வேதவதி (சீதா ஜனனம்)

வேதவதி அல்லது சீதா ஜனனம் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். சியாமளா பிச்சர்ஸ் தயாரிப்பில், 1941 சனவரி 11 ஆம் தேதி இப்படம் வெளியானது.[1][2][3]

வேதவதி
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புஷியாமளா பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை ராஜா சந்திரசேகர்
இசைடி. கே. ஜெயராமன்
நடிப்புஎம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
ஆர். பாலசுப்பிரமணியம்
எம். ஜி. ஆர்
என். எஸ். கிருஷ்ணன்
பி. ஜி. வெங்கடேசன்
தவமணி தேவி
குமாரி ருக்குமணி
டி. ஏ. மதுரம்
கோலார் ராஜம்
வெளியீடுசனவரி 11, 1941
ஓட்டம்.
நீளம்16829 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இந்தத் திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட பட்டியல் ஆகும்.[2]

எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி - நாரதர்

ஆர். சுப்பிரமணியம் - ராவணன்

பி. ஜி. வெங்கடேசன் - விபீஷணன்

எம். ஜி. ஆர் - இந்திரஜித்

வி. எஸ். மணி - ராமர்/விஷ்ணு

எம். ஜி. சக்கரபாணி - ஜனகர்/குபேரன்

பி. எஸ். வீரப்பா - இந்திரன்

எஸ். நந்தரம் - யமன்

கே. எஸ். வேலாயுதம் - நந்தி/அனுமான்

என். எஸ். வேலப்பன் - நளகூபரன்

வி. ஸ்ரீனிவாச சாஸ்திரி - அக்னி

கே. ராமசாமி ஐயர் - கும்பகர்ணன்

எஸ். ராமுடு - வருணன்

பி. கோவிந்தசாமி - சிவன்

டி. வி. கிருஷ்ணசாமி - சூரியன்

பி. லக்ஷ்மணசாமி - லக்ஷ்மணன்

எம். சங்கரராமன் - வாயு

ஏ. சி. சுந்தரம் - தூதர்

கோலார் ராஜம் - மண்டோதரி

கே. தவமணி தேவி - வேதவதி/சீதா

குமாரி ருக்மணி - ரம்பை

எம். எஸ். சரோஜா - மேனகா

டி. என். சுந்தரம்மா - லட்சுமி

எம். வி. குஞ்சம்மாள் - ஊர்வசி

எம். எஸ். சுந்தராம்பாள் - திலோத்தமை

ஜி. எஸ். சரஸ்வதி - பூதேவி

வி. எஸ். கௌசல்யா - பார்வதி

விசாலாக்ஷி - சூர்ப்பனகை

ஆகாச வாணி தொகு

என். எஸ். கிருஷ்ணன்

டி. ஏ. மதுரம்

தயாரிப்பு தொகு

ஆரம்பகாலத்தில், மேடை நாடங்களை அடிப்படையாக கொண்டே பெரும்பாலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. பொதுவாக நாடங்களுக்கு ஒரு பிரதான தலைப்பும், உபதலைப்பும் இருப்பது வழக்கம். அதனால் தான் இப்படத்திற்கும் இருப்பெயர்கள் உள்ளன.[4]

என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் நடித்த ஆகாச வாணி என்ற நகைச்சுவை குறும்படம் இப்படத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

இசை தொகு

இத்திரைப்படத்தின் இசையை அமைத்தவர் டி. கே. ஜெயராம ஐயர் ஆவார். பாபநாசம் சிவன் மற்றும் பி. ஆர். ராஜகோபால ஐயர் பாடல்களின் வரிகளை எழுதினர்.[5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதவதி_(சீதா_ஜனனம்)&oldid=3792913" இருந்து மீள்விக்கப்பட்டது