புஷ்பவனம் குப்புசாமி

(பூவனம்) புஷ்பவனம் குப்புசாமி

புஷ்பவனம் குப்புசாமி என்றறியப்படும் குப்புசாமி ஓர் இந்திய நாட்டுப்புறப் பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். தம் மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள்[1] என்னும் கிராமியப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடவல்லவர்.[2] தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குகிறார். சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.[3]

புஷ்பவனம் குப்புசாமி
இயற்பெயர்குப்புசாமி
பிறப்பிடம்தமிழ்நாடு,  இந்தியா
இசை வடிவங்கள்நாட்டுப்புறப் பாடகர், பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர்

பிறப்பும் கல்வியும்

தொகு

குப்புசாமி தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இளம் அறிவியலில் விலங்கியல் பட்டம் பெற்றார். பின்னர் குப்புசாமி சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். இவருக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் இசையில் ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் பாடகியான அனிதாவை மணந்தார்.[2]

இசை வாழ்க்கை

தொகு

இவர் தனது மனைவியுடன் அனிதாவுடன் சேர்ந்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சுமார் 3000 நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[4] இவர் தனது இசையின் மூலம் சமூக செய்திகளை இணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அறியப்படுகிறார்.[5]

இளையராஜா, வித்தியாசாகர், யுவன் சங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பல பிரபல இசை அமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படப் பாடல்களைப் குப்புசாமி பாடியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் இளையோர் நிகழ்ச்சிகளில் நடுவர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளார் குப்புசாமி.

குப்புசாமியின் பாடல்கள் தமிழ் கலாச்சாரத்தின் படிமங்களை எளிய வார்த்தைகளில் அழகாக வெளிப்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.[1][6]

பாடிய பாடல்கள்

தொகு

பக்திப் பாடல்கள் தொகுப்பு

தொகு
  • அன்புமலை அழகன்
  • சுவாமியே
  • ஆத்தா வாரா
  • கந்தன் திருநீறு
  • மேகம் கருக்குதாடி
  • அய்யனின் பெரிய பாதை

நாட்டுப்புறப் பாடல்கள்

தொகு
  • மண்ணு மணக்காடு பாடல்
  • மண் வாசம்
  • மண் ஓசை
  • கரிசல் மண்
  • சோளம் விதைக்கயிலே
  • மேகம் கருக்குதாடி
  • களத்து மேடு
  • ஊர்க்குருவி
  • கிராமத்து கீதம்
  • காட்டுமல்லி
  • அடியாத்தி டான்சு டான்சு
  • ஒத்தையடிப்பாதையிலே
  • தஞ்சாவூர் மண்ணெடுது
  • நாட்டுப்புற மனம்

திரைப்படப் பாடல்கள்

தொகு
  • ஆளான நாள் முதலா...
  • நான் ரெடி நீங்க ரடியா...

நடித்த திரைப்படங்கள்

தொகு

புத்தகங்கள்

தொகு
  • மக்களிசைப்பாடல்கள்
  • சிறுவர் பாடல்கள்
  • பழமொழிக்கதைகள் தொகுதி 1 & 2
  • விடுகதைகள்
  • குழந்தைப்பாடல்கள் தொகுதி 1

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Sherinian, Zoe C. (2014-01-06). Tamil Folk Music as Dalit Liberation Theology (in ஆங்கிலம்). Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-253-00585-4.
  2. 2.0 2.1 "Transcending boundaries" (in en-IN). The Hindu. 6 July 2009. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/transcending-boundaries/article637877.ece. 
  3. "Welcome to Navarasam Website". www.lakshmansruthi.com. Archived from the original on 2021-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-11-28.
  4. "My First Break – Anitha Kuppusamy" (in en-IN). The Hindu. 28 August 2009. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/my-first-break-anitha-kuppusamy/article3021858.ece. 
  5. "Pushpavanam Kuppuswamy| Lakshman Sruthi – 100% Manual Orchestra |". www.lakshmansruthi.com. Archived from the original on 28 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-28.
  6. "Narrating the power of Tamil folk poetry through songs, dance". DT Next (in ஆங்கிலம்). 2019-12-17. பார்க்கப்பட்ட நாள் 2023-12-23.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பவனம்_குப்புசாமி&oldid=3908096" இலிருந்து மீள்விக்கப்பட்டது