மிடில் கிளாஸ் மாதவன்
மிடில் கிளாஸ் மாதவன் (Middle Class Madhavan) 2001 இல் வெளியான காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ஓர் தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கஜேந்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, அபிராமி, வடிவேலு,விவேக், விசு, டெல்லி கணேஷ் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது தினா இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இது தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.
மிடில் கிளாஸ் மாதவன் | |
---|---|
இயக்கம் | டி. பி. கஜேந்திரன் |
தயாரிப்பு | கே. ஆர். கங்காதரன் |
இசை | தினா[1] |
நடிப்பு | பிரபு அபிராமி வடிவேலு விவேக் டெல்லி கணேஷ் விசு |
ஒளிப்பதிவு | ரகுநாத் ரெட்டி |
வெளியீடு | சனவரி 1, 2001 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- பிரபு - மாதவன்
- அபிராமி - அபிராமி
- வடிவேலு - குழந்தைவேலு
- விவேக் - மணிமாறன்
- விசு
- டெல்லி கணேஷ்
- ரேவதி சங்கரன்
- இராதிகா சௌத்ரி
- தாரிணி
- சியாம் கணேஷ்
- கண்ணையா - குழந்தைவேலுவின் அப்பாவாக
- சண்முகசுந்தரி - குழந்தைவேலுவின் அம்மாவாக
- காகா இராதாகிருஷ்ணன் - மணிமாறனின் தாத்தா
- ஜோதிலட்சுமி - மணிமாறனின் பாட்டி
- டி. பி. கஜேந்திரன் - அவராகவே (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள் தொகு
எண் | பாடல் | பாடியவர் |
---|---|---|
1 | என் சக்சஸ் தெரியாதா | ஹரிணி |
2 | அம்மா அம்மா | ஸ்ரீநிவாஸ், ஹரிணி |
3 | அம்மம்மா தாங்காது | ஹரிஹரன், சுஜாதா |
4 | பக்கம் நிக்கும் நிலா | மனோ, அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி |
5 | மாப்பிள்ளை ஒட்ட | மலேசியா வாசுதேவன், ரேவதி சங்கரன், சுவர்ணலதா |