[1]
ஓட்டம்2:43 (4,482 மீட்டர்கள் (14,705 அடி))
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைசுருக்கம் தொகு

கவிதா, சபாபதி முதலியார் என்ற செல்வந்தரின் ஒரே செல்ல மகள் ஆவாள். அவள் ஒரு கலைஞரான துரையை நேசிக்கிறாள். இதற்கிடையில் முதலியார் நோய்வாய்ப் படுகிறார். அவர் மலேசியாவில் வசிக்கும் தனது சகோதரியின் மகனான ராஜசேகரனை கவிதாவிற்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். கவிதா, காதல் மற்றும் பாசத்திற்கும் இடையே பிணைக்கப்பட்டு செய்வதறியாது திகைக்கிறாள். அவளது தந்தையின் அன்பிற்கும் அவரது தியாகத்திற்கும் முக்கியத்துவம் அளித்து தனது காதலை துறக்க முடிவெடுத்து ராஜசேகரனை மணக்கிறாள். ஆனால் வெகுவிரைவில் அவன் பெருங்குடிகாரன் என்ற உண்மையை உணர்கிறாள். அவளது தந்தையிடம் சென்று அடிக்கடி பணம் வாங்கி வரச் சொல்லி அவளை அடித்துத் துன்புறுத்துகிறான். இதைக் கண்ட முதலியார் மிகவும் மன வேதனையடைகிறார். இதற்கிடையே கவிதாவைப் போலவே தோற்றமுடைய பொன்னம்மா என்ற பெண் அக்குடும்பத்தில் நுழைகிறாள்.பொன்னம்மா கவிதாவிற்கு ஆறுதல் அளித்து, ராஜசேகரனிடம் மனம் திருந்த ஆலோசனை அளிக்கிறாள்.

ஆனால், ராஜசேகரன் கவிதாவை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பொன்னம்மாவை கவிதாவைப் போல மாற்றி முதலியாரிடம் அனுப்புகிறான். கவிதா ராஜசேகரனின் உண்மையான அடையாளத்தைப் பற்றி சந்தேகப்படுகிறாள். ராஜசேகரனைப் பற்றிய உண்மையை தெரிந்த பொன்னம்மா முதலியாரிடம் அதைப் பற்றி கூற இயலாமல் கவிதாவாகவே நடிக்கிறாள். எனினும், பொன்னம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து போகிறாள். இதற்கிடையில், கவிதாவின் உறவினர்களான துரை,கோமதி மற்றும் கவிதாவின் தோழி லீலா ஆகிய மூவரும் சேர்ந்து ராஜசேகரனைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர முயல்கின்றனர். எப்படி உண்மையை வெளிக் கொணர்கின்றனர், கவிதாவை அவனிடமிருந்து எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பது மீதிக் கதையாகும். [4]

நடிப்பு தொகு

இப்பட்டியல் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பவரின் தகவல் தொகுப்பு [1] மற்றும் பாட்டுப் புத்தகத்திலிருந்து தழுவியது. .[4]

நடிகர்கள்

நடிகைகள்

நடனம்

தயாரிப்பு தொகு

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை டி. ஆர். ரகுநாத் இயக்கியுள்ளார். கதை மற்றும் வசனங்களை முரசொலி மாறன் எழுதியுள்ளார். ஆர். சம்பத் ஒளிப்பதிவை மேற்கொண்டார். எல். பாலு படத்தொகுப்பை கவனித்துக் கொண்டார். கலை பி. நாகராஜன், நடனம் ஹீராலால் மற்றும் பி. ஜெயராம்,புகைப்படம் ஏ. ஜே. ஜோசப் போன்றோர் இதில் பங்களித்துள்ளனர். .[4] இதில் ராஜசுலோச்சனா இரு வேடங்களில் நடித்துள்ளார்.[5]

ஒலிப்பதிவு தொகு

இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் இசையமைக்க பாடல்களை ஏ. மருதகாசி மற்றும் கண்ணதாசன் எழுதியுள்ளனர். பின்னணி பாடியோர் பி. சுசீலா, கே. ஜமுனா ராணி, எம். எஸ். ராஜேஸ்வரி, டி எம். செளந்தர்ராஜன், பி பி. ஶ்ரீனிவாஸ் மற்றும் ஏ. எல் ராகவன்.[5]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நேரம் (நி.:நொ.)
1 பார்க்க பார்க்க மயக்குதடி பி. சுசீலா & கே. ஜமுனா ராணி ஏ. மருதகாசி
2 ஊரிருந்தும் வீடில்லை எம். ராஜேஸ்வரி
3 கண்ணுக்குள்ளே ஒன்னிருக்கு டி. எம். செளந்தர்ராஜன் & கே. ஜமுனா ராணி
4 உள்ளே இருக்கும் பொன்னம்மா
5 மணக்கும் ரோஜா மைலேடி ஏ. எல் ராகவன் & கே. ஜமுனா ராணி
6 பறக்கும் பறவைகள் நீயே பி. பி. ஸ்ரீனிவாஸ் & கே. ஜமுனாராணி கண்ணதாசன்
7 மேகம் வந்தது மின்னல் வந்தது பி. சுசீலா
8 அப்பா உன் மகளை பார்த்தாயா

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. 
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 607. 
  3. "Kavitha (1962 - Tamil)". gomolo.com. Archived from the original on 2 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 Kavitha Song book. Srimagal Press, Chennai-1. https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNMXg5QUpTelRHaWs/view. 
  5. 5.0 5.1 G. Neelamegam (in Tamil). Thiraikalanjiyam — Part 1. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014. பக். 86 — 87. 

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_(திரைப்படம்)&oldid=3806519" இலிருந்து மீள்விக்கப்பட்டது