நாடோடிப் பாட்டுக்காரன்
நாடோடிப் பாட்டுக்காரன் (Nadodi Pattukkaran) இயக்குனர் என். கே. விசுவநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், மோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 16-மே-1992. முட நாயக்குடு என்ற பெயரில் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.[1][2]
நாடோடிப் பாட்டுக்காரன் | |
---|---|
இயக்கம் | என். கே. விசுவநாதன் |
தயாரிப்பு | எஸ். எம். மீனாட்சி |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் மோகினி ஜெய்சங்கர் பீலி சிவம் தியாகு சின்னி ஜெயந்த் எம். என். நம்பியார் ராக்கி எஸ். பி. பாலசுப்ரமணியம் எஸ். எஸ். சந்திரன் செந்தாமரை செந்தில் அன்னபூர்ணா எஸ். என். பார்வதி |
ஒளிப்பதிவு | என். கே. விஸ்வநாதன் |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
வெளியீடு | மே 16, 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுகார்த்திக், மோஹினி, ஜெய்சங்கர், மா. நா. நம்பியார், எஸ். எஸ். சந்திரன், ராக்கி, செந்தில், விவேக், சார்லி, சின்னி ஜெயந்த், தியாகு, மண்ணாங்கட்டி சுப்பிரமணியம், செந்தாமரை, வி. கோபாலகிருஷ்ணன், பீலி சிவம், சுந்தர், கருப்பு சுப்பையா, குள்ளமணி, மாஸ்டர் கண்ணன், மாஸ்டர் அருண், காந்திமதி, விஜயா, பார்வதி, அன்னபூர்ணா, விஜிய சந்திரிகா, தளபதி தினேஷ்.
கதைச்சுருக்கம்
தொகுசுந்தரம், தேவர் அய்யா, பெரிய மதுரை, சீடன், வடிவேலு, அண்ணாமலை ஆகியோர் ஓர் இசை குழுவாக பணியாற்றி வந்தார். படித்த பட்டதாரியான சுந்தரத்திற்கு வேலை கிடைக்காததால், இசை குழுவில் சேர்ந்து பாடல்கள் பாடி வருமானம் ஈட்டினான். தங்களது குடும்பத்தை விட்டு, கிராமம் கிராமமாக சென்று கச்சேரி நடத்தினர்.
அவ்வாறாக ஒருநாள், இவர்கள் செல்லும் கிராமம் ஒன்றில், கொள்ளையர்கள் அச்சுறுத்தினர். அவர்களை போலீசில் இசைக் குழுவினர் பிடித்துக் கொடுத்தனர். அதனால், குறைந்த நாட்களிலேயே, அந்த இசைக் குழு மிகவும் பிரபலம் ஆனது. அந்த கிராமத் தலைவரின் மகள் கீதா (மோஹினி) சுந்தரத்தை விரும்பினாள். பின்னர், கீதாவின் காதலை ஏற்றுக்கொண்டான் சுந்தரம். ஆனால், கீதாவின் குடும்பம் அக்காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. கீதா - சுந்தரம் திருமணம் நடந்ததா என்பதே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
தொகுஏழு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1992 ஆம் ஆண்டு வெளியானது. இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்தார். வாலி, முத்துலிங்கம், கங்கை அமரன், நா. காமராசன், பிறைசூடன், பரிணாமன் ஆகியோர் இப்படத்தின் பாடலாசிரியர்கள் ஆவர்.[3][4]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "ஆகாயத் தாமரை" | இளையராஜா, எஸ். ஜானகி | வாலி | 4:57 |
2 | "காதலுக்கு கண்களில்ல" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா | முத்துலிங்கம் | 5:00 |
3 | "மண்ணையும் பொன்னையும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | 5:48 |
4 | "வாங்க வாங்க" | மலேசியா வாசுதேவன், மனோ, ரமணி, டி. எஸ். இராகவேந்திரா | பிறைசூடன் | 5:09 |
5 | "வனமெல்லாம் செண்பகப்பூ" (தனி) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 5:11 |
6 | "வனமெல்லாம் செண்பகப்பூ" (காதல் பாடல்) | பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:21 | |
7 | "தென்பாண்டிச் சீமை" | கங்கை அமரன் | பரிணாமன் | 4:34 |
8 | "சித்திரத்துத் தேரே வா" | மனோ, சுவர்ணலதா | நா. காமராசன் | 4:48 |
வரவேற்பு
தொகுஇளையராஜாவின் சில பாடல்களும், இயக்கமும், கார்த்திக்கின் நடிப்பும் நன்றாக இருந்தது என்றும், ஒளிப்பதிவு சுமாராக அமைந்தது என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "http://spicyonion.com/movie/naadodi-paatukaraen/".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "www.youtube.com".
- ↑ "mio.to".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "www.hummaa.com". Archived from the original on 2013-01-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-03.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "The New Indian Express".