கதம் கதம் (Katham Katham) 2015இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இதை இயக்கியவர் அறிமுக இயக்குநர் பாபு தூயவன்.[1][2] இதில் நந்தா, நடராஜன் சுப்பிரமணியம், சனம் ஷெட்டி, ஷரிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை அப்பு மூவீஸ் தயாரித்துள்ளது.[3] இவர்களுடன் நிழல்கள் ரவி, கிரேன் மனோகர்,சிங்கமுத்து, மற்றும் பாண்டு துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதம் கதம்
இயக்கம்பாபு தூயவன்
தயாரிப்புஜி. கார்த்திக்
ஏ. முஷ்தாரி
கதைபாபு தூயவன்
ஜி. ராதாகிருஷ்ணன்(வசனம்)
இசைதாஜ் நூர்
நடிப்புநந்தா
நடராஜன் சுப்பிரமணியம்
சனம் ஷெட்டி
ஷரிகா
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புமுத்துலக்ஷ்மி வரதன்
கலையகம்அப்பு மூவீஸ்
விநியோகம்அப்பு மூவீஸ்
வெளியீடுமார்ச்சு13, 2015
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

நந்தா (நந்தா (நடிகர்)) ஒரு நேர்மையான காவல்துறை துணை ஆய்வாளராக இருப்பதினால் அடிக்கடி இடமாற்றலுக்கு உட்படுத்தப்படுகிறார். தற்போது மாற்றலாகி பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வருகிறார். அங்குள்ள காவல்துறை ஆணையர் பாண்டியன் (நடராஜன் சுப்பிரமணியம்) மந்திரி பெரியண்ணனின் கையாளாக இருப்பதை அறிகிறார். காவல் நிலையத்திலுள்ள அனைவருமே அரசாளும் மந்திரியின் ஊழலுக்குத் துணை போவதைக்கண்டு அதிர்ச்சியடைகிறார். இதனால் கட்டளைகளை நிறைவேற்ற நந்தா கடும் முயற்சி செய்கிறார். அது இயலாததால் நந்தாவிற்கும் பாண்டியனுக்கும் பகை ஏற்பட்டது. மந்திரி பெரியண்ணனின் ஆட்கள் பாண்டியனைக் கொல்ல வரும்போது அவர்களிடமிருந்து தப்பிக்கிறார். பொது மக்களின் உதவி பெற்றுக் குணமாகி நேர்மையான காவல்துறை ஆணையராக பாண்டியன் திருந்தி வருகிறார். நந்தா இதை நம்பவில்லை.

மற்றொரு நேர்மையான அதிகாரி பெரியண்ணனின் ஆட்களால் கொல்லப்படுகிறார். இதற்கு பாண்டியன் தான் காரணம் என்று நந்தா குறை கூறுகிறார். மேலும் குறுகிய வழியில் இந்தப் பதவிக்கு வந்ததாக பாண்டியனைச் சாடுகிறார். அதனால் நந்தா பெரியண்ணணுக்கும், அவன் ஆட்களுக்கும் தவறான செய்தி அனுப்பி பாண்டியனுடன் மோத விடுகிறார். ஆனால் பாண்டியன் , பெரியண்ணன் மற்றும் அவன் ஆட்களிடம் சண்டையிட்டு அனைவரையும் கொன்றுவிடுகிறார். இப்போது நந்தா உண்மையை அறிந்து அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

நடிப்பு தொகு

நந்தா - நந்தா (நடிகர்)
ஆய்வாளர் பாண்டியன் - நடராஜன் சுப்பிரமணியம்
மது - சனம் ஷெட்டி
பிரியா - ஷரிகா
எஸ்பி ரவிச்சந்திரன் - நிழல்கள் ரவி
சிங்கமுத்து - காவலர் குமார்
கிரேன் மனோகர் - காவலர் சுவாமி தாஸ்
பாண்டு - மதுவின் தந்தை
காஜல் பசுபதி - பத்மினி
ராஜகோபலன் - அமைச்சர் பெரியண்ணன்
வினோத் - உதவி காவல் ஆய்வாளர் கண்ணன்
ஹரீஷ் - சக்தி அமைச்சரின் மகன்
கே. ஆர். செல்வராஜ் - நந்தினியின் தந்தை
சௌந்தர் - காவலர் சௌந்தர்
சேஷு - காவலர் உன்னிகிருஷ்ணன்
மனோ பெட்ரா - காவல் உய்ர் அலுவலர்
ச்ந்து - மணிமேகலை
மருது பாண்டி
நிஷா தாஸ்
ஆரணம்

பாடல்கள் தொகு

இப் படத்திற்கு இசை அமைத்தவர் தாஜ் நூர்.[4]

# பாடல்பாடியவர்கள் நீளம்
1. "இது என்ன"  சைந்தவி & யாசின் 03:56
2. "மச்சம் பார்க்க"  பிரியா ஹிமேஷ் & நிம்சி வின்சென்ட் 03:50
3. "பாக்கு வெட்டி"  பிரபு,சர்முகி ராமன் & என் எம். அக்தர் 03:54
4. "போடா போடா"  வேல்முருகன், தீபக், சர்முகி ராமன் 03:28
5. "வட போச்சே"  ரம்யா நம்பீசன் & என் எம் அக்தர் 03:49

வரவேற்பு தொகு

இந்தப் படம் எதிர்மறையான விமர்சனத்தையே சந்தித்தது.[5] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 5 க்கு 2.5 மதிப்பெண் வழங்கி[6] சிஃபி வலைத்தளம் இதனை மோசமான திரைப்படம் என விமர்சனம் செய்தது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Indiaglitz. "Nandha and Natty to act as cops in Katham Katham". Indiaglitz.com. Archived from the original on 1 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 30 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/shotcuts-red-is-ready/article5247768.ece
  3. Subramaniam, Anupama (26 September 2013). "‘Even ‘out of work’ heroes demand '40 lakhs’". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141124080843/http://archives.deccanchronicle.com/130926/entertainment-kollywood/article/%E2%80%98even-%E2%80%98out-work%E2%80%99-heroes-demand-40-lakhs%E2%80%99. 
  4. "Katham Katham Songs". Masstamilan. https://www.masstamilan.org/katham-katham-songs. பார்த்த நாள்: 23 December 2018. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-10-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
  6. http://www.rediff.com/movies/report/review-katham-katham-is-a-total-waste-of-time/20150313.htm
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதம்_கதம்&oldid=3684949" இலிருந்து மீள்விக்கப்பட்டது