சிகப்பு ரோஜாக்கள்

சிகப்பு ரோஜாக்கள் (Sigappu Rojakkal) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிகப்பு ரோஜாக்கள்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஜே.பத்மாவதி
கதைபாரதிராஜா
வசனம்பாக்யராஜ்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
ஒளிப்பதிவுபி. எஸ். நிவாஷ்
படத்தொகுப்புபி. பாஸ்கரன்
கலையகம்கே. ஆர். ஜி. புரொடக்ஷன்ஸ்
விநியோகம்கே. ஆர். ஜி. புரொடக்ஷன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 28, 1978 (1978-10-28)
நாடு இந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா என மூன்று மாநிலத்திலும் வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ் திரைப்படமாகும். கமல்ஹாசன் அவர்கள் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். பாரதிராஜா அவர்கள் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். இந்தி மொழியில் 'ரெட் ரோஸ்' எனும் பெயரில் 1980 ஆண்டில் ராஜேஷ் கன்னா நடிப்பில் இயக்குநர் பாரதிராஜா மீண்டும் படமாக்கினார்.[1]

கதைதொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வியாபாரத்தில் ஈடுபடுபவனாக இருக்கும் திலீப் (கமல்ஹாசன்)இரவு நேரங்களில் பெண்களைக் கண்டால் மனநோயாளிபோன்றதொரு தோற்றம் பெறுகின்றான். தனது வேலைத்தளத்திலோ மற்றும் பல இடங்களிலும் தனது மனதிற்குப் பிடித்துப் போகும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அவர்களை கொலை செய்வதனையும் பழக்கதோஷமாகக் கொண்டிருந்தான் திலீப். சிறுவயதில் பெண்ணொருவரால் பாலியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகும் திலீப் பின்னர் பெண்களைக் கண்டால் வெறுப்பு ஏற்பட்டு அவர்களைக் கற்பழித்துக் கொலையும் செய்வதனையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றான். இவ்வாறு செய்யும் காட்சிகளைப் படமாக எடுத்துக் கொண்டும் இருப்பார் இவரின் வளர்ப்புத் தந்தையும் இவனது காவலாளியும். இப்படியே ஒவ்வொரு பெண்ணாக கற்பழித்துப் பின் கொலை செய்து மண்ணுக்கடியில் மூடுவதுமாகவிருந்த திலீப் சாரதாவைச் (ஸ்ரீதேவி) சேலை விற்கும் கடையில் சந்திக்கின்றான். அவளை மனதார விரும்பவும் ஆரம்பிக்கின்றான். இதனை அவளிடம் தெரிவித்து பின்னர் அவளை மணப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. இதற்கிடையில் திலீப்பின் வீட்டில் தங்கியிருக்கும் சாரதா திலீப் எழுதிவந்த ஒன்றைத் தற்செயலாகக் கண்டெடுக்கின்றாள். பின்னர் திலீப்பைப் பற்றிய கதையினைக் கேட்டு அறிந்து கொள்ளும் சாரதா திடுக்கிட்டுப் போகின்றாள். மேலும் மழை பெய்த காரணத்தால் மண்ணுக்கடியில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் கைகள் தெரிவதனையும் காண்கின்றாள். பின்னர் திலீப்பின் வளர்ப்புத் தந்தையும் அவன் காவலாளியும் கற்பழிக்கப்பட்டவர்களினைப் பற்றி திரைப்படம் பார்ப்பதனையும் பார்த்து விடுகின்றாள் சாரதா. அவ்வளவு தான் தாமதம் அங்கிருந்து ஓடியே செல்கின்றாள் இதனை அறிந்து கொள்ளும் திலீப் அவளைத் துரத்திச் செல்கின்றான். ஆனால் இறுதியில் காவல்துறையினரால் கைதும் செய்யப்படுகின்றான்.

நடிகர்கள்தொகு

தயாரிப்புதொகு

இத்திரைப்படம் மொத்தம் 20 நாட்களில் படமாக்கப்பட்டது. 1960களில் வடஇந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட ராமன் ராகவா எனும் நபரின் கொலை வழக்கு தனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், பின் அத்தாக்கத்தின் அடிப்படையில் சிகப்பு ரோஜாக்கள் கதை உருவாக்கப்பட்டது என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.[2]

பாடல்கள்தொகு

இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு பாடல் இசை இயற்றியுள்ளார். இப்படத்தின் பின்னணி இசையை பத்தாயிரம் ரூபாய் செலவில், ஒன்றரை நாளில் முடித்துக்கொடுத்தார்.[3]

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 இந்த மின்மினிக்கு மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி கண்ணதாசன் 4:28
2 நினைவோ ஒரு பறவை கமல்ஹாசன், எஸ். ஜானகி வாலி 4:45

வெளியீடும் விமர்சனங்களும்தொகு

இத்திரைப்படம் 28 அக்டோபர் 1978 அன்று வெளியானது. தீபாவளி பண்டிகை ஒட்டி மொத்தமாக 11 தமிழ் திரைப்படங்கள் வெளியானது, அதில் கமல் நடித்த மனிதரில் இத்தனை நிறங்களா, அவள் அப்படித்தான் கௌரவ தோற்றத்தில் நடித்த தப்பு தாளங்கள் போன்ற படங்களும் அடங்கும். சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.[4] இத்திரைப்படம் ஹிந்தியில் ரெட் ரோஸ் என மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆனந்த விகடன் பத்திரிக்கை இப்படத்திற்கு 100க்கு 53 மதிப்பெண் வழங்கி பாராட்டியது.

மேற்கோள்கள்தொகு

  1. "மறக்க முடியுமா? - சிகப்பு ரோஜாக்கள்". தினமலர். 17 மே 2020. 7 அக்டோபர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "20 நாளில் 'சிகப்பு ரோஜாக்கள்' எடுத்தேன்; அந்த பங்களாவுக்காக அலைந்தேன்; கறுப்புப் பூனைக்காக கேஸ் போட்டார்கள்! - இயக்குநர் பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' சுவாரஸ்யங்கள்". இந்து தமிழ். 7 அக்டோபர் 2020. 7 அக்டோபர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "சைக்கோ கில்லர்; ஸ்டைலீஷ் கமல்; அழகு ஸ்ரீதேவி; 20 நாளில் படம்; ஒன்றரை நாளில் பின்னணி இசை! - 42 ஆண்டுகளாகியும் இன்னும் மிரட்டும் 'சிகப்பு ரோஜாக்கள்'!". இந்து தமிழ். 28 அக்டோபர் 2020. 28 அக்டோபர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  4. "மேல் நாடுகளில் இந்தியாவின் மானம் பறந்தன!". தினமலர். 14 ஆகஸ்ட் 2017. 2019-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 அக்டோபர் 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகப்பு_ரோஜாக்கள்&oldid=3645958" இருந்து மீள்விக்கப்பட்டது