ரிசி கபூர்

இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்

இரிசி கபூர் (4 செப்டெம்பர் 1952 – 30 ஏப்பிரல் 2020) இந்தித் திரைப்படத் துறையில் பணியாற்றிய இந்திய நடிகரும், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமாவார்.[3][4] கபூர் 50 ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு தேசிய திரைப்பட விருதும் நான்கு பிலிம்பேர் விருதுகளையும், பல பாராட்டுக்களையும் பெற்றார்.[5]

ரிசி கபூர்
Rishi Kapoor
2016இல் கபூர்
பிறப்பு(1952-09-04)4 செப்டம்பர் 1952
மும்பை, மும்பை மாநிலம், இந்தியா
இறப்பு30 ஏப்ரல் 2020(2020-04-30) (அகவை 67)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1]
கல்விமாயோ கல்லூரி, அஜ்மீர்
பணி
  • நடிகர்
  • இயக்குநர்
  • தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1970–2020[2]
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்ரன்பீர் கபூர் உடன் இரண்டு பேர்

கபூர் குடும்பத்தில் பிறந்த இவர், தனது தந்தை இராஜ் கபூரின் மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் இளம் வயதிலேயே அறிமுகமானார். இதற்காக இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[6][7] வயது வந்தவராக, இவரது முதல் முன்னணி கதாபாத்திரம் டிம்பிள் கபாடியாவுடன் இளம்வயது காதல் திரைப்படமான பாபியில் நடித்தார். இது இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுக் கொடுத்தது. 1973 – 2000 காலப்பகுதியில், கபூர் 92 திரைப்படங்களில் காதல் கதாநாயகனாக நடித்தார்.[8] 1970 களின் நடுப்பகுதி முதல் 1990கள் வரை இரஃபூ சக்கர், கபி கபி, லைலா மஜ்னு, அமர் அக்பர் அந்தோணி, கம் கிசைஸ் கும் நகின், சர்க்கம், நசீப், காத்திலோன் கே காத்தில், பிரேம் ரோக், கூலி, நாகினா, சாந்தினி, கென்னா, தீவானா, போல் இராதா போல், தாமினி போன்ற அதிகம் வசூலித்த இந்தியத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்.[9][10] கேல் கேல் மே, ஜோத்தா கைன் கா, கர்ஸ், யே வாடா ரகா, சாகர், தவைய்ப்', நசீப் அப்னா அப்னா, ஏக் சாதர் மைலி சி, கர் கர் கி ககானி, கம் டோனோ ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காகவும் இவர் பாராட்டுகளைப் பெற்றார்.[11][12][13]

2000 ஆம் ஆண்டிலிருந்து, கம் தம், பானா, நமஸ்தே இலண்டன், லவ் ஆஜ் கல், அக்னிபாத், கௌஸ்புல் 2', ஒளரங்கசீப், சுத் தேசி ரொமன்ஸ், 102 நாட் அவுட், மல்க் போன்ற திரைப்படங்களில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட கதாபாத்திரங்களில் கபூர் நடித்தார்.[14][15][16][17][18] தோ தூனி சார் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், குடும்ப நாடகமான கபூர் அண்டு சன்சு திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[19] 2008 இல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[19] இவரது கடைசித் திரைப்படத் தோற்றம் சர்மாஜி நம்கீன் திரைப்படத்தில் மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது.[20]

நடிகை நீது சிங் திரைப்படங்களில் பணிபுரிந்தபோது தனது மனைவியைச் சந்தித்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கபூர் இரத்தப் புற்றுநோயால் 2020 ஏப்ரல் 30 அன்று தனது 67ஆவது வயதில் இறந்தார்.[21][22]

ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பமும்

தொகு

கபூர் 1952 செப்டம்பர் 4 அன்று அப்போதைய பம்பாய் மாநிலத்தில் தெற்கு மும்பையின் மாதுங்காவிலுள்ள தனது குடும்ப இல்லமான இராஜ் கபூர் பங்களா என்ற இடத்தில், பெசாவரில் இருந்து கபூர் குலத்தைச் சேர்ந்த பஞ்சாபி இந்துக்கள் கத்ரி இனக் குடும்பத்தில் பிறந்தார்.[23][24][25] டேராடூனில் உள்ள கர்னல் பிரவுன் கேம்பிரிட்ஜ் பள்ளி, பம்பாயில் உள்ள கேம்பியன் பள்ளி, அஜ்மீரில் உள்ள மாயோ கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.[26]

