எஸ். என். பார்வதி

நடிகை

எஸ். என். பார்வதி (S. N. Parvathy) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலான படங்களில் தாய் வேடங்களில் நடித்துள்ளார். பிரபல திரைப்படங்களான அனுபவி ராஜா அனுபவி, பசி, பலைவானச்சோலை, ஆகாய கங்கை, எங்க ஊரு பாட்டுக்காரன், அண்ணாநகர் முதல் தெரு, சின்ன மாப்ளே போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது முதல் படம் 1965 ஆம் ஆண்டில் வெளியான பணம் தரும் பரிசு ஆகும். இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களிலும் 5000 நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் 1985 இல் கலைமாமணி விருது பெற்றார்.[1]

S. N. Parvathy
பிறப்புபார்வதி
பர்மா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை, நாடக நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1965 – தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்பசி
பாலைவனச்சோலை
ஆகாயகங்கை அருவி
எங்க ஊரு பாட்டுக்காரன்
சின்ன மாப்ளே
சொந்த ஊர்பரமக்குடி, இராமநாதபுரம்
வாழ்க்கைத்
துணை
சாரங்கன்
பிள்ளைகள்2
விருதுகள்கலைமாமணி விருது, கலைச்செல்வம்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பார்வதியின் சொந்த ஊர் பரமக்குடி, என்றாலும் இவர் பர்மாவில் பிறந்தார். பார்வதியின் தந்தை நாகசுந்தரம், தாய் வள்ளியம்மாள். இவர் 1958 இல் நாடகங்களில் நடிக்க வந்தார். இவர் நடித்த முதல் நாடகம் தீர்பு என்பதாகும். பி. ஏ. கிருஷ்ணன் இவரது நாடக குரு ஆவார். அவர்தான் இவரை நடிகையாக்கியது. அதன் பிறகு, நாடக உலக தந்தை டி. கே. சண்முகம் அண்ணாச்சியுடன் 5000 க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை]

திரைப்பட வாழ்க்கை

தொகு

இவர் ஒரே நாளில் ஏழு நாடகங்களில் நடித்துள்ளார். இவர் தனது 13 வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ஏ. வி. எம். ராஜன் குழுவிலிருந்து காத்தாடி ராமமூர்த்தியின் குழு வரை பல நாடகங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் பணம் தரும் பரிசு படத்தில் தாயாக நடித்தார். அந்த நேரத்தில், இவருக்கு 17 வயதுதான். இவர் பசி படத்தில் நடிக்கும் வரை இவரது வாழ்க்கை கஷ்டத்திலேயே இருந்தது. அப்போதிருந்து, இவர் ஒரு சிறந்த துணை நடிகையாக மாறிவிட்டார்.[2][3][4]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் நாடகத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது 1961 இல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் சாரங்கன் என்பவராவார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் ஒரு பொறியாளர், மகள் இயங்கியல் மருத்துவர்.[சான்று தேவை]

விருதுகள்

தொகு

இவர் தமிழக அரசின் கலைமாமணி மற்றும் கலைசெல்வம் விருதுகளைப் பெற்றவர்.[5]

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தொடர் பாத்திரம் தொலைக்காட்சி அலைவரிசை
1999-2000 சொந்தம் பொதிகை தொலைக்காட்சி
2004-2006 அகல்யா சன் தொலைக்காட்சி
கணவருக்காக சன் தொலைக்காட்சி
2008 மணிக்கூண்டு ரசாம
2010–2013 முந்தானை முடிச்சு மீனாட்சி
2018 - தற்போது ஈரமான ரோஜாவே பாப்பமாள் விஜய் தொலைக்காட்சி
2019 - தற்போது பாண்டவர் இல்லம் பட்டம்மாள் சன் தொலைக்காட்சி
2020 சித்தி–2 சாரதா மற்றும் பத்மாவின் தாய்

திரைப்படவியல்

தொகு

இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமை. நீங்கள் இதை விரிவாக்கலாம்.

1960 கள்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1965 பணம் தரும் பரிசு அறிமுகம்
1967 பாமா விஜயம் பார்வதியின் தாய்
1967 அனுபவி ராஜா அனுபவி தங்கமுத்தைக் காப்பவர்
1967 பால் மனம்
1968 நீலகிரி எக்ஸ்பிரஸ் சபாபதியின் மனைவி
1968 கலாட்டா கல்யாணம் ரஞ்சிதம், நாடக நடிகை
1968 கணவன்
1968 உயர்ந்த மனிதன்
1969 கண்ணே பாப்பா

