நவாப் நாற்காலி
நவாப் நாற்காலி (Nawab Naarkali) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் இப்படம் வெளிவந்தது கோமல் சுவாமிநாதன் என்பவர் கதையை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி ,நாகேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் ரமாபிரபா, வி. கே. ராமசாமி, எஸ். வி. சகஸ்ரநாமம், மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2] கோமல் சுவாமிநாதனால் இதே பெயரில் எழுதப்பட்ட நாடகத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
நவாப் நாற்காலி | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | கே. பாலகிருஷ்ணன் விஜய் பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் லட்சுமி |
வெளியீடு | மார்ச்சு 3, 1972 |
நீளம் | 4160 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுஅப்பளம் விற்கும் வியாபாரியான அப்பாசாமிக்கும் (வி. கே. ராமசாமி) அவரது மனைவி பாக்யத்திற்கும் (எஸ். என். பார்வதி) பிள்ளைகள் இல்லை. காற்பந்து விளையாடும் ஒரு சட்டக் கல்லூரி மாணவனான ரவி (ஜெய்சங்கர்), பகுதி நேரமாக, வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகிப்பது, மற்றும் ஆசிரியராகவும் பணியாற்றி தனது கல்வி மற்றும் விடுதி செலவுகளை ஈடு செய்து கொள்கிறான்.
தாண்டவம் (எஸ். வி. சகஸ்ரநாமம்), அவரது மனைவி (காந்திமதி), மகன் சுப்பு (நாகேஷ்) மற்றும் ஒன்பது பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பத்துடன் வசித்து வருகிறார். காஞ்சனா (லட்சுமி) அவரது தந்தை ராஜவேலுவுடன் (வி. எஸ். ராகவன்) வாழ்கிறார். அவரது மேலாளர் நேசமணி பொன்னையா (ஏ.ஆர். சீனிவாசன்). ராஜவேலு ஏதும் அறியாத அப்பாவி. நேசமணி பொன்னையாவால் வழங்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாயை கொல்கத்தா அரண்மனை விடுதியில் தொலைத்து விடுகிறார். செவிலி கிறிஸ்டி (ராமபிரபா) ராஜவேலுவை கவனித்து வருகிறார். ஒரு நாள், சுப்பு ஆங்கிலத் திரைப்படம் பார்ப்பதற்காக 25 ரூபாயை தனது தந்தையிடம் கேட்கிறான். ஆனால் அவர் மறுத்துவிடுகிறார். எனவே, சுப்பு தனது வீட்டிலுள்ள பழைய நாற்காலியை (இது நவாபினுடையது என தனது மனைவிடம் தாண்டவம் கூறியுள்ளார்.) திருடிச் சென்று ஏலத்தில் ரூ.25 க்கு விற்று விடுகிறான். ஏலக்கடைக்காரர் ரூ.250 க்கு அப்பாசாமியிடம் அந்த நாற்காலியை நவாப் வைத்திருந்ததாகவும் அதனால் அவருக்கு நிறைய குழந்தைகள் உண்டாயிற்று எனவும் பொய் சொல்லி விற்று விடுகிறார். அப்பாசாமி அந்த நாற்காலியை வீட்டிற்கு எடுத்து வருகிறார்.