கபூர் குடும்பத்தின் ஒரு பகுதியாக, இவர் புகழ்பெற்ற நடிகர்-இயக்குநர் இராஜ் கபூர், கிருஷ்ணா இராஜ் கபூர் (நீ மல்கோத்ரா) ஆகியோரின் இரண்டாவது மகன் ஆவார்.[27] இதேபோல், இவரது குடும்பத்தில் சகோதரர்கள், இரந்தீர், இராஜீவ் கபூர், தந்தைவழி தாத்தா பிரிதிவிராசு கபூர், தந்தைவழி பேரன் திரிலோக் கபூர், தாய்வழி மாமாக்கள் பிரேம், இராஜேந்திரன், நரேந்திர நாத், பிரேம் சோப்ரா தந்தைவழி மாமாக்கள் சசி கபூர், சம்மி கபூர் உள்ளிட்ட வெற்றிகரமான நடிகர்கள் உள்ளனர்.[28]  [மெய்யறிதல் தேவை]ரிசி கபூரின் இரண்டு சகோதரிகள் மறைந்த ரிது நந்தாவும், ரீமா ஜெயினும் காப்பீட்டு முகவராக இருந்தனர்.[29] நடிகைகள் கரிஷ்மா கபூர், கரீனா கபூர், நடிகர்கள் அர்மான் ஜெயின், ஆதார் ஜெயின், நிதாசா நந்தா, தொழிலதிபர் நிகில் நந்தா ஆகியோர் இவரது மருமகன்கள் ஆவர்.

தொழில் வாழ்க்கை

தொகு

இவர் முதன் முதலில் திரையில் தோன்றியது மூன்று வயதிற்குள், கபூர் இவரது தந்தை இராஜ் கபூரின் சிறீ 420 (1955) திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அங்கு இவர் "பியார் குவா, இக்ரார் குவா கை" என்ற இசைக் காட்சியில் தோன்றுவார்.[15][28] அதேபோல, ரிசி தனது முதல் பாத்திரத்தை வழங்கிய திரைப்படமான 1970 இல் வெளிவந்த மேரா நாம் ஜோக்கர் என்ற திரைப்படத்தை இராஜ் கபூர் இயக்கினார். இதில் நடிகர் முக்கியக் கதாபாத்திரத்தின் இளம் பதிப்பை (ராஜ் கபூர் ) சித்தரிப்பார்.[15][30] இப்படத்தில் இவரது நடிப்பு இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.

ரிசி கபூரின் முதல் முன்னணி பாத்திரம் டிம்பிள் கபாடியாவிற்கு இணையாக 1973 இல் இளம்வயது காதல் திரைப்படமான பாபி வெளிவந்தது. இது இவரது தந்தையால் இயக்கப்பட்டது.[15] பாபி இந்தியாவில் தலைமுறை கடந்த மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறியது. மேலும் இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றது.[31][28] திரைப்படம் பற்றி இவர் 2012 இன் நேர்காணலில் இவ்வாறு கூறுவார். "என்னை ஒரு நடிகராக அறிமுகப்படுத்துவதற்காக படம் எடுக்கப்பட்டது என்ற தவறான கருத்து இருந்தது. படம் உண்மையில் மேரா நாம் ஜோக்கரின் கடன்களை செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அப்பா ஒரு இளம்வயது காதல் கதையை உருவாக்க விரும்பினார். மேலும் படத்தில் இராஜேஷ் கண்ணா நடிக்க அவரிடம் பணம் இல்லை". பாபி திரைப்படத்தை தொடர்ந்து (1973) அந்த தலைமுறைகளில் பல இலகுவான நகைச்சுவை படங்களில் நடித்தார்.[19][15]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு
 
2012 இல் ஜலக் திக்லா ஜா நிகழ்ச்சியில் கபூர் தனது மனைவி நீது சிங் கபூர், மகன் ரன்பீர் கபூருடன்

கபூர் 1980 இல் புதுதில்லி பஞ்சாபி கத்திரி வம்சாவளியைச் சேர்ந்த நடிகை நீது சிங்கை மணந்தார்.[15] இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். மகன், நடிகர் ரன்பீர் கபூர், ஒரு மகள், ரித்திமா கபூர்.[32] கபூரின் சுயசரிதையான குல்லம் குல்லாஃ ரிஷி கபூர் அன்சென்சார்டு, 2017 சனவரி 15 அன்று வெளியிடப்பட்டது. மீனா அய்யருடன் இணைந்து கபூர் இப்புத்தகத்தை எழுதினார். தலைப்பு கார்பர்காலின்சின் கீழ் வெளியிடப்பட்டது.[33][34]

