கே. ஆர். கங்காதரன்

திரைப்பட தயாரிப்பாளர்

கே. ஆர். ஜி என்று பிரபலமாகக் குறிப்பிடப்பட்ட கே. ஆர் கங்காதரன் (K. R. Gangadharan, 1936–2012) ஒரு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளராவார். இவர் 'கே. ஆர். ஜி புரொடக்சன்ஸ்', 'கே. ஆர். ஜி ஆர்ட் புரொடகசன்ஸ்', 'கே. ஆர். ஜி எண்டர்பிரைசஸ்', 'கே. ஆர். ஜி மூவிஸ் இன்டர்நேசனல்' போன்ற பதாகைகளின் கீழ் தமிழ், மலையாள மொழிகளில் 60 க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தார்.

கே. ஆர். கங்காதரன்
பிறப்புகே. ஆர். கங்காதரன்
1936
இறப்பு19 சூன் 2012(2012-06-19) (அகவை 76) [1]
இந்திய ஒன்றியம், சென்னை
தேசியம்இந்தியர்
பணிதயாரிப்பாளர்

திரைப்பட வாழ்க்கை

தொகு

இவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சபையின் நிறுவனர் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தவர். அந்த வர்த்தக சபையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், படப்பிடிப்பு அரங்க உரிமையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.[2]

இறப்பு

தொகு

கே. ஆர். ஜி 19 சூன் 2012 அன்று தன் 76 வயதில் இறந்தார். உடல் நலக்குறைவால் இவர் சென்னை, தி. நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் தேறிவந்தார். மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு செல்லவிருந்தபோது, சரிந்து விழுந்து, விரைவில் இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் மகள் இருந்தனர்.

பகுதி திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் மொழி குறிப்புகள்
1975 ஆயிரத்தில் ஒருத்தி தமிழ்
1978 சிகப்பு ரோஜாக்கள் தமிழ்
1980 ஜானி தமிழ்
1981 கடல் மீன்கள் தமிழ்
1982 அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை தமிழ்
1983 துடிக்கும் கரங்கள் தமிழ்
1984 திருப்பம் தமிழ்
1984 ஆலய தீபம் தமிழ்
1985 நேர்மை தமிழ்
1986 தாய்க்கு ஒரு தாலாட்டு தமிழ்
1987 காவலன் அவன் கோவலன் தமிழ்
1988 சங்கம் மலையாளம்
1989 அதிபன் மலையாளம்
1989 சகலகலா சம்மந்தி தமிழ்
1989 வடக்குனொக்கியந்த்ரம் மலையாளம்
1989 வரவெல்பு மலையாளம்
1989 வர்ணம் மலையாளம்
1990 லால்சலாம் மலையாளம்
1990 ஒலியம்புகல் மலையாளம்
1991 நீலகிரி மலையாளம்
1992 சிவந்த மலர் தமிழ்
1993 பார்வதி என்னை பாரடி தமிழ்
1999 மின்சார கண்ணா தமிழ்
2000 சுதந்திரம் தமிழ்
2000 பட்ஜெட் பத்மநாபன் தமிழ்
2001 மிடில் கிளாஸ் மாதவன் தமிழ்
2001 மனதை திருடிவிட்டாய் தமிழ்
2009 குரு என் ஆளு தமிழ்

குறிப்புகள்

தொகு
  1. "Film producer KRG dead - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014.
  2. "Events - K R Gangadharan Is SIFCC Chief". indiaglitz.com. Archived from the original on 17 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._கங்காதரன்&oldid=4167006" இலிருந்து மீள்விக்கப்பட்டது