புதிய திருப்பங்கள்

புதிய திருப்பங்கள் (Pudhiya Tiruppangal) சாரதா ராமநாதன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுரேஷ் பாலாஜி தயாரிப்பில் வித்தியாசாகர் இசை அமைப்பில் மது அம்பட் ஒளிப்பதிவில் வெளியானது. இப்படத்தின் கதையை சாரதா ராமநாதன் எழுதினார். நந்தா (நடிகர்), ஆண்ட்ரியா ஜெரெமையா, தரணி மற்றும் பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[1][2][3]

நடிகர்கள்தொகு

நந்தா (நடிகர்) - ஆதித்யா, ஆண்ட்ரியா ஜெரெமையா - மல்லிகா, சுர்வீன் சாவ்லா - அனுபமா, மகேஷ் - மஹாதேவ், ஆர்.ஜெ. விக்னேஷ் - கரீம் மாலிக்/போப்/அருணாச்சலம் வாத்தியார், தரணி - 13 வயது சிறுமி.

தயாரிப்புதொகு

இந்தப் படம் திருப்பங்கள் என்று துவக்கத்தில் பெயிரிடப்பட்டாலும் புதிய திருப்பங்கள் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆண்ட்ரியா ஜெரெமையா ஒரு விலைமகள் கதாபாத்திரத்திலும், சாரதா ஒரு பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்திலும் இப்படத்தில் நடிப்பார்கள் என்று அறிக்கைகள் தெரிவித்தன. சுர்வீன் சாவ்லா மற்றும் தரணி ஆகிய இருவருக்கும் இது முதல் தமிழ்ப் படம் ஆகும். சிருங்காரம் என்ற திரைப்படத்தின் மூலமாக தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மது இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார். மேலும் வித்தியாசாகர் இசை அமைக்க ஒப்புக் கொண்டார். படத்தொகுப்பாளர் ராஜலட்சுமியை இயக்குனர் இப்படம் மூலம் அறிமுகம் செய்தார்.[4][5][6]

கதைச்சுருக்கம்தொகு

ஆதித்யா, மல்லிகா மற்றும் அனுபமா ஆகிய மூவரும் ஒரு சமயத்தில் சந்திக்க நேரிடுகிறது. பின்னர், 13 வயதான தரணி கடத்தப்படுகிறாள். இறுதியில், தரணி எவ்வாறு காப்பாற்றப்பட்டாள் என்பதே மீதிக் கதையாகும்.

இசைதொகு

இப்படத்தின் பின்னணி மற்றும் பாடல் இசையை அமைத்தது வித்தியாசாகர் ஆவார். நா. முத்துக்குமார் மற்றும் பிக் நிக் ஆகியோர் பாடல்களின் வரிகளை எழுதினர். ஐந்து பாடல்கள் கொண்ட தொகுப்பு நேர்மறையான விமர்சனத்தை பெற்றது.[7]

பாடல்களின் பட்டியல்:

 1. வாடா வாடா
 2. இரு இதயம்
 3. ஒருதுளி இருதுளி
 4. யார் இந்த
 5. இந்தப் பக்கம்.

மேற்கோள்கள்தொகு

 1. "http://www.indiaglitz.com/channels/tamil/article/68993.html". External link in |title= (உதவி)
 2. "http://www.behindwoods.com". External link in |title= (உதவி)
 3. "http://www.behindwoods.com". External link in |title= (உதவி)
 4. "http://articles.timesofindia.indiatimes.com". 2012-03-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); External link in |title= (உதவி)
 5. "http://www.deccanchronicle.com". 2012-03-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); External link in |title= (உதவி)
 6. "http://www.indiaglitz.com". External link in |title= (உதவி)
 7. "http://behindwoods.com/". External link in |title= (உதவி)

வெளி-இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_திருப்பங்கள்&oldid=3269052" இருந்து மீள்விக்கப்பட்டது