கபூர் சர்ச்சைக்குரிய சமூக-அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதில் பெயர் பெற்றவர். மார்ச் 2016 இல், சாலைகள், கட்டடங்கள், தேசிய சொத்துக்களுக்கு காந்தி பெயரும் நேருவின் பெயரும் சூட்டப்பட்டதற்கு, நேரு-காந்தி குடும்பத்தை இவர் விமர்சித்தார்.[35] 2017 செப்டம்பரில், வம்சாவளி அரசியல் தொடர்பாக இராகுல் காந்தியை விமர்சித்து இவர் மீண்டும் காந்தி குடும்பத்தைத் தாக்கினார்.[36] மார்ச் 2020 இல், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளுக்கு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் காரணமாக மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாக தனது திரைப்படமான தாமினி "தரீக் பே தரீக்" உரையாடலின் மூலம் இந்திய நீதித்துறை மீது இவர் கோபத்தை வெளிப்படுத்தி விமர்சித்தார்.[37]

நோயும் மரணமும்

தொகு

2018 இல் கபூருக்கு இரத்தப் புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக நியூயார்க் நகரத்திற்குச் சென்றார்.[21] ஓராண்டில் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு, இவர் 2019 செப்டம்பர் 26 அன்று இந்தியா திரும்பினார்.[38]

