வாஸ்தவம்
வாஸ்தவம் (Vaasthavam, பொருள் : உண்மை ) என்பது 2006 ஆம் ஆண்டய இந்திய மலையாள மொழி அரசியல் திரில்லர் திரைப்படமாகும். இதை பாபு ஜனார்த்தனன் எழுத எம். பத்மகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையானது பாலச்சந்திரன் அடிகா ( பிரித்விராஜ் சுகுமாரன் ) என்ற இளைஞரைச் சுற்றி வருகிறது அரசியலில் அவரது எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப் பற்றியதாக இப்படம் உள்ளது. இப்படத்தின் கதையானது தகழியின் புதினமான ஏணிப்படிகளை தழுவியது ஆகும்.
வாஸ்தவம் | |
---|---|
இயக்கம் | எம். பத்மகுமார் |
கதை | பாபு ஜனார்ததன் |
இசை | அலெக்ஸ் பால் சி. ராஜாமணி (பின்னணி) |
நடிப்பு | பிரித்விராஜ் சுகுமாரன் காவ்யா மாதவன் சம்விருதா சுனில் முரளி ஜெகதே சிறீகுமார் சிந்து மேனன் |
ஒளிப்பதிவு | மனோஜ் பிள்ளை |
படத்தொகுப்பு | எல். பூமிநாதன் |
கலையகம் | சிறீசகரா பிலிம்ஸ் பிரவேட் லிமிடட் |
விநியோகம் | சிறீசகரா பிலிம்ஸ் ரிலீஸ் |
வெளியீடு | 10 நவம்பர் 2006 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
இப்படத்தில் நடித்த பிருத்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார். மேலும் 24 வயதில் இந்த விருதைப் பெற்ற இளைஞர் என்ற பெருமையையும் பெற்றார்.
நடிகர்கள்
தொகு- பாலச்சந்திரனாக பிருத்விராஜ்
- சுமித்ராவாக காவ்யா மாதவன்
- சுரபியாக சம்விருதா சுனில்
- முரளி
- ஜெகதே சிறீகுமார்
- சிந்து மேனன்
- சாதிக்
- சுதீர் கரமணா
- உஷா
- ஜூனியர் சுமித்ராவாக ஷாலின் சோயா
- வரதா ஜிஷின்
- திரிப்பன் நம்பூதிரியாக சலீம் குமார்
இசை
தொகுதிரைப்படத்தின் பாடல்களுக்கான இசையை மெஸ்ட்ரோ அலெக்ஸ் பால் அமைக்க, பாடல்களை கிரீஷ் புத்தன்சேரி எழுதியுள்ளார்.
வ. எண் | பாடல் | கலைஞர் (கள்) | இராகம் |
---|---|---|---|
1 | அரா பவன் | விது பிரதாப், ரிமி டோமி | தர்மவதி |
2 | கதம் கொண்டா | வித்யாதரன் | சிந்து பைரவி |
3 | நாதா நீ வரும்போல் | கே.எஸ் சித்ரா | சகானா |
4 | நிண்டதி சந்தணா | டிரடிசனல் |
வரவேற்பு
தொகுஇந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [ மேற்கோள் தேவை ]
விருதுகள்
தொகு- சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது - பிரித்விராஜ் சுகுமாரன்