வீடு மனைவி மக்கள்

டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வீடு மனைவி மக்கள் (Veedu Manaivi Makkal) திரைப்படம் 1988-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்க என். ராதாவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் விசு, கே. ஆர். விஜயா, பாண்டியன், சீதா, எஸ். வி. சேகர் ஆகியோர் நடித்திருந்தனர்.

வீடு மனைவி மக்கள்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
தயாரிப்புஎன். ராதா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிசு
கே. ஆர். விஜயா
பாண்டியன்
சீதா
எஸ். வி. சேகர்
ஒளிப்பதிவுபேபி பிலிப்ஸ்
படத்தொகுப்புஎன்.ஆர். கிட்டு, கணேஷ் குமார்
வெளியீடு15 ஜனவரி 1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

கதைச்சுருக்கம்

தொகு

சுப்பையா பிள்ளை (விசு) ஓர் அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். அவரும், அவரது மனைவி லட்சுமி, கணவனை பிரிந்து வாடும் மூத்த மருமகள் பார்வதி, கல்யாணமாகாமல் இருக்கும் முதல் மகள் சுலக்ஷனா, வேலை கிடைக்காமல் இருக்கும் இரண்டாவது மகன் சங்கர், கடைசி மகள் உமா ஆகியோருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், சுப்பையா பிள்ளை தன் குடும்ப உறுப்பினர்களுக்கும், சுற்றியிருக்கும் சக மக்களுக்கும் உள்ள பிரச்சனைகளை எவ்வாறு அணுகி தீர்த்து வைக்கிறார் என்பதே கதை களமாகும். எஸ். வி. சேகர் இப்படத்தில் ஒரு முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு

தொகு

வீடு மனைவி மக்கள், டி. பி. கஜேந்திரன் அவர்களின் முதல் படமாகும். விசுவின் பாணிக்கு[சான்று தேவை] ஏற்றவாறு எழுதப்பட்ட கதையாகும். இப்படத்தின் இறுதி ஒளிநாடாவின் நீளம் 4117.32 மீட்டர்கள் ஆகும்.[1]

திரைப்படத்தின் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆவார்கள்.[2][3]

வரிசை

எண்

பாடல் பாடகர்(கள்) பாடல் ஒலிக்கும் நேரம்
1 காதல் காதல் கே. ஜே. யேசுதாஸ் 03:13
2 செங்கல்லை தூக்குற மலேசியா வாசுதேவன், உமா ரமணன் 03:15
3 நம் வீடுதான் மனோ 04:57
4 வீடு மனைவி மக்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:05
5 தொட்டதெல்லாம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:00

வெளியீடு மற்றும் வரவேற்பு

தொகு

15 ஜனவரி 1988-ல் வீடு மனைவி மக்கள் திரைப்படம் வெளியானது. வெளியான அடுத்த வாரம், இப்படம் விசுவின் முந்தயப்படங்களை (குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு (திரைப்படம்), சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி) போலவே இருப்பதாகவும், மேலும் கே. ஆர். விஜயாவின் நடிப்பு அருமையாக இருந்ததாகவும், என். கிருஷ்ணஸ்வாமி இந்தியன் எக்சுபிரசில் விமர்சனம் செய்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. https://cinema.dinamalar.com/tamil-news/24284/cinema/Kollywood/T.P.-Gajendran-alert-for-future.htm
  2. http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=9521&id1=3&issue=20151026
  3. http://movies.syzygy.in/censor/veedu-manaivi-makkal-celluloid பரணிடப்பட்டது 2018-03-20 at the வந்தவழி இயந்திரம்
  4. https://cinema.vikatan.com/tamil-cinema/interview/136610-t-p-gajendran-speaks-about-his-cinema-career-for-appo-ippo-series.html
  5. https://www.saavn.com/s/album/tamil/Veedu-Manaivi-Makkal-2014/VUZRxAmxfoY_

வெளியிணைப்புகள்

தொகு
  1. "Veedu Manaivi Makkal (Celluloid)". movies.syzygy.in. Archived from the original on 20 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Veedu Manaivi Makkal". Saavn. பார்க்கப்பட்ட நாள் 17 October 2018.
  3. "Veedu Manaivi Makkal (1988)". Music India Online. Archived from the original on 16 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Krishnaswamy, N. (22 January 1988). "In the 'family way' again". இந்தியன் எக்சுபிரசு: p. 5. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880122&printsec=frontpage&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீடு_மனைவி_மக்கள்&oldid=3703095" இலிருந்து மீள்விக்கப்பட்டது