இருப்பினும், மூச்சுத் திணறல் காரணமாக இவர் 2020 ஏப்பிரல் 29 அன்று சர் எச். என். ரிலையன்சு அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[39] கபூருக்கு 2020 ஏப்பிரல் 30 அன்று காலை 8:45 மணிக்கு இரத்தப்புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டதால் இறந்தார்.[40][41] கபூரின் இறுதிச் சடங்குகள் சந்தன்வாடி மயானத்தில் நடத்தப்பட்டு இவரது அஸ்தி பங்கங்காவில் கரைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rishi Kapoor passes away in Mumbai after a brave fight with cancer". The Times of India. 2020-04-30. பார்க்கப்பட்ட நாள் 2024-09-28.
  2. "Bollywood Actor Rishi Kapoor Passes Away" (in en-IN). Mumbai Live. 30 April 2020 இம் மூலத்தில் இருந்து 12 சூலை 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200712104534/https://www.mumbailive.com/en/entertainment/bollywood-actor-rishi-kapoor-die-amitabh-bachhan-tweet-48895. 
  3. "Rishi Kapoor, veteran Hindi actor, passes away". 30 April 2020 இம் மூலத்தில் இருந்து 30 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200430143811/https://www.thehindu.com/entertainment/movies/rishi-kapoor-veteran-hindi-actor-passes-away/article31469211.ece. 
  4. "Rishi Kapoor slams godmen and Radhe Maa". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 August 2017. Archived from the original on 2 September 2017. பார்க்கப்பட்ட நாள் 27 August 2017.
  5. "Rishi Kapoor: His own man". 2 May 2020.
  6. "Krishna Raj Kapoor, wife of Raj Kapoor, dies at 87". Telegraph India. 1 October 2018. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  7. "18th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Archived from the original (PDF) on 4 November 2018. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  8. "Happy Birthday Rishi Kapoor: From perennial romantic hero to a scheming villain". The Indian Express (Photo gallery). 2013. p. 7. Archived from the original on 7 September 2013.
  9. "The Best Films Of Rishi Kapoor - Bobby Has Historic Numbers". 1 May 2020. 
  10. "Blockbusters Of Twenty-Five Years (1973-1997)". 13 October 2023.
  11. 'I thought Kisna will be a big hit' Rediff.com Movies, 6 March 2008.
  12. The Kapoors: the first family of Indian cinema by Madhu Jain, Penguin Books India, 2005, p. 284
  13. "Ramesh Sippy: One Didn't Need To Direct Rishi Kapoor!". மிட் டே. 1 May 2020. பார்க்கப்பட்ட நாள் 22 September 2020.
  14. Adarsh, Taran. "Mulk movie review: Taran Adarsh".
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 15.5 Frater, Patrick (29 April 2020). "Rishi Kapoor, Indian Film Legend, Dies at 67". Variety (in ஆங்கிலம்). Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.Frater, Patrick (29 April 2020).
  16. Iyer, Meena. "Review: Aurangzeb" இம் மூலத்தில் இருந்து 17 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130517200535/http://timesofindia.indiatimes.com/movie-review/20082528.cms. 
  17. "Rishi Kapoor passes away: From Bobby, Chandni to Kapoor & Sons, a look at celebrated actor's most remarkable films". https://www.firstpost.com/entertainment/rishi-kapoor-passes-away-from-booby-chandni-to-kapoor-sons-a-look-at-celebrated-actors-most-remarkable-films-8315381.html. 
  18. "Bollywood's romantic hero Rishi Kapoor dies" இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011194324/https://www.bbc.com/news/world-asia-india-52482688. 
  19. 19.0 19.1 19.2 "Proud of Ranbir's choice of roles: Rishi Kapoor – Latest News & Updates at Daily News & Analysis". 15 September 2012. Archived from the original on 26 October 2012. பார்க்கப்பட்ட நாள் 11 November 2012."Proud of Ranbir's choice of roles: Rishi Kapoor – Latest News & Updates at Daily News & Analysis".
  20. "Rishi Kapoor's last film Sharmaji Namkeen to release on Prime Video, makers call it a 'tribute to his charm'". The Indian Express. 9 March 2022. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
  21. 21.0 21.1 "Actor Rishi Kapoor loses battle to cancer. Here's what we know about the cancer he suffered from". The Times of India. 30 April 2020. Archived from the original on 1 May 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  22. "Rishi Kapoor, Bollywood star, dies of leukaemia aged 67". The Guardian. 30 April 2020. https://www.theguardian.com/film/2020/apr/30/rishi-kapoor-bollywood-leading-man-dies-of-leukaemia-aged-67. 
  23. "Archived copy". www.juggernaut.in. Archived from the original on 6 August 2020. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  24. Bruzzi, Stella, and Pamela Church Gibson.
  25. Mid-Day.com (2013). "South star Taapsee surprises Rishi Kapoor by turning out to be Punjabi". NDTV Movies. NDTV. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
  26. "Rishi Kapoor | 2013 Celebrity 100 | Forbes India Lists". Forbes India (in ஆங்கிலம்). Network18. 2013. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  27. "Krishna Raj Kapoor, wife of Raj Kapoor, dies at 87". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  28. 28.0 28.1 28.2 Sharma, Devesh (2020). "Rishi Kapoor no more". Filmfare (in ஆங்கிலம்). Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.Sharma, Devesh (2020).
  29. HT Correspondent (2018). "Rima Jain on parents Krishna and Raj Kapoor: All his life, he was obsessed with her". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  30. "Rishi Kapoor in films: Mera Naam Joker to Bobby to 102 Not Out". India Today. 30 April 2020. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  31. "Top Earners 1970–1979". Boxofficeindia.com. Archived from the original on 14 October 2013. பார்க்கப்பட்ட நாள் 1 June 2011.
  32. "The Rishi Kapoor-Neetu Singh love story: Aaj, kal, forever". India Today. 30 April 2020. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  33. "Khullam Khulla: Rishi Kapoor Uncensored". Vowelor (in அமெரிக்க ஆங்கிலம்). 23 December 2016. Archived from the original on 23 February 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  34. "Khullam Khulla: Rishi Kapoor had no clue his engagement with Neetu was 'plotted'". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 30 April 2020. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  35. ""Har Cheez Gandhi Ke Naam?" Rishi Kapoor, Straight Up on Twitter". NDTV. Archived from the original on 16 September 2017. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
  36. "Rishi Kapoor trolled for slamming Rahul Gandhi. Here's how the actor responded". 13 September 2017. Archived from the original on 19 May 2020. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
  37. ""Tareekh Pe Tareekh": Rishi Kapoor On Delay In Nirbhaya Convicts' Hanging". Archived from the original on 18 May 2020. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
  38. "Rishi Kapoor, Neetu open up on his cancer treatment in New York: We just treated it as any disease". Firstpost. 3 September 2019. Archived from the original on 11 October 2019. பார்க்கப்பட்ட நாள் 26 September 2019.
  39. "Rishi Kapoor hospitalised, brother Randhir Kapoor says he has breathing problems". Hindustan Times (in ஆங்கிலம்). 30 April 2020. Archived from the original on 30 April 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  40. "Rishi Kapoor, Bollywood's Original Chocolate Boy, Dies at 67". 30 April 2020.
  41. Rishi Kapoor, Indian Film Legend, Dies at 67, Variety, 29 April 2020

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசி_கபூர்&oldid=4101847" இலிருந்து மீள்விக்கப்பட்டது