1970 கள்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1970 திருமலை தென்குமரி
1970 எங்க மாமா
1970 சினேகிதி
1971 சுமதி என் சுந்தரி பார்வதி
1971 தெய்வம் பேசுமா
1971 புன்னகை
1971 ஜஸ்டிஸ் விஸ்வநாதன்
1972 நவாப் நாற்காலி
1972 நான் ஏன் பிறந்தேன்
1972 வழையடி வாழை
1972 பொன்மகள் வந்தாள்
1973 சூரியகாந்தி பார்வதி, ராதாவின் தாய்
1973 பிரார்த்தனை
1973 ராஜ ராஜ சோழன்
1973 திருமலை தெய்வம்
1973 சொந்தம்
1974 அன்பைத்தேடி
1974 பிரயாசித்தம்
1974 பந்தாட்டம்
1974 குலகௌரவம்
1975 சினிமாப் பைத்தியம் ஆசிரியர்
1975 அந்தரங்கம்
1977 சக்ரவர்த்தி
1977 ஸ்ரீ கிருஷ்ணலீலா
1978 வணக்கத்திற்குரிய காதலியே
1979 மந்தோப்பு கிளியே
1979 நான் வாழவைப்பேன்
1979 இமயம்
1979 வீட்டுக்கு வீடு வாசப்படி
1979 பசி ராக்காமா

1980 கள்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1980 எமனுக்கு எமன்
1980 குமரி பெண்ணின் உள்ளத்திலே
1980 பொன்னகரம்
1981 நண்டு உமாவின் தாய்
1981 ஒருத்தி மட்டும் கரைனிலே
1981 காதோடுதான் நான் பேசுவேன்
1981 கிளிஞ்சல்கள்
1981 பலைவனச்சோலை
1981 சுமை
1981 மீண்டும் கோகிலா
1982 பரிட்சைக்கு நேரமாச்சு
1982 அகாய கங்கை
1982 ராணித்தேனீ
1982 சகலகலா வல்லவன்
1982 அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை
1982 கல்யாணக் காலம்
1982 ரூபி மை டார்லிங் மலையாள படம்
1983 வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்
1983 இளமை காலங்கள்
1986 மேல்மருவத்தூர் அற்புதங்கள்
1986 கோடை மழை
1986 நான் அடிமை இல்லை பணிப்பெண்
1987 கிருஷ்ணன் வந்தான்
1987 எங்க ஊரு பட்டுக்காரன் சென்பகம்
1987 ஊர்க்காவலன்
1988 செண்பகமே செண்பகமே
1988 அண்ணாநகர் முதல் தெரு
1988 சத்யா ராதாவின் மாமியார்
1988 சகாதேவன் மகாதேவன்
1989 உத்தம புருஷன்

1990 கள்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1990 பாலைவன பறவைகள்
1990 அதிசயப் பிறவி காளையனின் தாய்
1990 கிழக்கு வாசல்
1990 நீங்களும் ஹீரோதான்
1990 13-ம் நம்பர் வீடு பார்வதி
1991 கும்பக்கரை தங்கய்யா
1992 நாடோடிப் பாட்டுக்காரன்
1992 அண்ணாமலை
1993 சின்ன மாப்ளே
1993 மாமியார் வீடு
1993 வேடன்
1994 மனசு ரெண்டும் புதுசு
1997 தெம்மாங்கு பாட்டுக்காரன்
1997 விவசாயி மகன்

2000 கள்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2001 டும் டும் டும்
2001 ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ராஜேஸ்வரியின் பாட்டி
2002 பம்மல் கே. சம்மந்தம்
2006 குருச்சேத்திரம்
2007 வீரசாமி வீரசாமியின் தாய்

குறிப்புகள்

தொகு
  1. "All you want to know about #SNParvathi". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-15.
  2. ""குப்பைக் கீரை கடைஞ்சா ஆசையா சாப்பிடும்!" - மனோரமா பற்றி பார்வதி". vikatan. பார்க்கப்பட்ட நாள் 2020-02-15.
  3. Dinamalar (2017-02-17). "பிளாஷ்பேக்: அகதியாக வந்து நடிகை ஆனவர் | Flashback : How Actress SN Parvathi turn as actress". Dinamalar Cinema. பார்க்கப்பட்ட நாள் 2020-02-15.
  4. "உயர்ந்த மனிதன் - 50: வெட்கப்பட்ட கதாநாயகிகள்!". Hindu Tamil Thisai (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-15.
  5. "எனக்கு இரண்டாவது முறை 'கலைமாமணி' விருதா? - குழப்பத்தில் நடிகை எஸ்.என்.பார்வதி". vikatan. பார்க்கப்பட்ட நாள் 2020-02-15.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._என்._பார்வதி&oldid=4114553" இலிருந்து மீள்விக்கப்பட்டது