இதற்கிடையில், அந்த நாற்காலியை சுப்பு ஏலத்தில் விற்றதையும், பின்னர் அது, அப்பாசாமியிடம் உள்ளதையும் அறிந்த தாண்டவம் சுப்புவைத் திட்டி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அப்பாசாமியின் வீட்டிலிருந்து எப்படியாவது அந்த நாற்காலியை திருட ஒரு திட்டம் தீட்டுகிறார். அதற்காக, அவர் ஒரு சாமியாரைப் போல வேடமிட்டு அப்பாசாமியிடம், அவர் ஒரு குழந்தையை பெற வேண்டுமென்றால் 10 குழந்தைகளுடன் உள்ள குடும்பத்தை அவரது வீட்டில் வாடகைக்கு வைக்க வேண்டுமெனக் கூறுகிறார். (ஆனால் சுப்புவை வீட்டை விட்டு வெளியேற்றியதை மறந்து விடுகிறார்). இந்த சமயத்தில் ரவி தாண்டவத்தை சந்தித்து தனக்கு வாடகைக்கு வீடொன்று வேண்டுமென கேட்கிறான். ரவியை தனது மகனாக நடிக்க வைத்து ,அனைவரும் அப்பாசாமியின் வீட்டிற்குள் வருகின்றனர். காஞ்சனா, தன்னை அப்பாசாமியின் சகோதரியின் மகள் எனக் கூறிக் கொண்டு அவ்வீட்டிற்குள் வருகிறான். ஏற்கனவே காஞ்சனா, ரவிதான் இரண்டு லட்சத்தை திருடியிருக்க வேண்டும் என சந்தேகம் கொண்டுள்ளாள். அந்த வீட்டிற்குள் வந்த பின்னர்தான் ரவி அந்த இரண்டு லட்ச ரூபாயைத் திருடவில்லை எனத் தெரிய வருகிறது. அவளது சந்தேகம் தற்போது சுப்புவிடமும், அப்பாசாமியின் பக்கமும் திரும்புகிறது. பின்னர், அவர்களும் அப்பாவிகள் என விசாரித்து தெரிந்து கொள்கிறாள். ரவி ஒரு நாள் இரவு மூன்று நபர்கள் நவாபின் நாற்காலியை வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்வதை காண்கிறான். அவன் நாற்காலியையும், ரூபாய் 2 லட்சத்தையும் மீட்க ஒரு நாடகமாடி அந்த நாற்காலியை கிழித்து விடுகிறான். அதில் மறைத்து வைத்த பணம் வெளிவருகிறது. தாண்டவம் அது தனது பணமென்றும் கூறுகிறார். ஆனால் விசாரணையில் அது ராஜவேலுவால் தரப்பட்டது என்கிறார். அதை நம்பாத தாண்டவம், ராஜவேலுவின் வீட்டிற்குச் செல்கிறார். பணம் பறிபோனதை அறிந்த ராஜவேலு பைத்தியாமாகிறார். இத்தனை நாளாக அவர் நடித்து வந்துள்ளார். இது கருப்புப் பணமென்பதால் அரசாங்கத்திடம் ஒப்படைக்க ரவி முடிவெடுக்கிறான். தாண்டவனையும், அவரது குடும்பத்தாரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு அப்பாசாமி கூறுகிறார். ஆனால் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாகக் கேள்விப்பட்டவுடன், அவர் மனதை மாற்றிக்கொண்டு, எல்லோரும் அவருடனேயே தங்கிக்கொள்ளக் கேட்டுக்கொள்கிறார்.
நடிகர்கள்
தொகு- ரவியாக ஜெய்சங்கர்
- ராஜவேலுவின் மகள் காஞ்சனாவாக லட்சுமி
- செவிலி கிருஸ்டியாக ரமா பிரபா
- தாண்டவன் மகன் சுப்பு வாக நாகேஷ்
- ராஜவேலுவாக வி. எஸ். ராகவன்
- தாண்டவமாக எஸ். வி. சகஸ்ரநாமம்
- காந்திமதி
- அப்பாசாமியாக வி. கே. ராமசாமி
- நேசமணி பொன்னையா வாக ஏ. ஆர். சீனிவாசன்
- அப்பாசாமியின் மனைவி பாக்யமாக எஸ். என். பார்வதி
படக் குழு
தொகு- கலை: ராமசாமி
- புகைப்படம்: திருச்சி கே. அருணாச்சலம்
- விளம்பரம்: எலிகன்ட்
- வடிவம்: ஈஸ்வர்
- படக்கலவை: எஸ். ரங்கநாதா, விஜயா லேபாரேட்டரி
- ஒலிப்பதிவு: எம். பி ராமச்சந்திரன்
- ஒலிக் கலவை: ஜே. ஜே. மாணிக்கம்
- நடனம்: பி எஸ். கோபாலகிருஷ்ணன்.
- வெளிப்புறப் படப்பிடிப்பு: பிரசாத் புரக்டஷன்ஸ் .
ஒலிப்பதிவு.
தொகுபாடல்களை கண்ணதாசன் எழுத எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | எழுதியோர் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "சப்பாத்தி சப்பாத்திதான்" | ஏ. எல். ராகவன், எல். ஆர். அஞ்சலி | கண்ணதாசன் | 3:18 |
2 | "பொன்னார் மேனியனே" | எம். எஸ். விஸ்வநாதன் | ||
3 | "யம்மா கண்ணா அதிசயமா" | எல். ஆர். அஞ்சலி | ||
4 | " ஏன்டி கண்ணா அதிசயமா" | |||
5 | "செஞ்சிக் கோட்டையை" | டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி & எஸ். சி. கிருஷ்ணன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nawab Naarkali". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.
- ↑ "Nawab Naarkali". gomolo.com. Archived from the original on 2014-09-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.